906. |
அக்கு
லப்பதி தன்னி லற்நெறித்
தக்க மாமனை வாழ்க்கையிற் றங்கினார்
தொக்க மாநிதித் தொன்மையி லோங்கிய
மிக்க செல்வத்து வேளாண் டலைமையார். 4 |
(இ-ள்.)
வெளிப்படை. அந்த நல்லபதியில் தகுதிவாய்ந்த
பெருமையுடைய இல்வாழ்க்கையில் தங்கியவர் பழைமையாகக்கூடிய
பெரு நிதியினால்மிகுதியாகிய செல்வ நிறைந்த வேளாண்மையிற்
றலைமையாகியவர்.
(வி-ரை.)
குலப்பதி - குலம் - இங்கு நலங்
குறித்தது.
அறநெறி
- இவரது வாழ்க்கை முழுதும் அற நெறியில்
நின்றது குறித்தார்.
தக்க
- அவ்வாறு நின்றதினால் தகுதிபெற்ற. இல்லறத்தின்
தகுதி பற்றிக் "கற்றநூற் றுறைபோய்க் கடுமனைக்
கிழவ, னற்குண
நிறைந்த கற்புடை மனைவியோ டன்பு மருளுந் தாங்கி யின்சொலின்,
விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி, யைவகை வேள்வியு மாற்றி
யிவ்வகை, நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப், பிறன் மனை நயவா
னறன்மனை வாழ்க்கைக்கு, வரையா நாளின் மகப்பேறு
குறித்துப்,
பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே"...."அதனால், இந்நிலை
யிரண்டு மெம்ம னோர்க் கியலா" என்று குமரகுருபரசுவாமிகள்
சிதம்பரமும்மணிக்கோவையில்
விதந்து எடுத்தோதினர். இதுபற்றித்
திருவள்ளுவர் திருக்குறளில் வகுத்தோதியனவும், மற்றும் நீதி
நுல்களான் விதித்தனவும் காண்க. இப்பெருமை கருதியே மேலும்
மா மனைவாழ்க்கை என்றார்.
தொன்மையில்
தொக்க மாநிதியில் என்க. வழிவழியாக
ஈட்டித் தொகுத்த பெருஞ்செல்வம். இதனை "வழிவந்த செல்வம்"
(909) என்றதும் காண்க.
ஓங்கிய
மிக்க செல்வம் - முன் சொன்னது வழிவழி
வந்ததும், இது இவர் தாம் தேடியதும் ஆம். ஓங்கிய - என்றது
‘மேழிச் செல்வங்கோழை படாது' என்றபடி வேளாண் செல்வத்தின்
விருப்பமும், மிக்க என்றது அதன் மிகுதியும் பரப்பும் குறித்தன.
தக்க மாமனை அறநெறி வாழ்க்கை எனக்கூட்டுக.
தலைமையார்
- முதன்மை பெற்றவர் என்பதாம். இது
வேளாண் வகுப்பில் இவரது, முதன்மை என்ற
குடியை
உணர்த்தியது போலும். 4
|