758. (வி-ரை.)
வன்றிறல் உந்தை - வலியதிறலுடைய
உமது தந்தை. வன்மை - திறல் - ஒரு பொருட்பன்மொழி
மிகுதி
குறித்தது. இவ்வாறு கூறியது ஒரு அரசனைக் கூறுவான் அவனது
மெய்க்கீர்த்தியொடு புணர்த்திக்கூறும் மரபு பற்றியாம். His
Majesty
என்றிவ்வாறு பலவும் புணர்த்துக்கூறும் நவீனர் மரபுங்காண்க.
வன்றிறல் - உந்தை வேட்டையாடுதற்குரிய மிக்க வலிமைபெற்றிருந்த
அக்காலத்து என்றதும் குறிப்பு.
மா
வேட்டை - மா - விலங்குகள். திங்கள்முறை
வேட்டைவினை (693) என்றபடி இப்போது ஆடிவந்ததுபோல
முன்னாள் ஒருமுறை யாடிவந்த வேட்டை. மா - பெரிய
என்றலுமாம். பண்டு - முன்னொருகாலத்து நாகன் "வில்லுழவின்
பெருமுயற்சி மெலிவானா" (692)கிப் பன்னாளாயினமையின் அதற்கு
முற்பட்டதொரு காலத்து என்றதாம். மா வேட்டையாடும்
ஒவ்வொர்முறையும் இங்கு வருவதென்றில்லாமல் ஏதோ ஒரு
முறைவந்த குறிப்பும்பெறப் பண்டு என்றதுமாம்.
வந்தோம்
ஆக - வரவே; ஆக - ஆகவே. நீர் -
நீரால்.
இலைப்பூ - இலையோடு பூவும். "தன்றலை தங்கிய
சருகிலை
யுதிர்த்து" - திருக்கண்ணப்பதேவர் திருமறம்.
குளிர்ந்தநீர்
ஆட்டி - ஒன்றிய இலை பூ சூட்டி -
இவை ஆகமத்தில் விதித்த திருமஞ்சன - அலங்கார -
அர்ச்சனைவிதிகள்.
குளிர்ந்த
நீர் - அதிகாலையில், புதிதாய்வந்த குளிர்ந்த
நீரைப் புதுத் துணியால் வடித்துப் புதுப்பானையிலிட்டு அறுகும்
பூவுந் தூவிவைத்து அதுகொண்டு திருமஞ்சனமாட்டுதல்
வேண்டுமென்பது ஆகமவிதி. (நெய்யபிடேகத்தின் பின்னர் மட்டும்
இள வெந்நீர் ஆட்டுதல் வேண்டுமென்ப.) ஒன்றிய இலைப்பூ
-
ஒன்றிய பொருந்திய - விதித்த. மூர்த்திகட்கும் காலத்திற்கும்
ஏற்றனவாய் விதிக்கப்பட்ட. இவை இங்கு, கூவிளம், அறுகு, தும்பை,
கொன்றை, வெள்ளெருக்கு, ஊமத்தை முதலியவையாம். நீரும் பூவும்
இலையும் பூசைக்கு இன்றியமையாதனவாம். "புண்ணியஞ்
செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்பது திருமந்திரம். நாணன்
இந்நூல்விதிகளை அறியானாயினும் சிவகோசரியார் ஆகம விதிப்படி
செய்த சிவபூசையை உடனிருந்து உள்ளபடி கண்டுணர்ந்தவனாதலின்
இவ்வாறு கூறினான். இதுகேட்ட திண்ணனாரும் விதியினை அறியாது
செயலைமட்டும் கடைப்பிடித்து நீரும் பூவும் இலையும்
என்றவைமட்டும் கருதிக்கொண்டு பூசித்தார். அதீதகநிலையில்
உள்ள அவர் செயல்கள், விதிகடந்தவேனும், அவற்றை இறைவனும்
உகந்துகொண்டார்.
ஊட்டி
- முன்பறைந்து - குளிர்நீராட்டுதலையும்,
பூச்சூட்டுதலையும்போலவே இவற்றையும் நாணன் தான் கண்ட
மட்டில் அறிவித்தான். நீரையும் இலைப்பூவையும் அவன் பார்த்தான்.
ஊட்டியபொருள் - நிவேதனம் - இன்னதென்று பாராதவனாதலால்
அது இனன்தென்னாது ஊட்டி என்று வாளாகூறினான். தேவர்
நிவேதனங்களை யாரும் பார்க்கலாகாது என்பது விதியாம். ஊட்டிய
உணவு இன்னதென்று இவன் கூறானாகவே திண்ணனார் தமது
முன்னை உணர்வு கொண்டு அதனை இறைச்சி என்று நிச்சயித்து
அதனையே ஊட்டினர். ஊட்டி - முன்பறைந்து -
குழவிகளுக்குத்
தாய் எடுத்துச் சிறிது சிறிதாய் வாயில் ஊட்டுவதுபோலும் அன்புடன்
நிவேதனத்தின் சிறுபகுதி எடுத்துத் தேவரது திருவாயின்முன் காட்டிற்
தேவரீர் இதனை அமுதுசெய்தருளும் என்று பிரார்த்தித்து
அதன்பொருட்டுச் சுவாகாந்தமாக உரிய மந்திரத்தைச் சொல்லி
இவ்வாறு ஐந்துமுறை ஊட்டுவித்தல் வேண்டுமென்பது ஆகமவிதி.
நாணனது மொழிகள் இக்குறிப்புப்பெற இருத்தல் காண்க.
இதுகடைப்பிடித்த திண்ணனாரும் 774 - 799 பாட்டுக்களிற்
கண்டவாறு மொழிகள் சொல்லி அமுதுசெய்வித்தலும்
காண்க.
முன்
- திருமுன்பு. பறைந்து - ஏதோசில
சொற்கள்
சொல்லி. பறைதல் - சொல்லுதல். தமிழ்நாட்டிற்
பெருவழக்காறொழிந்த இம்மொழி மலையாளத்தில் இப்பொருளில்
நின்று வழங்குதல் காண்க. யாழ்ப்பாணத்தில் தமிழிலும் வழங்குவது.
முன்பு அறைந்து - சொல்லி - என்றலுமாம்.
பார்ப்பான்
- மெய்ப்பொருளைப் பார்ப்பவன் என்ற
காரணத்தால் முனிவரைக் குறித்து வந்தது. அஃது அம்முனிவர்
கோத்திரத்தில் வந்தோர்க்குங்காரண விடுகுறியளவாய் வழங்கி ஒரு
சாதியாரை உணர்த்தியொழிந்ததாம்.
அன்றிது
செய்தான் - இன்றும் அவன் செய்தானாகும் -
இது பூர்வக்காட்சியனுமானம். மணத்தைக்கொண்டு இது இன்ன மலர்
என்றறிவதுபோலக் காண்க. அன்று அவன் இது செய்தல் கண்டேன்.
இன்று அச்செயலே கண்டேன். செய்தானைக் காணேன்.
செய்வோரின்றிச் செய்வினையின்மையின் இச்செயலை
முன்செய்யக்கண்ட அவனே செய்தானாகும் என்ற அனுமானப்
பிரமாணத்தால் அறிந்த ஞானம். கல்விப் பயிற்சியில்லாத
இவ்வேடரிடத்தும் அனுமான அறிவு நிகழ்ந்து பயன்படும்வகை
காண்க. அன்று - பண்டு இக்குன்றிடை வந்த அன்று. இது - இது
செய்தார் யாரோ? என்று வினவிய இது. இதுசெய்தான் - இது
போன்ற செயல் செய்தான். அவன் செய்தான் ஆகும் - அவனே
செய்தானாதல் வேண்டும்.
அவன்
செய்ததாகும் என்பது பாடமாயின் இது அவன்
செய்தது ஆகும் என்க. செய்தது - துவ்விகுதிபெற்ற
தொழிற்பெயர்.
109