854.
|
மன்னவன்
வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தா நாதனை நேரே காணு
மந்நெறி தலைநின் றானென் றரசனை விரும்பித்
தாமு
மின்னெறித் தனைய வேணி விகிர்தனை வணங்க
வந்தார். 24
|
854. (இ-ள்.)
வெளிப்படை. அந்த அரசனது வருத்தத்தைக்
கேள்விப்பட்டுக் குற்றமற்ற புகழும், நன்னெறி யொழுகும்
ஒழுக்கமும் உடைய கலயனார் இறைவனை நேர் காணும்
அந்நெறியிலே தலைநின்றான் என்று அவ்வரசனை விரும்பி,
மின்னல் நெறிகொண்டாற்போன்ற சடைமுடியுடை விகிர்தராகிய
சிவபெருமானை வணங்குதற்பொருட்டு வழிபட்டனர். 24
854.
(வி-ரை.) கேட்டு - கேட்டவுடனே, கேட்டலும்.
மாசறு
புகழ் - எவ்விதக்குற்றமும் இல்லாத புகழ்,
குற்றநீங்கிய புகழ். இது நன்னெறி நிற்றலோடிணைந்த தென்பார்
புகழின் மிக்க நன்னெறி என்றார். இப்
புகழ் இயல்பினால்
இல்வாழ்க்கை வாழ்ந்து ஈகையிற் சிறத்தலான் வருவதென்பர். இங்கு
நாயனாரது புகழ் தமக்கொப்பில்லாத (843) ஈகையால் வந்த செய்தி.
மேற்சரித நிகழ்ச்சியால் உலகறிந்து போற்றப்பட்டமையின்
மாசறுபுகழ் என்று இங்கு எடுத்துக்காட்டினார். இதுபற்றியே
தொடக்கத்தில் "பொங்கிய புகழின் மிக்கார்"
(830) என்று
தேற்றம்பெறக் கூறியதும்காண்க.
நாதனை
நேரேகாணும் அந்நெறி தலைநின்றான் என்று
- பிறிது கருத்தின்றி இறைவனை நேர்கண்டு கும்பிடும் அந்நெறிபற்றி
நின்றான் என்றமையால். விரும்பி - அரசன் நற்செயலை
விரும்பியபடியால் அவனை விரும்பினார். இஃதில்லையேல்
அரசனைக் காணுதல் விரும்பார் என்பது. சிவவழிபாட்டில் அரசன்
கொண்ட விருப்பமே இவர் விருப்பத்தை அவன்பாற் செலுத்தியது
என்க.
மின்நெறித்து
அனைய வேணி - மின்னல்தான் உருப்பட்டு
நெறிவும் செறிவும் கொண்டுவந்தாற் போன்ற சடை.
விகிர்தன்
- மாயையைப் பலப்பல பேதப்படுத்தி
உயிர்கட்குப் பற்பலவிதமாகிய தனு கரண புவனம் போகங்களாக
ஆக்கியும் போக்கியும் அளித்தும் செயல்செய்ய வல்லவன்.
வேணி
விகிர்தன் - சடையப்பர் என்ற இத்தலச் சுவாமி
பெயர்க் குறிப்பு.
வந்தார்
- திருக்கடவூரினின்று புறப்பட்டுத்
திருப்பனந்தாளுக்கு வர வழிப்பட்டனர் என்றபொருளிற் வந்தது.
அருளினாலே; பண்பில்நீடி
- உதவும் நாளில் - அரசன்
கலையுற்று அழுங்கிச் செல்ல, கலயனார் - கேட்டு - நெறி
தலைநின்றானென்று - விரும்பி - விகிர்தனை வணங்க வந்தார் என
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து உரைத்துக் கொள்க.
|