763.
|
முன்புநின்
றரிதி னீங்கி மொய்வரை யிழிந்து
நாணன்
பின்புவந் தணைய முன்னைப் பிறதுறை வேட்கை
நீங்கி
யன்புகொண் டுய்ப்பச் செல்லு மவர்திரு முகலி
யாற்றின்
பொன்புனை கரையி லேறிப் புதுமலர்க் காவிற்
புக்கார். 114 |
(இ-ள்.)
வெளிப்படை. (தேவரின்)திருமுன்பினின்றும் இவ்வாறு
அரிதாய் நீங்கி மொய்த்த மலையினின்று கீழே இறங்கி, நாணன்
பின்புவந்து சேர, முன்னையவாகிய வேற்றுத் துறைகளின் ஆசை
ஒழிந்து, அன்பேதம்மைப் பற்றிக் கொண்டு செலுத்தச்செல்கின்ற
அவர், திருமுகலியாற்றினது பொன்றிரண்டு அழகுசெய்யும்
அப்புறக்கரையில் ஏறிப், புதியமலர்கள் நிறைந்த சோலையிற்
புகுந்தனர்.
(வி-ரை.)
முன்பு - திருமுன்பு - சந்நிதானம்.
நின்று -
ஐந்தாவதன் சொல்லுருபு. அரிதில் நீங்கி -
நீங்கத் தரிக்கமுடியாத
நிலையில் நீங்கி. இங்கு இவ்வாறன்றித் திருமுன்பு நெடுநேரம் நின்று
பின் நீங்கி என்றுரைப்பாரு முண்டு. அஃதுரையன்மை யுணர்க.
மொய்வரை
- பல குன்றுகளும் மொய்த்த - சேர்ந்த -
அம்மலை. "திருக்காளத்தித் திருமலையிம் மலைகளில்யா தென்று
கேட்டார்" என்ற ஆளுடைய பிள்ளையார் புராணம் (1020) காண்க.
மரங்களும் சோலைகளும், மதுமலர்களும் மொய்த்த என்றலுமாம்.
நாணன்
பின்பு வந்தணைய - மலைஏறும்போது
நாணன்முன்பு வழிகாட்டிச் (752) சென்றான். இப்போது
வழிகாட்டவேண்டிய அவசியமில்லை. மேலும் திண்ணனாரது
தீவிரகதிக்குமுன் செல்லுதல் நாணனாலும் வேறெவராலும் இயலாது.
அன்றியும் அவரது நிலைகண்டு அஞ்சிப் பின்வந்தான் என்றலுமாம்.
இனித் திண்ணனார்செல்ல அவரைப் பின்பற்றியே உலகர்
வந்தணையவேண்டும் என்ற குறிப்பும் காண்க.
முன்னைப்
பிறதுறை வேட்கை நீங்கி - மலையேறிக்,
கண்டு, வந்து அணைந்து, பன்றி இறைச்சி தின்று, தண்ணீர் குடித்து,
வேட்டைக்காடு மெல்லக் குறுகுவோம் என்பன முதலாக
முன்னேயிருந்த பிறதுறைகளின் வேட்கைகளினின்றும் நீங்கி, அவை
தாமாகவே இவரைவிட்டன; இவர் நீக்கினவன்று. "முன்னைச் சார்பு
விட்டகலநீங்கி" (753) என்றது காண்க. முன்னைச் சார்புவிட்டு
நீங்கியும் இங்கு இறைச்சிக்குச் செல்கின்ற செயல் நிகழ்ந்தது; இது
வேட்கையால் நிகழ்ந்ததன்று. கருவிகளை வேட்கையேகொண்டு
செலுத்தித் தொழில்செய்விக்கும் இச்சாசத்தியின் வழியே கிரியாசத்தி
செல்லுமென்பர். ஆனால் இவர்க்கு அந்தப் பிறதுறை வேட்கை
நீங்கினபடியால் இங்கு இறைவர்க்கு இறைச்சிதருவதாகிய செயலில்
அன்பே கொண்டுசெலுத்திற்று. ஆதலின் வேட்கைநீங்கி -
அன்புகொண்டுய்ப்ப என்றார்.
பொன்புனைகரை
- முகலியாறு பொன்னை உந்திவருதல்
முன் உரைக்கப்பட்டது. 747 பார்க்க. ஆற்றில் அடித்துவரப்பட்ட
பொன்னினால் அணிசெய்யப்பெற்ற கரை.
ஏறி
- மலையினின்றும் இழிந்தபின், தாம் முன்பு
போந்தவாறே திரும்ப நதியூடேகி (749). ஆற்றின் எதிர்ப்புறக்
கரையில் ஏறி என்க.
புதுமலர்க்
காவில் புக்கார் - அணிநிழற் கேழல் இட்ட
(748) இடம் அளிமிடை கரைசூழ் சோலை (749) யாதலின்
அந்நினைப்பினால் அங்குச் சென்றனர். அது தேவர்க்குப்
பன்றியிறைச்சியும் பூவும் இலையும் கொணரும் பொருட்டாம். 114
|