762.
|
"ஆர்தம ராக நீரிங் கிருப்பதென் றகல மாட்டேன்;
நீர்பசித் திருக்க விங்கு நிற்கவுங் கில்லே" னென்று
சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத்
துணிந்தா
ராகி
வார்சிலையெடுத்துக் கொண்டு மலர்க்கையாற்
றொழுது
போந்தார். 113 |
762. (இ-ள்.)
வெளிப்படை. "உமக்கு யாரைத் துணையாகக்
கொண்டு நீர் இங்கிருப்பது? என்ற எண்ணத்தால் உம்மைப் பிரிந்து
போகமாட்டேன்; நீர் பசியோடு இருக்க இங்கு நிற்கவும் ஆற்றேன்"
என்றுசொல்லிச் சோர்கின்ற கண்ணீர் விடாது பெருகிவர, ஒருவாறு
போய்வரத் துணிவு கொண்டவராய்ப், பெரியவில்லை
எடுத்துக்கொண்டு, தமது மலர்போன்ற கைகளாற் றேவரைத்
தொழுது போயினார். 113
762. (வி-ரை.)
தமர்ஆர்ஆக இங்குநீர் இருப்பது என
மாற்றுக. நம்மவர் - நமர் எனவருவதுபோலத் தம்மவர் என்பது
தமர் எனநின்றது. தமர் - துணைவர்
- "துணையா யுள்ளார்" (756).
ஆர்தமராக - யாரைத் துணையாகக்கொண்டு. இங்கு
- கைம்மலை
கரடி வேங்கை யரிதிரி கானம் (756)மாகிய இங்கு. என்று
அகலமாட்டேன் - என்ற காரணத்தால் பிரிந்துபோகமாட்டேன்;
ஆயினும், நிற்கவும்கில்லேன் - நிற்கவும்
மாட்டேன். கில் -
ஆற்றலுணர்த்தும் இடைநிலை.
அகலமாட்டேன்
- நிற்கவுங்கில்லேன் - முரணான
இரண்டு நிலைகளுட்பட்டு ஊசலாடிய அவரது மனநிலைகுறித்தது.
இவை மேற்பாட்டிற் கூறியபடி திண்ணனார் தேவரைக் காதலின்
நோக்கிநின்று சொல்லியவை.
சோர்தரு
கண்ணீர் வார - கண்ணீர் சோர்தல் -
கண்களினின்று நீர்துளித்து வடிதல். வார்தல் -
மிக்குப் பெருகுதல்.
போய்வரத்
துணிந்தார் - மேலும் தாமதித்தால் பசி
மேலும் அதிகரிக்குமாதலாலும், இவர் இதுவரை தனித்திருக்கக்
கண்டாராதலின் தனியிருந்து ஆற்றும் அனுபவமுடையர்
என்றறியவந்ததனாலும், விரைவில் திரும்பிவர எண்ணியபடியாலும்
போதலில் மனங்கொண்டார். ஊசலாடிய உள்ளம் ஒன்றிற்றுணிதற்குக்
காரணங் குறிப்பிற் கூறியபடி வர என்றதன்
நுணுக்கம் காண்க.
மேற்பாட்டில் வருவேன் என்றதும் அது அன்றியும்,
போதலின்றி
வருதலின்மையின் போதலில் மனம்வைத்தனர். தேவர்பால் வருதல்
அவரது துணிபேயன்றிப் போதல் அவரது திருவுளக் குறிப்பன்று
என்பார் போகத்துணிந்தார் என்னாது போய் வரத்துணிந்தார்
என்றார்.
வார்சிலை
- பெரியவில். இது மேருமலை போன்றதென்றும்,
பாரப் பெருவில் என்றும் முன்கூறியவை காண்க.
எடுத்துக்கொண்டு
- கையிற்றாங்கியிருந்த வில்
அவரையறியாது முன்னர்க் கீழேவீழ்ந்து (757) விட்டமையின்,
இறைச்சி கொண்டுவருதற்கு வில்வேண்டும் என்ற எண்ணம்வர,
அதனைத்தேடி எடுத்துக்கொண்டு என்றார்.
தொழுது
- தமது பிரிவாற்றாமைக்காகவும், பிரிதலின்
பொருட்டு மன்னிப்புக்காகவும், தாம் மீளவரும்வரை அவர்
ஆற்றியிருத்தற்காகவும் தொழுதனர்.
அன்பில் திண்ணனார்
- இது கடைப்பிடித்துக்கொண்டு -
பிரியமாட்டாது - ஆதரவுநீட - என்று (எண்ணி) - போதுவர் -
மீண்டுசெல்வர் - புல்லுவர் - போவர் - நிற்பர் - போல்வர் -
என்பார் - என்று - கண்ணீர்வாரத் - துணிந்தாராகிச் சிலை
எடுத்துக்கொண்டு - தொழுது போந்தார் என்று இந்நான்கு
பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. 113
|