878.
|
காப்பணியு
மிளங்குழவிப் பதநீங்கிக் கமழ்சுரும்பின்
பூப்பயிலுஞ் சுருட்குழலும் பொலங்குழையு முடன்றாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற்
றாடையுடன்
கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல்
லடியொதுங்கி, 13 |
878.
(இ-ள்.) காப்பு அணியும்......நீங்கி -
காப்பினை
அணிகின்ற இளங்குழவிப் பருவத்தைக்கடந்து; கமழ்......தாழ -
வண்டுகள் மொய்க்கின்ற மணமுடைய பூக்களை முடிக்கும் சுருண்ட
கூந்தலும் பொன்னாலியன்ற குண்டலமும் ஒருங்கு வடிந்து தாழ;
யாப்புறு.........அசைய - கட்டிய மெல்லிய சிறிய மணிகளையுடைய
மேகலையணிந்த சிற்றாடையுடனே, கோக்கப்பட்ட கிங்கிணி அசைய;
குறுந்தளிர்.......ஒதுங்கி - சிறிய தளிர்போன்ற மெல்லிய அடிகளினால்
ஒதுங்கி நடந்து; 13
878.
(வி-ரை.) காப்பு அணியும்
இளம் குழவிப் பதம் -
பதம் - பருவம். 279 - 667 பாட்டுக்களில் உரைத்தவை பார்க்க.
இப்பருவம் இரண்டாம்மாதத்திறுதியில் நிகழ்வது என்ப. பிணி
முதலாயின பீடைகள் வரும் மூன்று வகைகளுள் ஆதி பௌதிகம்,
ஆத்தியான்மிகம் என்ற இரண்டு வகையாலும் வருவனவற்றை
வாராது தம்மறிவுகொண்டும் பெரியாரைத் துணைக்கொண்டும்
தாங்கள் காத்துநிற்க, ஆதி தெய்விகத்தான் வரும் ஏதங்கள் வாராது
காக்க அத்தெய்வங்களைத் துதித்துக் காப்பணிவது மரபு.
இதுபற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களுட் காப்புப் பருவம் முதலிற்
கூறுவதும் மரபாயிற்று.
சுரும்பின்
கமழ்பூப் பயிலும் எனமாற்றுக. சுருட்குழல்
-
சுருண்ட கூந்தல். சுருண்டிருத்தல் குழலுக்கு அழகு தருவதென்ப.
அறலியல் நறுமென் கூந்தல் என்று அணிந்து பலவாறு
பாராட்டப்படுவது காண்க. இங்குப் பருவ நோக்கி,
முடித்தறியப்படாது சுருண்டு தொங்கும் குழல் குறித்தது. பூப்பயிலும்
என்றதற்கு இனிப் பூ முடிக்கும் என்றாவது , பருவத்துக் கேற்றவாறு
சிறு பூக்களைச் சூடிய என்றாவது உரைத்துக்கொள்க. பூ மணம்
போன்ற இயற்கை மணங் கமழும் என்றுரைப்பினுமமையும். இங்கு
இப்பருவத்தே இவ்வாறு குழலைச் சிறப்பித்துக் கூறியது இக்குழல்
பற்றியே இச்சரிதம் நிகழும் குறிப்புக் காட்டுவது என்க.
குழலும்
குழையும் உடன்தாழ என்றது குழலை
முடிந்தறியாராதலின் அக்குழலும் காதில் அணிந்த வடிந்த குழையும்
ஒன்றுகூடித் தொங்கி விளங்கின என்பதாம். பொலம் குழை
-
பொன்னாலாகிய குழை என்னும் காதணி. இது மகர வடிவினதாய்ச்
செய்யப்படும். இங்கு மேகலை சிறிய மெல்லிய
மணிகளாற்
கோக்கப்பட்ட எண் கோவை குறித்ததென்பர். சிற்றாடை
- இளம்
பெண்குழவிகள் அணியும் சிறிய ஆடை. சிற்றாடையுடன்
கிண்கிணி அசைதலாவது - அடியொதுங்குந் தோறும் சிறிய
ஆடையும் கிண்கிணியும் உடனசைதல். கிண்கிணி -
ஒலியாற்
போந்தபெயர். காலணிவகையுள் ஒன்று. கால் பெயர்க்கும்
காலத்தெல்லாம் இவை கிண் கிண் என்று ஓசை செய்வதால்
இப்பெயர் பெறும். கோப்பு - கட்டப்பட்ட
வேலைப்பாடு.
அடி
ஒதுங்குதல் - தளர் நடை நீங்கிச் சிறிதே
அடிபெயர்த்து நடத்தல். இது ஓராண்டின் மேல் ஈராண்டளவில்
நிகழும் என்ப. தளர்நடைப்பருவம் என்றுங் கூறுவர். 13
|