794. |
இந்தனத்தை
முறித்தடுக்கி யெரிகடையு மரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்த்து மிருகங்கள்
கொந்தியயி லலகம்பாற் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில் வக்குவன
வக்குவித்து, 145 |
794. (இ-ள்.)
வெளிப்படை. விறகுக் கட்டைகளை முறித்து
அடுக்கித் தீக்கடை கோலால் தீ உண்டாக்கி மூளூம்படி வளர்த்து,
விலங்குகளைக் கூர்மையான அம்பினால் கொந்திக் கொழுப்புள்ள
பாகங்களைக் குட்டமிட்டு அரிந்து கிடைத்தவற்றை எடுத்துக்
கொண்டு, எழுகின்ற தீயில் வதக்குவனவற்றை வதக்குவித்து. 145
794.
(வி-ரை.) இந்தனம்
- இங்குச் சிறு விறகு குறித்தது
"இந்தன விலங்க லெறிபுனந் தீப்பட் டெரிவதொத்து" (திருக்களந்தை
யாதித்தேச்சரம் - 2) என்பது கருவூர்த்தேவர் திருவிசைப்பா.
எரிகடையும்
அரணி - முறுக வாங்கிக் கடைதலால் தீயை
உண்டாக்கும் கடை கோல். அரணி - கடைகோல். தழலைப்
பிறப்பித்தலாவது கடைகோலை விசையில் வாங்கிக்
கடைதலினாலே தீயினை உளதாகச் செய்தல். பிறப்பித்தல்
-
உளதாக்குதல். வளர்த்து - மூண்டெறியச்செய்து.
மிருங்கள்
கொந்தி - கொத்தி என்பது எதுகை நோக்கிக
காந்தி என நின்றது. அயில் - கூர்மை. அலகு - விளிம்பு - பக்கம்.
குட்டமிட்டு - வளைவாகக் கொத்தி எடுத்து,
இது வேடர் வழக்கு.
கொழுப்பரிந்து - கொழுப்புள்ள பாகங்களை அரிந்து
எடுத்து.
வக்குவன
வக்குவித்து - வதக்கு என்றதை வக்கு என
வழங்குவது வேடரது வழக்குச் சொல். அவ் வழக்கை யொட்டியே
கூறினார். வதக்க வேண்டுவனவற்றை வதக்கி.
குட்டமிடும்
- என்பதும் பாடம். 145
|