766. (இ-ள்.)
வெளிப்படை."திண்ணா! என்னகாரியம்
செய்தாய்! நீதான் என்ன மயகம் கொண்டாய்? நீ வேடர்களாகிய
எங்களது முன்னைப் பெருமுதல்வனல்லையோ?" என்று காடன்
கேட்க, அவன் முகத்தையும் நோக்காதவராகி, வலிய பெரிய
பன்றியினை நெருப்பில் இட்டு வதக்கி, மிக்க இன்பமுடைய
தசைகளை வேறு வேறாக அம்பினால் ஈர்ந்துக்கொண்டு, 116
766.
(வி-ரை.)என் செய்தாய் - என்ன விபரீதம்
செய்துவிட்டாய்; என்று ஆச்சரியக் குறிப்புப்படக் கூறியது.
என்னமால்
கொண்டாய் - என்னவிதமான மயக்கத்தினும்
அகப்பட்டுக்கொண்டாய்? மால்கொள்ளுதல் -
மயக்கத்தினுட்படுதல். "தேவுமால் கொண்டானிந்தத் திண்ணன்" (769)
என்று இதனைத் தெய்வத்தாலாகிய மயக்கம் என்று அவர்கள்
கொண்டது காண்க.
முதலி
- முதல்வன் - தலைவன். எங்கள்
முதல்வனல்லையோ என்றது "முன்னை நாளில் அரசுரிமையேற்றதால்
எங்களைக் காப்பாற்றும் கடமை உன்மேல் உள்ளது. அதன்
பொருட்டே இங்கு வேட்டைக்கு வந்தனை; நீ இவ்வாறு கைவிட்டால்
எங்களைக் காப்பவர்யார்?" என்று அவருக்கு நினைவூட்டினால்
அவர் மயக்கம் தீரும் என்று எண்ணினவனாகி இவ்வாறு அவரிடம்
கூறினான்.
முகத்தை
நோக்கார் - காடன்சொல்லிய சொற்கள்
செவிக்குப் புலப்படாதது போலக் காடனும் அவர் கண்ணுக்குப்
புலப்படவில்லை. ஆதலின் அவன் முகத்தைப் பார்க்கவில்லை.
இந்நிலையின் இயல்பைச் சண்டீசநாயனார் புராணம் 49, 50-ம்
திருப்பாட்டுக்களில் விரிவாய்க் காணலாம். ஆனால், காதல்கொண்ட
அத்தேவரைப்பற்றிய செயல்கள் காட்சிப்படும்; சொற்களும்
செவிப்புலப்படும் என்க. 758-ல் உரைத்தவை காண்க.
பன்றி
- தாம் சுரிகையால் துணித்து அங்குக் கொண்டுவரச்
செய்து நீழலி லிட்ட அப்பன்றி.
வதக்கி
- இது இறைச்சியை உணவாகச் செய்தலின்
முதற்செயல். வதக்குதல் மென்மைபெறத் தீயின்கண்
வகவைத்தல்.
மிக்க
இன்புறு தசைகள் - அப்பன்றியின் இறைச்சியில்
மிகச் சுவையும் இன்பமும் தரும் தசைப்பகுதிகள். அம்பினால்
வெவ்வேறு ஈர்த்து - அவ்வினிய பகுதிகள் அதனுடலில் வெவ்வேறு
பாகங்களில் உள்ளனவாதலின் அப்பாகங்களைத் தனித்தனி
அம்பினால் அரிந்து பிரித்து எடுத்து. கொண்டு - வேறாக
எடுத்துக்கொண்டு வேறு பிரித்துக்கொள்ளுதல் இறைச்சியைச் சித்தஞ்
செய்தலில் இரண்டாவது செயல். 117 .