799.
|
ஊனமுது
கல்லையுடன் வைத்"திதுமுன்
னையினன்றால்;
ஏனமொடு மான்கலைகண் மரைகடமை
யிவையிற்றி
லானவுறுப் பிறைச்சியமு; தடியேனுஞ்
சுவைகண்டேன்;
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு"
மெனமொழிந்தார்.
|
150 |
799.
(இ-ள்.) வெளிப்படை ஊனமுதத்தைக் கல்லையுடனே
திருமுன்னர்வைத்து, "இது முன்னாளிற் கொணர்ந்ததனிலும்
நன்றாகியது; பன்றியிறைச்சியோடு மான், கலை, மரை, கடமை என்ற
இவ்வகைகளில் ஏற்ற இறைச்சி யமுதாக்கப்பெற்றுள்ளது; அடியேனும்
சுவைகண்டேன்; தேனும்கூடக் கலந்துள்ளது; இது தித்திக்கும்" என்று
மொழிந்தனர். 150
799. (வி-ரை.)
தேவரைத் திண்ணனார் இனிய மொழிகள்
சொல்லி அமுதூட்டுந்திறம் இப்பாட்டாற் கூறுகின்றார். 774 வரை
பார்க்க.
இது
முன்னையின் நன்றால் - முன்னையின் - முன்
நாளில் ஊட்டிய அமுதினும், அமுதின் சுவை முதலிய தன்மையினும்.
நன்றால் - நன்று.
ஆல் - உறுதிப்பொருட் குறிப்புடனின்றதோர்
அசைமொழி. நன்றாகும் வகையைமேல் விரித்துக் கூறுவாராய்
எவ்வாறு நன்று எனின் இவ்வாறாகும் என்றார். முன்னாற்கொண்ட
ஏனமொடு என்க.
ஆனவுறுப்பு-
இனியவை என்று கொள்ளுதற்கு ஆயின -
தக்க - உறுப்புக்களின்.
இறைச்சி
அமுது - இறைச்சியாந்தன்மை நீங்கி
அமுதமாந்தன்மையாக்கப்பெற்றது. அடைக்காயமுது என்புழிப்போல
இறைச்சியாகிய அமுது என்றலுமாம்.
அடியேனும்
சுவைகண்டேன் - முன் உண்ட அநுபவத்தாற்
போந்த அனுமான அறிவாலன்றி இன்று அடியேனும் கண்டேன்
எனவும், தேனும் உடன் கலந்தது - இறைச்சி
தன்னியல்பின் ஆயின
இனிமையேயன்றி மேலும் இனியதாக்குதற்குரிய தேனையும் எனவும்
எச்ச உம்மைகளிரண்டும் இறந்தது தழுவியன.
உடன்
- உடன் கூட்டி விரவுமாறு. முன்னர்ப் பிழிந்து
கலந்தது என்றது காண்க.
தித்திக்கும்
- கலந்தது ஆதலின் இனியசுவை தரும் என்பது.
மொழிந்தார்-
தேவரை அமுதூட்டுதற்காக இம்மொழிகள்
சொல்லினார் என்பார் வரும்பாட்டினை "இப்பரிசு திருவமுது
செய்வித்து" என்று தொடர்ந்து கூறுதல் காண்க. 775-ம் உரையும்
பார்க்க. 150
|