765.(வி-ரை.)
கண்டு அணைத்துக் கொண்டு -
கண்டவுடனே தழுவிக் கொண்டு. கண்டார் - ஓடிச் சென்றார் -
தழுவினார் (754) என்ற செயல்களை நேரிற்கண்டானாதலின் நாணன்
இவ்வாறு தொடர்புபடக்கூறினான். அணைத்துக் கொள்ளுதல்
-
தழுவுதல். தழுவினார் (754), புல்லுவர் (761) என்றவை காண்க.
வங்கினைப்பற்றிப்
போகா வல் உடும்பு என்ன - இது
இவர்களுக்குள் உவமானமாய் வழங்கிய பழமொழியாம். வேடர்கள்
பேச்சில் அவர்கள் வழக்குக் கேற்ற தன்மையில் உவமைகூறி
யமைத்தது ஆசிரியரது பெருங்கவித்திறமையாம். உடும்பு
எவ்விடமாயினும் பற்றினால் விடா இயல்புடையது. நேரான
சமனிடமன்றி, வளைந்தவங்கு ஆயின் அவ்விடத்து அதன்பிடி
மிகவலிதாய் விடாப்பிடியாயிருக்கும் என்பதாம். உடும்பு பிடித்தது;
வங்கு அதற்குத் தன் வளைந்த அமைப்பு இயல்பினால்
இடங்கொடுத்து விடாப்பிடிக்கு மேலும் உதவி செய்தது என்ற
உவமானப்படி இங்குத் திண்ணனாரும் பிடித்தனர்; அதற்குத்
தேவரும் தமது அருட்டிரு நோக்கம் செய்து தம்மை அவர் விடாது
பற்றக் கொடுத்து உதவியருளினர் என்ற குறிப்பும் கண்டுகொள்க.
"அந்த விடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி"
என்று திருவாசகத்தில் இறைவனை முழையாகக் கூறியது காண்க.
சொல்வோன் மரபு வழக்குப்படி உவமை கூறுந்திறத்தினைச்
சிந்தாமணியில் ஓர் இடையன் வாக்கில் வைத்து "வெண்ணெய்
போன் றூறினியன் மேம்பால்தோற் றீஞ்சொல்லன், உண்ண
வுருக்கிய வானெய் போன் மேனியன்" (480) எனக் கூறியதனையும்
இங்கு வைத்து ஒப்புநோக்குக.
வங்கு
- வளைந்த உள்ளிடமுள்ள முழை. மரப்பொந்து
என்றலுமாம். விடாது பற்றுதற்குரிய இயல்புடன் வங்கு நிற்க,
உடும்புசென்று பற்றுதல்போலத்தன்னை உயிர்கள் அடைந்து
பற்றுமாறு கருணையுடன் இறைவன் நிற்க உயிர்கள் அடைந்து
பற்றுவர் என்ற குறிப்பும் காண்க. நாணனது வாக்கில்
அவனையுமறியாது முன்னர் வந்த உண்மைப் பொலிவுடைய
உபதேசமொழிகள் போல இவ்வுவமானமும் உண்மை உள்ளுறைப்
பொலிவும் உயர்ந்த தன்மை நவிற்சிப் பொலிவும் பெற்று விளங்குதல்
கண்டுகளிக்க. வல்உடும்பு - வலிமை - இயல்பாலே
அதன்பிடியின் வலிமை. உடும்பென்ன நீங்கான்
- உடும்பு
பிடித்தபிடி விடாதது; இவனும் அவரைப்பற்றி விடாதவனானான்.
உடும்பு என்ன - உடும்பு நீங்காமைபோல. தொழில்
பற்றிவந்த
உவமம்.
இங்கும்
- நீங்கி இங்குப் போந்துள்ளானே எனில் அவ்வாறு
இங்குப்போந்ததும் என்றபடி. எச்சவும்மை. தின்ன - உண்ண.
அவ்வேடர்களின் பேச்சு வழக்குப்படி தின்ன
என்றது காண்க.
கொண்டேக
- கொண்டு தேவரிடம் மீண்டுபோக. காடன்
எண்ணியபடி வேட்டைக் காட்டுக்கு மறித்துப் போக வன்றி
என்பது குறிப்பு.
விட்டான்
- நீங்கினான். "பிறப்பினொடு மிறப்பினொடும்
பிணங்குவர் விடுநீ" என்றபடி (சிவஞான சித்தியார்
12 - 2) விட்டார்
- நீத்தார் - அறத்துறந்தார் என்க. விடுநீ (485) விட்டபின்
(485)
என்ற இடங்களிலுரைத்தவையுங் காண்க.
நலப்பட்டான்
தேவர்க்கு - உலகத் தொடர்பு விட்ட உயிர்
இறைவனைப் பற்றுதல் உண்மை. பற்றுக்கோடின்றி உயிர்கள் நில்லா.
அவை மலச்சார்பினைப் பற்றி நிற்பன. அச்சார்புவிட
இறைசார்பினைப் பற்றும் என்பது ஞானசாத்திர முடிபு. இக்கருத்துப்
புலப்படக் குலத்தலைமைவிட்டான் - தேவர்க்கு நலப்பட்டான் என்று
கூட்டியுரைத்த குறிப்பும் காண்க.
"தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை
தலைவன்றாளே" என்ற தேவாரமுங் காண்க. 753-ல் உரைத்தவையும்
பிறவும் நோக்குக. குலத்தலைமை முதலிய உலகச்சார்பாகிய
அசத்தின்பாலும், இறைவனாகிய சத்தின்பாலுஞ் சார்ந்ததன்
வண்ணமாய் நிற்குந் தன்மையுடைய உயிர் சதசத்து எனப்படும். இது
அவ்விரண்டினிடமும் நிற்கும். விட்டான் - தலைப்பட்டான்என,
உயிரின் நிலையைக் குலத்தலைமைக்கும் தேவர்க்கும் இடையில்
வைத்த இயைபும், இதுபற்றியே தேவர்க்கு நலப்பட்டான் என்னாது
மாற்றியமைத்த குறிப்பும் உன்னுக. மேற்கூறிய தேவாரத்தினும்
இவ்வாறே கண்டுகொள்க. "இருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா"
என்றது சிவஞான போதம் (7-ம் சூத்). சீ பஞ்சாக்கர வைப்பு
முறையும் இக்கருத்தே பற்றியதென்பது ஞானதேசிகர்பாற்றெளிக.
நாணன் இவ்வாறு
மாற்றியுரைத்தது தாம் அரியதலைவனைப்
பெற்றும் பெறாதொழிந்த ஆற்றாமைபற்றி. இஃதுலகியல் வழக்கிலுங்
காணப்படும். இதனைவிடுதலும் அதனைத் தொடுதலும் ஆகிய
தொடர்பின் விரைவும் குறிப்பதாம்.
நலப்படுதல்
- மீளா ஆளாகுதல்.
தேவர்
- நாணன் குறித்தது குடுமித்தேவரை. சிவபெருமான்
ஒருவரே மெய்த்தேவர். பிறர் தேவர் எனப்படுதல் உபசார
மாத்திரையா யொழியும். அத்தேவர்களுக்கும் இவர் தேவராவார்.
"அத்தேவர்
தேவ ரவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பற்றேது மில்லாதென் பற்றறநாண் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ"
|
என்ற திருவாசகக் கருத்தை
இங்கு இச்சரித நிகழ்ச்சியினும்,
சொல்லாற்றலினும் வைத்துக் காண்க. இத்தேவரைச் சிவகோசரியாரும்
"தனிமுதலாம் பரனென்று" (789) துதித்தலும், இவரே கயிலாயநாதர்
என்பதும் காண்க.
தேவர்க்கின்னம்
- என்பதும்பாடம். 116