764.
|
காடனு
மெதிரே சென்று தொழுது "தீக் கடைந்து
வைத்தேன்;
கோடுடை யேன முங்கள் குறிப்படி யுறுப்பை
யெல்லா
மாடுற நோக்கிக் கொள்ளு; மறித்துநாம் போகைக்
கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ?; வென்றலு நின்ற
நாணன்,
115 |
764.
(இ-ள்.) வெளிப்படை. (அங்குநின்ற) காடனும்
எதிரில்வந்து தொழுது, "தீக்கடைந்து வைத்தேன்; கொம்பினையுடைய
பன்றியின் உறுப்புக்களையெல்லாம் உங்கள் அடையாளப்படி
அங்கங்கிருக்கப் பார்த்துக்கொள்ளும். இன்று நாம் மீண்டு
போதலுக்குக் காலம் நீடும்படி நீர் தாமதித்த தென்னகாரணம்?"
என்று வினவுதலும், பக்கத்தில் நின்ற நாணன், 115
764. (வி-ரை.)
காடனும் - "தீக்கடை மரக்கோல்பண்ணி
ஈங்கு நீ நெருப்புக் காண்பாய்" (748) என்று பன்றியை
ஒப்புவிக்கப்பெற்ற காடனும். உம்மை இறந்தது தழுவியது.
தொழுது
- தலைவனிடம் அறிவிக்கும் முறைப்படி வணங்கி.
தீக்கடைந்து வைத்தேன் - உம்முடைய உத்தரவுப்படி
தீக்கடைந்து
வைத்துள்ளேன் என்றான்.
ஏன
உறுப்பை எல்லாம் குறிப்படி மாடுற நோக்கிக்
கொள்ளும் எனக்கூட்டுக. ஒப்புவித்த மாமிசத்தை இவ்வாறு
அடையாளங் காட்டி மீள ஒப்புவிப்பது இவர்களுக்குள்
வழங்கியதொரு வழக்கமாம். "நண்டுக்கு நரியைக் காவல் வைப்பது
போல" என்ற பழமொழிப்படிக்கில்லாது இவன் அப்பன்றி
இறைச்சியின் சிறு பகுதியேனும் தான் தின்னாமல், ஒப்புவித்தபடியே
வைத்திருப்பதற் கறிகுறியாக இவ்வாறு தமது மரபு வழக்கப்படி
கூறினான் என்க. இக்கருத்துப்பற்றியே நகை வியாபாரிகள் நகை
மணிகள் முதலியவற்றைப் பொதி திறந்து காட்டிக் கொடுத்து
வாங்கும் வழக்கமும் காண்க.
கோடு உடை
ஏனம் -
கொம்புடைமை பன்றியினியல்பு.
"ஏன முனைக்கொம்பவை பூண்டு" என்ற தேவாரங் காண்க. மாடு
உற - அவ்வப்பக்கத்தேயிருக்க,
இன்று
நாம் மறித்துப் போகைக்கு என்க. மறித்து
-
மீட்டும் வேட்டைக் காட்டுக்குத் திரும்பிப் போதலுக்கு.
போகை
- போதல் - செல்லுதல். கை விகுதிபெற்று வந்த
தொழிற் பெயர்.
நீட
- அதிக காலம் ஆகும்படி.
நின்ற
நாணன் - காடன் சொல்லியவை திண்ணனார்
செவியிலேறவில்லை. அவரது காட்சிக்கு அவன் புலப்பட்டானு
மல்லன். "முகத்தைநோக்கார்" (766) என்பது காண்க. ஆதலின்
அவனுக்கு நாணன் விடைசொல்வானாயினான். 115
|