744.
|
பொங்கிய
சினவில் வேடன் சொன்னபின், "போவோ
மங்கே; யிங்கிது தன்னைக் கொண்டு போதுமி"
னென்று,
தாமு
மங்கது நோக்கிச் சென்றார்; காவத மரையிற்
கண்டார்
செங்கணே றுடையார் வைகுந் திருமலைச் சாரற்
சோலை. 95 |
(இ-ள்.)
வெளிப்படை. மேன்மேற்பொங்கிய சினமுடைய
வில்லேந்திய வேடனாகிய நாணன் இவ்வாறு சொன்னபின்,
திண்ணனார் "நாம் அங்கே போவோம்; இந்தப் பன்றியினை
எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்லித் தாமும் அதனை
நோக்கிச் சென்றனர். அரைக்காததூரஞ் சென்றபின் செங்கண்
இடபத்தையுடைய சிவபெருமான் எழுந்தருளிய
திருக்காளத்திமலைச்சாரற் சோலைகண்டனர்.
(வி-ரை.)
பொங்கிய சினவில் - வில்லை உடையானது
சினம் வில்லின்மேல் ஏற்றப்பட்டது உபசாரம். சினவேடன் என்று
கூட்டியுரைப்பினுமமையும்.
அங்கே
போவோம் - என மாற்றுக. வினைமுற்று
முன்வந்தது அவரது தீவிரங் குறித்தது. இங்கு இதுதன்னை -
இங்குநின்றும் இப்பன்றியை. இது - அண்மைச்சுட்டு
முன்புகிடந்த
பன்றியைச் சுட்டிற்று. இதுதன்னை - தன் சாரியை
பெற்று
உருபேற்ற சுட்டுப்பெயர்.
கொண்டு
போதுமின் - பன்றியின் உடல் மிகுகனமுடையது.
அச்சாதியுள்ளும் இக்காட்டுப்பன்றி வகை மிகப்பருத்துப்
பெரும்பாரமுடையது என்பர். "பெரும்பன்றி" (791) என்றது காண்க.
விடலைகளாகிய வலிய இருவருங்கூடிச் சுமக்கும் பாரமாதலின்
இவ்விருவரையும் நோக்கிக் கொண்டு போதுமின்
என்றார்.
தாமும்
- ஆவல்கொண்ட தாமும். உம்மை இறந்தது
தழுவியது.
அங்குஅது
- அங்கு - சேய்மைச்சுட்டு.
அப்புறம் சென்றால்
என்று சுட்டிய அவ்விடம். அது - "குன்றினுக்கயலே ஓடும்" என்ற
அப்பொன்முகலி யாறு. அது - நீண்டகுன்று என்றலுமாம்.
நோக்கி - குறித்து - குறிவைத்து. "கண்டு கொண்டே", "நேர்பெற
நோக்கி நின்றார்" (777) என்பவை காண்க.
சென்றார்
- கண்டார் - சென்றதும் கண்டதுமாகிய இவை
விரைவில் முடிந்தன என்பார் இவ் வினைமுற்றுக்களை அடுத்து
வைத்துக் கூறினார். இச்சொற்களின் விரைவில் அரைக்காததூரமும்
கடந்தனர் என்பது.
செங்கண்ஏறு
- செங்கண் - கோபங்குறித்தது. கொல்லேறு,
சினவேறு, முரணேறு என்ற வழக்குக்கள் காண்க. ஏற்றினது இயல்பு
செங்கண்ணுடைமை என்றலுமாம்.
உடையார்
- கொடியாகவும் ஊர்தியாகவும் உடையவர்.
திருமலைச்சாரற்
சோலைகண்டார் - எனமாற்றுக.
போவோம் அங்கே என மாற்றிக் கூற நின்ற மனவேகம்போலவே,
செயலும், வேகமாய் முற்றியது என்று குறிக்கப் பயனிலைமுன்
வந்தது.
திருமலைச்
சாரற்சோலை - மலையின் சாரலில்
உள்ளசோலை. உயர்ந்த இடமாதலின் முதலிற் காட்சிக்குப்
புலப்பட்டது மலையும், பின்னர்க்காணப்படுவது அதன் சாரலும்,
அதன்பின் சோலையுமாம். இவை வேறு வேறாகத் தெரியும்
சவிகற்பக் காட்சியின்முறையில் வைத்தார். முன்னர்ச் சேய்மையில்
நிகழ்வது மலையும் சாரலும் சோலையுமாகிய மூன்றுஞ் சேர்ந்துள்ள
நிருவிகற்பக்காட்சியாதலின் அவ்வாறு முரைக்க நின்றதுகாண்க.
திருமலை
- காளத்தி. மேலே திருமலைச் சருக்கம் என்ற
இடத்தும், பிறாண்டும் திருமலை என்றது கயிலையைக் குறிக்கும்.
"சித்திநிகழ் வயிரவராய்த் திருமலை நின் றணைகின்றார்" - சிறுத் -
புரா - 25. காளத்தியும் கயிலையாம். இது தென்கயிலை எனப்படும்.
கயிலைபாதி காளத்திபாதி யந்தாதியும் இக்கருத்தே பற்றியது.
அப்பர்சுவாமிகள் இம்மலைமேற் றாள்பணிந்த குறிப்பினால்
கயிலையினில்வீற்றிருந்த பெருங்கோலங் காணுமது காதலித்து அந்த
யாத்திரையிற் புறப்பட்டனர். ஆளுடையபிள்ளையாரும், ஆளுடைய
நம்பிகளும், இங்கு நின்றே திருக்கயிலையைப் பாடியருளினர்.
அருச்சுனர் கயிலைமலைச் சாரலிற் கேட்ட வரத்தை அவரே
திண்ணணாராகி இங்குப் பெறப்போகின்றார் என்ற
குறிப்புக்களெல்லாம் பெற இங்குத் திருமலை
என்ற பெயராற்
கூறினார்.
கண்டார்
- மலையும் சாரலும் சோலையும் கண்ட இக்காட்சி,
திண்ணனாரது பசி, தாகம், இளைப்பு முதலியவற்றை மறப்பித்து
அவரது உள்ளத்தைக் கொள்ளைகொண்டு "தோன்றுங் குன்றின்
நண்ணுவோம்" என்று தடுக்கலாகாப் பேராசையை விளைத்தது பற்றி
இதனை இவ்வாறு விதந்து கூறினார்.
இப்பாட்டுத்
தலவிசேடம் கூறிற்று. 95
|