806.
|
"அவனுடைய
வடிவெல்லா நம்பக்க லன்" பென்று,
"மவனுடைய வறிவெல்லா நமையறிவு மறி" வென்று,
"மவனுடைய செயலெல்லா நமக்கினிய வா" மென்று,
மவனுடைய நிலையிவ்வா றறிநீ" யென்றருள்
செய்வார்,
157
|
806.
(இ-ள்.) "அவனுடைய வடிவம் முழுதும் நம்மிடத்து
வைத்த அன்பு மயமேயாம்" என்றும், "அவனுடைய அறிவு
முழுவதும் நம்மையறியும் அறிவேவயாம்" என்றும், "அவனுடைய
செயல்கள் எவையேயாயினும் அவையெல்லாம் நமக்கினியனவே
யாகும்" என்றுங்கூறி, " அவனுடைய நிலை இத்தன்மையுடையது; நீ
அறிவாயாக" என்று அருள் செய்வாராய், 157
806.
(வி-ரை.) வடிவெல்லாம்
நம்பக்கல் அன்பு -
எல்லாம் - முழுவதும் இதனையே முன்னர்ப் பொருவில்
அன்புருவம் (753), அன்பு பிழம்பாய் (803) என்றார். பிழம்பு -
வடிவம் என்பன ஒரு பொருளன. அன்பே ஒரு உருவமாயிற்று
என்பதாம்.
அறிவு
எல்லாம் நமைஅறியும் அறிவு - அறிவு
முழுமையும் நம்மையே யறிந்தது - வேறொன்றினும் செல்லவில்லை.
செயல்
எல்லாம் நமக்கு இனிய ஆம் - செயல்கள்
எல்லாம் நமக்கு இனிமை செய்தற்பொருட்டே ஆயின - நிகழ்ந்தன.
அஃதாவது வைகறை எழுந்து போந்து வேட்டையாடி அமுது
முதலியன கொண்டுவருதல், மஞ்சனமாட்ட முன்பூசை மலர்களைக்
காற் செருப்பால் மாற்றுதல் முதல் இரவிற்றுயிலாது காத்தல் வரை
எல்லாச் செயல்களும் நமக்கு இனியவை இவையிவையேயாம் என்று
கொண்டு, அதன்பொருட்டே செய்யப்படுவன.
"திருக்காளத்திநாயனார்க் கினிய செய்கை இவைகொ லாமென்
றிதுகடைப் பிடித்துக் கொண்டு" (759) செய்யப்பட்டன என
முன்னர்க் கூறியது காண்க.
இவ்வாறு செய்யப்பட்டன
ஆதலின் அவை நமக்கு
இனியனவேயாம். இவை நாமே விதித்த ஆகமவிதிப்படி இனியன
வல்ல என்று கொள்ளப்படினும், அவ்வாகமங்களே அன்பினை
எல்லாவற்றுக்கு மேலாக விதித்தலால் இவை இனியனவென்று
அன்பின்பெருக்காற் செய்யப்பட்டனவாதலின் இவையெல்லாம்
நமக்கு இனியனவேயாம்
என்றபடி. "இனியன வல்ல வற்றை
இனிதாக நல்கு மிறைவன்" என்ற (திருக்கொச்சைவயம் - பியந்தைக்
காந்தாரம் - 5) ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.
"மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால்" (சாக்கியர் -
புரா - 10) என்றபடி வன்மையும் மகிழ்ச்சியாதல் காண்க.
செயல்
எல்லாம் - செயல்கள் எவையாயினும் -
விலக்கப்பட்டனவாயினும் - அவை முழுதும். என்றும் - என்றும்
அறிவித்து (806). அறிவித்து என்பது சொல்லெச்சம். அன்பென்றும்
- அறிவென்றும் - ஆமென்றும் - (அறிவித்து) - அறிநீ என்று
அருள் செய்வார் - என்று அருள் செய்து - எழுந்தருளிப்
போயினார் (807) எனக் கூட்டி முடித்துக் கொள்க.
நிலை
இவ்வாறு - அன்பு இச்சை என்பன ஒரு
பொருளனவாதலின் அஃது இச்சையினையும், அறிவு
ஞானத்தினையும், செயல் கிரியையினையும் உணர்த்துவன; எனவே
அவரது இச்சை முதலிய மூன்றும் இறைவனையே விடயித்து நின்றன
ஆதலின் "அவனே தானே யாகிய வந்நெறி, யேக
னாகி
யிறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை
யின்றே"
(10.சூத்) என்று சிவஞானபோதத்திற் சொன்னபடி இறைவனது
பணியில் நின்றார் திண்ணனார். அவரது இச்சை முதலியவை
வேறொன்றினையும் விடயிக்கவில்லை. இங்கு நிலை இவ்வாறு
என்றது இத்தன்மையிற் சிவத்தையேயன்றி மற்றொன்றிலும் செல்லாது
சிவத்தோடு ஏகனாகி இறைபணி நின்ற நிலை குறித்தது. இந்நிலையில்
நின்றாராதலின் மலமாயை தன்னொடு வல்வினையின்றாயின
என்பதனை 803-ம் திருப்பாட்டில் விரித்துக் கூறினார்.
அறிநீ -
"அறிவிக்க வன்றி அறியா வுளங்கள்" (8 - 2 - உதாரண வெண்பா)
என்று சிவஞானபோதத்துக் கூறியபடி இறைவன் காட்டு
கின்றாராதலின் அறிநீ - என்றார். அறிவிக்கும் முறை வரும்பாட்டிற்
கூறுகின்றார். அருள் செய்வார் - செய்வாராகி. முற்றெச்சம்.
அருள்செய்வார் - மறை முனிவர்க்கருள் செய்து
என
வரும்பாட்டுடன் கூட்டுக.
அருள்
செய்தார் என்று பாடங் கொள்ளுவாருமுண்டு. 1571
1806 - ன்கீழ்
"பொருப்பினில் வந்து" என்பது முதலிய ஐந்து
பாடல்கள் சில பிரதிகளிற் காணப்படுகின்றன. பல பிரதிகளில்
அவை இல்லை. மேலும் கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரர்
அருளிய பொருள்களை அவை அப்படியே கைக்கொண்டு மொழிந்து
கொண்டன என்பது பின்னர் அவ்வவற்றின்கீழ்த் தந்துள்ள
பகுதிகளால் இனிது விளங்கும். சரித ஆதரவாகக் கொள்ளுதலன்றி
இவ்வாறு பிறர் பொருளை எடுத்தாளுதல் ஆசிரியர் சேக்கிழார்
மரபன்று. அன்றியும் அவற்றிற் பல பொருள்கள் முன்னர்
உரைக்கப்பட்டன. ஓரிடத்துரைத் உவமை முதலியவற்றை ஆசிரியர்
கூறியது கூறல் என்னும் குற்றம்படப் பின்னுங்கூறார் அல்லாமலும்
அவற்றின் வாக்கும் போக்கும் ஆசிரியருடையவற்றினின்றும்
வேறுபடுகின்றன. இன்னும் பார்க்கின் அவையில்லாமலே சரிதம்
தொடர்ந்து செல்கின்றதும் காணலாம். காஞ்சிபுரம் சபாபதி
முதலியார், ஆறுமுகத் தம்பிரானார் முதலிய ஆசிரியர்கள் அவற்றை
வெள்ளிப் பாடல்கள் என்றே கொண்டனர்.
இவைபற்றி எனது
சேக்கிழார் என்ற நூலில் இடைச்செருகல்கள் என்ற பகுதியிற்
பொதுவா யுரைத்தனவும், 212 - 213-ம் பக்கங்களிற் கண்டனவும்
பார்க்க. இக்காரணங்களால் அவை இடைச்செருகல்கள் என்று
அறியப்படுதலின் இங்குப் பதிக்கப்படவில்லை. ஆயினும் சில
பிரதிகளிற் காணப்படுதலால் இப்புராண இறுதியிற் குறிப்புக்களுடன்
பதிக்கப்பட்டன.
|