888. |
அவ்வென்பி
னொளிமணிகோத் தணிந்ததிருத்
தாழ்வடமும்,
பைவன்பே ராவொழியத் தோளிலிடும் பட்டிகையு,
மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலு, மனச்
செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப்
பொக்கணமும், 23 |
888. (இ-ள்.)
அவ்வென்பின்..........தாழ்வடமும் - அந்த
எலும்பினாலாகிய ஒளியுடைய மணிகளைக் கோத்து
அணிந்துகொண்ட திருத்தாழ்வடமும்; பைவன்பேர்..........
பட்டிகையும் - படத்தினையுடைய வலிய பெரிய பாம்பு நீங்கத்
தோளில் இடுகின்ற யோகப்பட்டையாகிய உத்தரியமும்;
மைவந்த..........நூலும் - கரிய மயிரினால்
வடமாக முறுக்கப்பட்ட
பூணூலும்; மனச் செவ்வன்பர்...............பொக்கணமும்
செம்மையாகிய
மனத்தினையுடைய அன்பர்களது பிறவியை மாற்றுகின்ற
திருநீற்றுப்பையும்,
888.
(வி-ரை.) அவ்வென்பு - மேற்பாட்டிற்
சொல்லிய
எலும்பு. ஒருவன் உடல் அங்கம் என்ற திருமாலின் எலும்பு.
திருத்தாழ்வடம்
- மார்பிலணியும் அழகிய வடம் - மாலை.
இது உந்திவரை தாழும்படி அணியப்படுவதால் தாழ்வடம்
எனப்படும்.
பைவன்
பேர் அரவு ஒழிய - தாம் எப்போதும்
அணிந்திருக்கும் பாம்பு நீங்க. இறைவனுக்கு அரவம் தோளின்
மேல் மாலையாகக் கிடக்கும் என்ப. இங்குஅரவு கிடந்த இடத்தில்
பட்டிகையாகிய யோகப்பட்டம் பூண்டு வந்ததனால் அரவொழிய
என்றார். பை
- நஞ்சுப்பை. படம் என்றும் கூறுவர். "பைவாய்ப்
பாம்பரை யார்த்த பரமன்", "பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி"
என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. பைவனப்பேர்
என்பது
பாடமாயின் வன்னம் வனம் என நின்றதெனக்கொண்டு, பையின்
உருவத்தைத் தலையிற் கொண்ட பெரிய என்றுரைத்துக்கொள்க.
பையின் வனப்பு ஆகிய ஏர் (அமைப்பு) கொண்ட என்றலுமாம்.
பட்டிகை - யோகபட்டம்.
கேச
வடப் பூணுநூல் - மயிர்க்கயிற்றாலாகிய பூணுநூல்.
இதனைப் பஞ்சவடி
என்பர். 894 பார்க்க. மயிர்க்கயிறு
பூண்பது மாவிரதச் சைவர்க்குச் சிறப்பாயுரியது. இவர்களது
வடிவத்தைச் "சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு
மயிர்க்கயிறு தரித்தான் றன்னைப், பவந்தாங்கு பாசுபத வேடத்
தானை" என்ற திருத்தாண்டகத்தாலும் பிறவாற்றாலுமறிக. "சைவர்
பாசுபதர்கள் வணங்குஞ் சண்பை நகராரே" (ஆளு - பிள் -
தேவாரம்) "பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர், பலவேடச்
சைவர்" (திருஞான - புராண. 1018) முதலியனவும் பிறவும் இவ்வகை
அகப்புறச்சமய வேடங்களை உணர்த்துதல் காண்க. இவர்கள்
சிவபெருமானை எலும்பணிந்தமூர்த்தியாக வழிபடுவர்.
செம்மை
மன அன்பர் - என மாற்றுக. அன்பர் பவம்
மாற்றும் திருநீறு - திரு நீறு யாவர்க்கும் ஒன்று போலவே
பவம்போக்கி முத்திதரும் மருந்தாயினும், செம்மை மனத்தினை
உடைய அன்பர்க்கே சிறப்பாயும் விரைவாயும் அது பவம், மாற்றும்
என்பதாம். ஒரே மருந்து உடற்பக்குவமுடையார்க்கு விரைவிலும்,
அஃதில்லாதார்க்கு நாட்சென்று நலந்தருமாறு காண்க. பவம் -
பிறப்பு.
பைவளர்பேர்
- பூணநூலும் - என்பனவும் பாடங்கள். 23
|