817.
|
வேடரைக்
காணார்; தீய விலங்குகள் மருங்கு மெங்கு
நாடியுங் காணார்; மீண்டு நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர்
வார;
168
|
817. (இ-ள்.)
வெளிப்படை. (அவ்வாறு தேடிய திண்ணனார்)
வேடர்களைக் காணார் தீய விலங்குகளைப் பக்கங்களிலும் வேறு
எங்கும் நாடியும் காணார்; மீண்டு திருக்காளத்தியப்பரிடம் வந்து
நீடிய பெருஞ் சோகத்தோடு நிறைமலர்ப் பாதங்களைப் பிடித்துப்
பக்கம் பொருந்தக் கட்டிக் கொண்டு, கண்ணீர் பெருகக்
கதறுவாராகி, 168
817.
(வி-ரை.) வேடரைக்
காணார் - இத்தீங்கினைச்
செய்திருக்கக் கூடுமென்று தாம் எண்ணிய பகையிரண்டனுள்
முதலில் எண்ணியபடி வேடர்களைக் காணார்; ஆதலின் அதன்பின்
தீய விலங்கின் சாதியைத் தேடினார்.
விலங்குகள்........காணார்
- விலங்குகள் பகலில் வெளியிற்
றங்காது ஒளியிடத்துப் பதுங்கிக் கிடக்கு மாதலின் அவ்விடங்களை
மருங்கும் எங்கும்
என்றார். மருங்கும் என்பது
அணிய
இடங்களையும், எங்கும் என்றது காட்சிக்குச் சேய பதிவு
இடங்களையும் குறித்தன. காணார் - காணார்
- ஒன்றுபோலவே
ஐயப்பட்ட இரு பகைகளும் காணாவாயின என்பார் காணார் என்ற
சொல்லால் இரண்டிடத்தும் குறித்தார்.
மீண்டு.......வந்து
- தீங்குசெய்தன பகை என்றெண்ணியபடி
பகைகள் காணாமையின் பழிவாங்கும் வீராவேசம் இதனுட் குறைந்து
விடவே, புண்ணுக்குத் தீர்வு தேடாமலும், இத்தனைபொழுது
தேவரைப் பிரிந்தும், தாழ்த்தோமே என்ற நினைவு வந்தது. வரவே,
பகை தேடித் திரிந்த சேய காட்டினின்றும் விரைந்து மீண்டு
தேவரிடம் வந்தனர். நாயனார் - தலைவர்
- காளத்தியப்பர். நீடிய
சோகம் - பெருகிய வருத்தம். துன்பங் கவலை என்பவற்றின்
மிகுதியால் உளதாகும் விளைவு சோகம் எனப்படும்.
நாயனாரது
கண்ணிற் குருதி பாயப்பாய இவரது சோகமும் பெருகுகின்றது.
ஒருவனுக்கு இரத்தம் பெருக வெளிப்படின் (loss of blood)
அவனுக்குச் சோகமுளதாம் என்பர். ஆயின் இங்குக் காளத்தி
நாயனார் வடிவமும் திண்ணப்ப நாயனார் வடிவமும்
சிவோகம்பாவனையினால் ஒன்றேயாய் அன்பு வடிவமாயினமையின்
அவர்க்குக் குருதி பாயப்பாய இவர்க்குச் சோகம் நீடிற்று என்பதும்
குறிப்பு.
நிறைமலர்ப்பாதம்
- மலர் நிறை பாதம் என்க. "நின்போ
லமரர்கணீண்முடி சாய்த்து நினைந்துகுத்த, பைம்போ துழக்கிப்
பவளந் தழைப்பன பாங்கறியா
யென்போ லிகள்பறித் திட்ட விலையு
முகையுமெல்லா, மம்போ தெனக்கொள்ளுமையனை யாறனடித்தலமே"
(திருவிருத்தம்) என்றபடி மேலாகிய விண்ணவர்களும் அவரின்
மேலாகிய அடியவர்களும் நிறைய இட்ட மலர்களையுடைய பாதம்
என்பது. "அட்டபுட்ப மவைகொண்டடி போற்றி நல்ல, கரியவனான்
முகனும் மடியும் முடியும் காண்பரிய, பரியவன்" (நட்டராகம் -
பழமண்ணிப் படிக்கரை - 8) என்ற நம்பிகளது தேவாரமும் காண்க.
"முடியால் வானவர்கள் முயங்குந் திருக்காளத்தியாய்" என்ற
ஆளுடையபிள்ளையாரது இத்தலத் தேவார (7) மும், "கடவுள்மால்
வரையி னுச்சியதிர்தரு மோசை யைந்து" (750) என்றதும்
இம்மலையிற்றேவர் பூசித்தலை உணர்த்துவன. அன்று காலை
சிவகோசரி முனிவர் அருச்சித்த நிறைந்த பூக்களையுடைய பாதம்
என்றலுமாம். யாங்கணும் நிறைந்த செந்தாமரை மலர்போன்ற பாதம்
என்றலும் பொருந்தும். இதற்கு, மணம் நிறைந்த மலர்போனற் பாதம்
என்றும், தேன் நிறைந்த மலர்போன்ற என்றும், தமது
உள்ளக்கமலத்தில் நிறைந்த என்றும் பற்பலவாறுரைப்பாருமுண்டு.
மாடுஉறக்
கட்டிக்கொண்டு - திருமேனியின் பக்கம்
பொருந்தத் தழுவிக் கட்டிக்கொண்டு.
கதறுதல்
- பெருந்துக்கத்தால் ஓலமிட்டுக் கதறுதல்.
வார்தல்
- பெருகுதல். ஓழுகுதல். ஓலமிட்டுக் கதறும் வகை மேல்வரும்
பாட்டிற் கூறுவார்.
"பார்த்து
நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று, வாய்ப்புனல்
சிந்தக் கையிலூனொடு கணைசிலை சிந்த" (814), நிலம்படப்
புரண்டு நெடிதினிற் றேறிச் (815), சிலைக்கொடும்
படைகடி
தெடுத்துப் படுத்தவ, ரடுத்த விவ்வனத் துளரெனத் திரிந்தாஅங்,
கின்மை கண்டு (815 - 816 - 817), நன்மையிற் றக்கன மருந்துகள்
பிழியவும் பிழிதொறு, நெக்கிழி குருதியைக் கண்டு நிலைதளர்ந்
(819 - 820 - 821) தென், னத்தனுக் கடுத்ததென் னத்தனுக் கடுத்த
தென் னென், றன்பொடு கனற்றி" (817 - 818) என்று
திக்கண்ணப்பதேவர் திருமறத்தில் நக்கீரதேவர் அருளியதனை
ஆசிரியர் விரித்தருளிய திறங் காண்க. 168
|