813.
|
அண்ணலார்
திருக்கா ளத்தி யடிகளார் முனிவ
னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத் திருநய னத்தி
லொன்று
துண்ணென வுதிரம் பாய விருந்தனர்; தூரத்
தேயவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல்விரைந்
தோடி
வந்தார். 164 |
813.
(இ-ள்.) அண்ணலார்.....காட்ட - பெருமையுடைய
காளத்தியப்பர் சிவகோசரி முனிவனாருக்குத் திண்ணனாரது
அன்பின் றிறத்தினைக் காட்டுவதற்காக; திருநயனத்தில்.....இருந்தனர்
- தமது திருக்கண்களுள் ஒன்றிலே துண்ணென்று இரத்தம் பாய்ந்து
வெளியே ஒடி வழியுமாறு காட்டி யிருந்தனராக; அவ்வண்ண
வெஞ்சிலையார் - அந்த அழகிய கொடிய வில்லினையுடைய
திண்ணனார்; தூரத்தே கண்டு - அதனைத் தூரத்திற் கண்டு;
வல்விரைந்து ஒடிவந்தார் - மிக விரைவாக ஒடிவந்தனர். 164
813.
(வி-ரை.) அண்ணலார் - பெருமையினையுடையார்.
திண்ணனாரையும், அவரது பரிவு காட்டிய வழியால்
முனிவனாரையும் ஆட்கொள்ளும் கருணையின் பெருமைபற்றி இங்கு
இப்பெயராற் கூறினார்.
அடிகளார்
- மிகப் பெரியவர். பெரியாரிலெல்லாம் பெரியார்
என்றபடி. அண்ணலார் அடிகளார் - என இரண்டு முறை
பெருமையே குறித்தது திண்ணனாரும் முனிவனாரும் ஆகிய
மாறுபட்ட இருவரையும் ஒக்க ஆட்கொண்ட பெருமையும், அதன்
பொருட்டுத் தாம் உருவத்திருமேனி தாங்கிநின்று கண்கள்போல
உருக்காட்டி அவற்றில் மாயா காரியம்போன்ற உதிரமும் காட்டிநின்ற
எளிமையும் கருதியது.
திண்ணனார்
பரிவு - பண்புத் தற்கிழமைப் பொருளில் வந்த
ஆறாம் வேற்றுமைத்தொகை. பரிவு காட்ட -
முனிவனார்க்குத்
திண்ணனாரது பரிவினைக் காட்டுதற்குக் கண்ணில் ஒன்றில்
உதிரம்பாய, அது கண்டு திண்ணனார் தமது கண்ணையிடந்து அப்ப,
அச்செயல் அதனைத் தூண்டிய பரிவினை எடுத்துக் காட்ட, அதனை
முனிவர் காண என்றிவ்வாறு ஒன்றனையொன்று பற்றிய சாதனமாய்
உதிரம்பாய இருத்தல் பரிவு காட்டிற்று என்க. "நீங்காக் குணத்துக்
கோசரிக் கன்றவ, னேசங் "என்ற கல்லாடதேவர் அருளிய
திருமறமும் காண்க.
திருநயனத்தில்
- நயனங்களில் சாதியொருமை. ஒன்று -
வலது கண். 824 பார்க்க. நயனம் ஒன்று என்றதனால்
உருவத்திருமேனியும், காளத்தி அடிகளார் என்றதனால்
அதற்குக்
காரணமாய் முன்போந்த அருவுருவத்திரு மேனியும், அண்ணலார்
என்றதனால் அதற்கு முன்னின்ற அருவத்திருமேனியும் குறித்தபடி
காண்க. "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த,
அருமேனி யதுவுங் கண்டோ மருவுரு வான போது, திருமேனியுபயங்
கண்டோஞ் செப்பிய மூன்று நந்தங், கருமேனி கழிக்க வந்த
கருணையின் விளைவு காணே" (சித்தி - 2) என்ற உண்மை நூல்
உரையும்காண்க. "செல்வன்றிருக்கா ளத்தியு ளப்பன், திருமேனியில்
மூன்று கண்ணா யாங்கொரு கண்ணிலு முதிர, மொழியா திருந்தனனாக" (திருமறம்) என்றபடி
காளத்தியடிகளாரது
சிவலிங்கத்திருமேனியில் ஒருமுகமும் அதில் மூன்று கண்களும்
காணப்பட்டு அவற்றுள் வலக்கண்ணில் உதிரம் துண்ணென்று
பாயும்படி பெருமான் இருந்தனர் என்றதாம்.
உதிரம்
துண்ணெனப் பாய - இரத்தம் விரைந்து ஓடிச்
சிந்த. இருந்தனர் - தோற்றங் காணுமாறு
செய்து வீற்றிருந்தருளினர்.
மாயாகாரியமாம் ஏழு தாதுக்களா லாகிய உடம்பு அவர்க்கு இல்லை
யாதலின் உதிரம் பாய்ந்ததில்லை. "மந்திரமே சோரியா" எனவும்,
"இந்திர சாலம் புரிவோன் யாவரைவும் தான் மயக்கும், தந்திரத்திற்
சாராது சார்வதுபோல்" எனவும் கந்தர் கலிவெண்பாவினுள்
உரைத்தவை காண்க. உதிரம் பாய்வதுபோன்ற காட்சியே
காணப்பட்ட தென்பது கருத்து.
அவ்வண்ண
வெஞ்சிலையார் தூரத்தேகண்டு - அகரம்
முன்னறி சுட்டு. யாவர் காணும் பொருட்டுத் தேவர் அவ்வாறு
இருந்தனரோ அந்தச் சிலையார் என்க. சிலையார் -
வில்லையுடையவராகிய திண்ணனார். அவ்வண்ணம்
வருந்திய
என்க.
தூரத்தேகண்டு
- அன்பு மேலீட்டினால் அத்தனுக்கு அடுத்த
தென்கொல் என அதுவே கவலையாக வந்தனராதலின் தூரத்தே
கண்டனர். கண்டு - இருந்த நிலையை எனச்
செயப்படு பொருள்
வருவிக்க.
வல்
- விரைந்து - ஒரு பொருட் பன் மொழி மிகுதி
குறித்தன. மிக்க விரைவில் என்க. சேயினிடத்துப் புண்கண்ட
தாயின் பரிவும் செயலும் இங்குக் கருதுக.
இத்திருப் பாட்டுமுதல்
"நின்றசெங் குருதி கண்டார்" (823)
என்பது வரை ஒரு தொடராகக் கொண்டும், இவற்றில் வரும்
கண்டார் - முதலிய வினை முற்றுக்களை யெல்லாம்
முற்றெச்சங்களாகக் கொண்டும் உரை கூறுவர் சுப்பராயச் செட்டியார்.
குருதிகண்டபின் திண்ணனார்பால் தனித்தனி நிகழ்த்தமன
நிகழ்ச்சிகளையும், அவற்றிற் கேற்ற புறச் செயல்களையும் தனித்தனி
வேறுநாட்டிக் குறிக்குமாறு முற்று வினைகளாற் கூறிய ஆசிரியர்
கருத்துக்கு அவ்வுரை பொருந்தா தென்க. அவ்வாறு கொள்ளுதற்கு
வேறு காரணமுமில்லை என்பது. 164
|