874.
|
மாறில்பெருஞ்
செல்வத்து வளம்பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடைக்கற்றை யந்தணர்த மடியாராம்
ஈரில்பெருந் திருவுடையா ருடையாரென்
றியாவையுநேர்
கூறுவதன் முன்னவர்தங் குறிப்பறிந்து
கொடுத்துள்ளார். 9 |
(இ-ள்.)
ஒப்பற்ற பெருஞ்செல்வத்தின் வளங்கள் பெருகவே
அவ்வளங்கள் யாவையும், கங்கையாறு உலாவும்சடை முடியுடைய
சிவபெருமானது அடியவர்களாகிய முடிவில்லாத
பெருந்திருவுடையவர்களே உடையவர்களாவார் என்று கொண்டு
அவையெல்லாவற்றையும் அவர்கள் நேராகக் கூறு முன்னமே,
அவர்களது மனகுறிப்பை அறிந்து கொடுத்து வந்தார்.
(வி-ரை.)
மாறு இல் பெரும் செல்வத்தின் வளம் -
விழுமிய வேளாண்குடிமையால் வந்ததனை மாறுஇல் என்றும்,
அரசர் சேனாபதிக்குடியான் வந்ததனைப் பெரும் என்றும்
சிறப்பித்தார். இவ்விருவகையின் வந்த செல்வங்களையுமுடைய
ரென்பதாம். "உழவேதலை" என்றாராதலின் அதனை முதற்கண்
வைத்ததுமன்றி, மாறுஇல் - என்றும் சிறப்பித்தார்.
441 - ல்
உரைத்தவை பார்க்க. மாறு இல் செல்வம் - பெருஞ் செல்வம்
என்று தனித்தனி கூட்டுக. செல்வத்தின் வளம்
-
சாதியொருமையாதலின் மற்றது எலாம் என ஒருமையிற்
கூறினார்.
அடியாராம்
ஈரில் பெருந் திருஉடையார் உடையார்
என்று - அடியார்கள் இறைவனையே தமது செல்வமாகப்
பெற்றவர்கள் என்பது. அடியார்கள் முத்தித்திரு வசித்தற்
கிடமாயிருக்கின்றாராதலின் இவ்வாறு கூறினார் என்றும்,
அக்காரணத்தால் அநித்தியமாகிய பொருள் நித்தியமாகிய பயனைக்
கொடுத்து நிலவுதற்கு வைப்பிடமவர்களேயாதலின் உடையார்
என்றாரென்றும் உரைப்பர் ஸ்ரீ ஆறுகத் தம்பிரான் சுவாமிகள். தமது
அழியும் தன்மையுடைய பொருள்போலல்லாது அழிவில்லாத
தொன்றாதலின் ஈறில் திரு என்றும், எல்லாச்
செல்வங்களுக்கும்
மேலாய் ஏனை எல்லாவற்றையும் தன்னுள் அடக்குதலின்
பெருந்திருவென்றும் கூறினார். "கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்"
(143), "யாதுங் குறைவிலார்" (144) என்றபடி இறைவனாகிய பெருஞ்
செல்வமுடையவர் அடியார்களாவார். எல்லாச் செல்வங்களையும்
தன்னுள் அடக்கிய பெருஞ் செல்வமாகிய இறைவனையே அவர்கள்
உடையவர்களாதலின் தமது செல்வங்களையும் அவர்களே
உடையாராயினார் என்றுணர்ந்தொழுகியவர் இந்நாயனார். என்று
-
என்று உட்கொண்டவராதலின் - துணிந்தவராதலின் - என்று
-
அறிந்து - கொடுத்துள்ளார் என்க.
உடையார்
- உடையார் - அதனை உடையவராதலின்
இதனையும் உடையவராவர். முன்னது பெயர் - பின்னது குறிப்பு
வினைமுற்று.
யாவையும்
- முற்றும்மை. ஒன்றும் விடாமல். பின் சரிதக்
குறிப்பு.
நேர்கூறுவதன்
முன் அவர்தங் குறிப்பு அறிந்து - பின்
சரிதக் குறிப்பு. 894 - 895 பார்க்க. அறிந்து கொடுத்துள்ளார்
என்ற இப்பாட்டால் அவரது நியதியாகப் பூண்டொழுகிய ஒழுக்கம்
கூறினார்.
கொடுத்துள்ளார்
- கொடுத்ததனால் உளராயினார் என்க.
"உளரானார் உளரானார்" (திருநா - புரா - 16) என்புழிப்போலக்
காண்க. குறிப்பு அறிந்து செய்தலாற் காரணப் பெயர் பூண்ட
திருக்குறிப்புத் தொண்டனார் வரலாற்றை இங்கு நினைவு கூர்க.
(திருக்குறிப்பு - புரா - 112)
உடையார்
என்று தொண்டர்க்கே ஏவல் செய்யும் -
தொழில் பூண்டு நின்றதனால் அவர்க்கே தன்மையும் தம்
சுற்றத்தாரையும் உடைமையும் ஒப்புவித்தார். ஆதலின் எல்லாம்
அவர்களுடையனவே என்றெண்ணியமையால் கொடுத்துள்ளார்
என்று விளக்கியவாறு.
அங்கணர்
தம் - என்பதும் பாடம். 9
|