755.
நெடிதுபோ துயிர்த்து நின்று, நிறைந்தெழு மயிர்க்கா
                                   றோறும்
வடிவெலாம் புளகம் பொங்க, மலர்க்கண்ணீ ரருவி
                                     பாய,
"அடியனேற் கிவர்தா மிங்கே யகப்பட்டா ரச்சோ!" 
                                   வென்று
படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு
                                 தோன்ற,
106

     755. (இ-ள்.) வெளிப்படை. நெடுநேரம் அவ்வாறு மோந்து
நின்று, தமது திருமேனியெங்கும் எழுந்த மயிர்க்கால்தோறும்
புளகம் பொங்கவும், மலர் போன்ற கண்களினின்று கண்ணீர்
அருவிபோலப் பாய்ந்து வடியவும், "அடியேனுக்கு இவர்தாம் இங்கு
அகப்பட்டனரே! அச்சோ! (இது என்ன அதிசயம்) என்று தாமே
கூறி, ஒப்பில்லாத அன்புதானே ஒருவடிமாயிற்று என்னும் தன்மை
புலப்பட, 106

     755. (வி-ரை.) நெடிதுபோது உயிர்த்து நின்று - எழுந்த
பெருமகிழ்வும் அன்பும் கூடிய வேகத்தால் விரைவில் ஓடித் தழுவி
மோந்து நின்றாராதலின் அவ்வேகமும் மோகமும் தணியும்வரை
நீண்ட நேரம் மோந்த வண்ணமாக நின்றதாம்.

     நிறைந்து எழும் மயிக்கால் தோறும் - செறிவாய்
நிறைந்துள்ள மயிர்களின் அடியிடங்கள் ஒவ்வொன்றிலும். வடிவு
எலாம்
- உடல் முழுவதும். புளகம் பொங்குதல் -
(உரோமகூபங்கள்) மயிர்களின் வேர்களிருக்கும் இடங்கள்
மேற்கிளம்பி மிக்குக் காட்டுதல். இஃது அளவற்ற
ஆனந்தத்தாலாவது. உடல் வேகம் மனவேகங்களால் உடலிற்
சூடுகொண்ட இரத்தம், உழைப்புமிக்க அந்தந்த இடங்களுக்கு
விரைவாகச் செலுத்தப்பட்டு ஓடும்; அதனால் வேர்வையுண்டாம்;
கண்ணீர்வரும். இங்கு அன்பின் வேகம் மிகவே உள்ளம்
நெகிழ்ந்தது. உள்ளத்தால் இயக்கப்படும் உடல்முழுதும்
இரத்தம் அதிக விசையில் ஓட மயிர்ப்புளகமும் கண்ணீர்ப்
பெருக்கமும் உண்டாயின.

     மலர்க்கண் - தாமரை மலர்போன்ற கண்களிலிருந்து,
ஐந்தனுருபு தொக்கது. ழுபூவெனப் படுவது பொறிவாழ் பூவே'
என்றபடி, மலர் என்ற பொதுப்பெயர் இங்குத் தாமரையைக்
குறித்தது. அருவிநீர்பாய என்க. அருவிபோலக் கண்ணீர்
இடையறாது பாய்ந்துவர. உவமவுருபு தொக்கது. "பெருமானே
எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே
லாகப் பதைத்துருகு மவர்" என்ற திருவாசகத்திற் குறித்தநிலை இது.

     அடியனேற்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார் - இங்கு
இவர் தாம் அடியேனாகிய எனக்குக் கிடைத்தனர். அகப்படுதல் -
தன்னுட்படுதல்; பெற்ற பொருளாதல். மிகக் கீழான அடிமைக்கு
மிகமேலான இவர் கிடைத்துவிட்டனரே!. "யாவர்க்கு மேலா
மளவிலாச் சீருடையான்!, யாவர்க்குங் கீழா மடியேனை - யாவரும்,
பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கென் னெம்பெருமான்!,
மற்றறியேன் செய்யும் வகை" என்ற திருவாசகக் தருத்தை
இங்குவைத்து நோக்குக. "என்ன புண்ணியஞ் செய்தனை
நெஞ்சமே?", "எனக்கு அருளியவா றார் பெறுவா ரச்சோவே",
"ஆரும் பெறாத வறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில்?"
என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     அச்சோ - வியப்புச்சொல். இன்பமான ஆச்சரியக் குறிப்பு.

     படியிலாப் பரிவு......தோன்ற - படி - ஒப்பு. படியிலா -
ஒப்பில்லாத - இதன்படி வேறொன்றும் இல்லாத. பரிவு - அன்பு.
இணையற்ற அன்பே ஒரு வடிவாயிற்று என்னுந்தன்மை வெளிப்பட.
பரிசு - தன்மை. படிவம் - வடிவம். "கண்ணப்ப னொப்பதோர்
அன்பின்மை" என்ற திருவாசகம் இதனை எதிர்மறைப்பண்பில்
வைத்து ஒப்பித்துக் கூறிற்று. இதனையே" கண்ணப்ப
னொப்பதோரன்பின்மை யென்றமையால்" என்று ஞானசாத்திரமும்
(திருக்களிற்றுப் படியார் - 52) எடுத்தாண்டது காண்க.

     பரிசுதோன்ற - என்று - நைந்தார் என வரும் பாட்டுடன்
கூட்டி முடிக்க. 106