749.
|
அளிமிடை
கரைசூழ் சோலை யலர்கள்கொண்
டணைந்த
வாற்றின்
றெளிபுன லிழிந்து சிந்தை தெளிவுறுந் திணண
னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு
கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக் குலவரைச் சாரல்
சேர்ந்தார்.
100 |
(இ-ள்.)
வெளிப்படை. வண்டுகள் மொய்த்த கரையினைச்
சூழ்ந்த சோலைகளின் மலர்களைத் தாங்கிக்கொண்டு அணைந்த
முகலியாற்றின் தெளிந்தபுனலிலே இறங்கிச் சிந்தைதெளிதலுறுகின்ற
திண்ணனார், களிப்புருவதற்கேதுவாகிய மகிழ்ச்சி மேன்மேற்
பொங்கத் திருக்காளத்திமலையைக் கண்டுகொண்டே குளிர்ச்சியோடு
வருகின்ற அந்நதியின் ஊடேபோய் உயர்ந்த மலைச்சாரலிற்
சேர்ந்தனர்.
(வி-ரை.)
அளிமிடைசோலை என்க. அலர்கள்
கொண்டணைந்த ஆற்றின் - திண்ணனாரை எதிர்கொள்வதற்கு
மங்கலப்பொருளாகிய மலர்களைக்கொண் டணைந்ததென்ற
பொருளும் காண்க.
"வண்டி
ரைத்தெழு செழுமலர்ப் பிறங்கலு மணியுமா
ரமுமுந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும் வருபுன றாழ்ந்துசே
வடிதாழத்
தெண்டி ரைக்கடற் பவளமும் பணிலமுஞ் செழுமணித்
திரண்முத்துங் கொண்டி ரட்டியுந்தோத மங்கெதிர்
கொளக்கொள்ளிடங்கடந்தேறி" (146) |
என்ற திருஞானசம்பந்தநாயனார்
புராணமுங்காண்க.
முகலியாறு மலர்களை வாரிக்கொண்டு வருமியல்புடையதென்பது
"முழுமலர்த் திரள்களும் எத்துமாமுகலியின்" என்ற
ஆளுடையபிள்ளையார் தேவாரத்தானுமறிக.
தெளிபுனல்
இழிந்து சிந்தை தெளிவுறும் - இதன்
நீரினைத் தொடுதலாலே மயல்தீர்ந்து மனந்தெளியும் என்றமையாற்
றீர்த்தச்சிறப்புரைத்ததுமாம். "ஆடகமுகலிதானாண வப்பெயர், நீடிய
வழுக்கற நீக்கு நீரதாய்" (79) என்ற சீகாளத்திப் புராணமுங் காண்க.
"ஆவதென்" (746) எனமுன்னர் மனந்தெளியாது நின்றநிலை மாறி
இப்போது தெளிவுறுகின்றது என்றபடி.
தெளிபுனல்
- எஞ்ஞான்றும் தெளிவுடையது. தெளி -
தெளிவிக்கும் எனக் கொண்டு சிந்தைமயல் தீர்த்துத்
தெளிவிக்கும்புனல் என்பதுமாம். நாயனார் இவ்வாற்றினை
அடைந்தது தைமாதமாகலின் அப்பருவம் இதில் தெளிவுடையதாய்
மிக்க நீர் ஓடுங்காலமாம் என்பதும் காண்க.
சிந்தை
தெளிவுறும் - இதுவரை நின்ற தமது குலம் முதலிய
இவ்வுலகச்சார்பாகிய மயக்கவுணர்ச்சிகளும், "ஆவதென்" என்ற
ஐயமும் நீங்கி உண்மை யுணர்ச்சியாகிய சிவஞானானந்தத்திற்
றெளிவுபொருந்தும்.
திண்ணனார்தாம்
- மேற்பாட்டிற்கூறியபடி போந்த
இருவருள் இவர்தாம் கண்டுகொண்டு என்பதாம்.
களிவருமகிழ்ச்சிபொங்க
- களி - மகிழ்ச்சியின் முதிர்ந்து
அவசமாகிய நிலை. களிப்புவருமாறு - மகிழ்ச்சிமீக்கூர.
காளத்தி
கண்டுகொண்டு - உள்ளும் புறமும் காட்சிக்கு
வேறொன்றும் விடயமாகாமற் காளத்தியையே கண்டவண்ணமாக.
நதிஊடு
- நதியின் குறுக்கே கடந்து. சாரல் -
சார்ந்த
இடம் - மலைச்சரிவு. 100
|