919. |
"ஆட்கொளு
மையர் தாமிங் கமுதுசெய் திலர்கொ"
லென்னாப்
பூட்டிய வரிவாள் பற்றிப் புரையற விரவு மன்பு
காட்டிய நெறியி னுள்ளந் தண்டறக் கழுத்தி னோடே
யூட்டியு மரியா நின்றா ருறுபிறப் பரிவா ரொத்தார். 17 |
919. (இ-ள்.)
வெளிப்படை. "என்னை ஆட்கொள்ளும்
பெருமானார்தாம் இங்கு அமுது செய்தா ரிலர்கொல்!" என்று
கழுத்தினிற் பூட்டிய அரிவாளைப் பிடித்துக்கொண்டு, குற்றநீங்கப்
பொருந்தும் அன்புகாட்டிய வழியில் நெஞ்சங்குழல் பிளவுபட்டு
அறும்படி கழுத்தினோடு மிடற்றினை அரிவாராயினார்,
பொருந்திய பிறப்பினை அரிவார் போன்றார். 17
919. (வி-ரை.)
ஆட்கொள்ளும் ஐயர் - மேற்பாட்டில்
"ஆளவல்லார்" என்றதனைத் தொடர்ந்து இவ்வாறு கூறினார்.
ஆட்கொள்ளும் - ஆளாக அமைந்து செய்யும்
ஏவலை
ஏற்றுக்கொள்ளும். "கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்"
(திருவாரூர்) என்ற திருத்தாண்டகம் முதலியவை காண்க.
ஆட்கொள்ளும் என்றதற்கேற்ப ஐயர் - தலைவர்
- என்றார்.
தாம்
- அடியேன் ஊட்டும் பாங்கினன்றித் தாமாகவே
உவந்து. இங்கு - இவ்விடத்து. இந்தக் கமரில்.
செய்திலர்
கொல் - செய்தாரில்லை போலும். கொல்
-
அசைநிலை.
அரிசி முதலியன
கமரில் சிந்தக் கண்ட தாயனார், இனி
இறைவனது திருமுன் போவதிற் பயனில்லை என்று, போவது அங்கு
இனி ஏன்? (917) என்று எண்ணினார். ஆதலின், ஐயரே! தேவரீர்
எங்கும் நிறைந்தவர்; இந்தக் கமரும் உமது திருமேனியாமாதலின்
இப்பொருள்களை இங்கே அமுதுகொண்டருளல் வேண்டும்;
இல்லையேல் நியதி பிழைத்த எனது தலை வீழ்த்தத் தகுவதாம்"
என்று விண்ணப்பித்தனர்.
இவ்வாறு விண்ணப்பம்
செய்தனர் என்பது "இங்கே,
வெள்ளச்சடையாய்!, அமுது செய்யாவிடில் என் தலையைத்,
தள்ளத்தகும்" என்ற திருவந்தாதியாற் பெறப்படும். சொற் பல்காமைப்
பொருட்டு ஆசிரியர் அதனை இங்கு எடுத்துக் கூறாது, வழிநூலுட்
காணப்பட்டதனை ஈண்டுக்கொண்டு பெய்துரைக்க வைத்தார். "இங்கு
அமுதுசெய்தருளும் அப்பேறு பெற்றிலேன்" (918) என்றும், "இங்கு
அமுதுசெய்திலர் கொல்" என்றும் உரைத்த கருத்தும் அது. இதனைத்
தொடர்ந்து பின்னரும் "கமரில் வந்திங் கமுதுசெய் பரனே" (922)
என்றதும் காண்க.
இப்படி விண்ணப்பித்த
தாயனார், தாம் வேண்டியவாறு ஐயர்
அமுதுசெய்தருளிய குறிப்புப் பெறாமையின் "அமுது செய்திடப்
பெற்றிலேன் எல்லையில் தீமையேன்" எனத் துணிந்து, முன்
உட்கொண்டபடியே தலையைத் தள்ளும் பொருட்டு அரிவாள் பூட்டி
ஊட்டியை அரிவாராயினர் என்பது மேற்பாட்டிலுரைக்கப்பட்டது.
அக் குறிப்பாவன, என்றும் செஞ்சடை வேதியரை அமுது
செய்விக்கும் போது தாயனார் கேட்ட "விடேல்" என்ற ஓசை
முதலியவை போலும். அன்றி, ‘இன்று இங்கு அமுது செய்தமை
தெரியுமாறு இவ்வோசை கேட்க வேண்டும்' என உட்கொண்டனர்
என்றும் கொள்ளக் கிடக்கின்றது. இவ்வாறு கொள்ளாக்கால் பின்னர்
"விடேல் விடேல்" என்றோசையைப் பரமனாரமுது
செய்தருளியதற்கடையாளமாகத் தாயனார் கொள்ளுதற்கு
ஏதுவின்றென்க. இக் கருத்துப் பற்றியே தொடக்கத்தில் "கமரிற் புக்க
மாவடு விடேல் என்னோசை உரிமையாற் கேட்கவல்லார்"
(902)
என்றதும் இங்குச்சிந்திரக்கற்பாலது. "விடேல் விடேல்" என் றிருமுறை
மிகவும் கேட்ட குறிப்புமது. நாளும் நியதியாகக் கேட்பித்தார்
திருச்சிலம்பினோசையைக் கழறிற்றறிவார்நாயனார் ஒருநாட்
பூசைமுடிவிற் கேளாதொழிய, மதிமயங்கித், தம்மாற் பிழை
நேர்ந்ததென அஞ்சி உடைவாளை மார்பில் நாட்டுதலும், இறைவர்
விரைந்து அவ்வோசையினை மிகவுமிசைப்பித்தார் என்ற
சரிதம்
இங்கு நினைவு கூரத்தக்கது.
இறைவரது திருவருட்
குறிப்பினையும் திருவுள்ளத்தையும்
அவரால் ஆட்கொள்ளப் பெற்ற பெரியோர்கள் அறியவல்லார்கள்
என்பது "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும்
புகையுங், கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்
செய்கோலம் - (ஆளுடைய பிள்ளையார் - பியந்தைக்
காந்தாரம் -
3) என்ற திருப்புகலூர் வர்த்தமானீச்சரத் தேவாரத்தாலும், "வாது
செயத்திருவுள்ளமே", "வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே"
(ஆளுடைய பிள்ளையாரது) என்ற திருவாலவாய்த்
திருப்பாசுரங்களாலும், "பிழைத்துச் செவ்வியறியாதே திறப்பித்
தேனுக் கேயல்லால்" என்ற (திருநா - புரா - 280) ஆளுடைய
அரசுகள் சரிதத்தாலும், "பூசைக் கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்
சிலம்பினொலியளித்தார்" என்ற (கழறிற் - புரா - 24) கழறிற்றறிவார்
சரித வரலாற்றினாலும், பிறவாற்றாலும் தேற்றம்பெற அறியக்
கிடக்கும் உண்மையாம். ஒவ்வோர் பொருள்பற்றித்
தெய்வத்திருவுள்ளமறியும்படி, வாய்ச்சொல், நிமித்தம் அறிதல்,
குறிகேட்டல், உத்தரவு கேட்டல் முதலிய வழக்குக்கள் இந்நாளிலும்
சாதாரண மக்களிடத்தும் நிகழ்வது காண்க.
நியதியின்படி
ஓசை கேட்கப் பெறாமையால் "அமுது
செய்திலர் கொல்" என்று துணிந்த தாயனார், அத்துணிபுபற்றி
அன்பு காட்டிய நெறியினாலே கழுத்தினோடும் ஊட்டியும்
அரிவாராயினார். என்னா - என்று நிச்சயித்து.
பூட்டிய - "அரிவாள்
பூட்டி" என மேற்பாட்டிற் கூறியபடி பூட்டிய. "வாட்பூட்டிய" என்றது
திருவந்தாதி.
புரை
அற - குற்றம்நீங்க. புரை - "எல்லையில் தீமையேன்"
(918) என்ற அவை.
விரவும்
அன்பு காட்டிய நெறியில்......அரியா நின்றார் -
இவ்வாறு தலையைத் தள்ளும்படி தம் கழுத்தைத் தாமே
அரிந்துகொள்ளுதல் அற நூல்களால் விலக்கப்பட்ட தற்கொலை
என்ற பாவமாகாதோ? எனின், ஆகாது; இது பொருந்திய அன்பு
காட்டும் நெறியே யாகும் என்றதாம். "தீயில் வீழ்கிலேன் திண்வரை
யுருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே", "முட்டிலேன் தலைகீறேன்"
என்பன வாதிய திருவாசகங்களும், "உயிர்நீப்பர் மானம் வரின்"
என்ற திருக்குறளும், பிறவும் காண்க. நாயகனைப் பிரிந்த கற்புடை
மடவார் உயிர் துறத்தலும், துணை பிரிந்த அன்றில்கள் இறத்தலும்
போன்றவை விரவும் அன்பு காட்டிய நெறியேயாவன என்பதனை
இங்கு நினைவு கூர்க. "பேசாத நாளெல்லாம் பிறவாநாளே"
(திருத்தாண்டகம்), "சொல்லாதன கொழுநாவல்ல சோதியுட்
சோதிதன்பேர், செல்லாச் செவிமரந் தேறித் தொழாதகை
மண்டிணிந்த, கல்லாநினையா மனம் வணங்காத் தலையும்
பொறையா, மல்லா வவயவந் தானு மனிதர்க்கசேதனமே"
(பொன்வண்ணத்தந்தாதி - 42) என்றபடி இறைவனுக் காட்படாத
உடலும் அவயங்களும் தள்ளத் தகுந்தன என்பது ஞானநூற்
றணிபாம். இறைவனது "தூய நாணமலர்ப் பாதந் தொடர்ந்துளா"
ராகிய (907) தாயனார் அத்தொடர்பாலாகிய ஆட்செய்யப் பெறுந்
தன்மையின் நீங்கியதாக எண்ணிய போது, தலைமகனது
பிரிவாற்றாமையால் தலைமகள் அடையும் கையறு நிலையை
அடைந்தவராகி, அவ்வாறு பொருந்திய அன்பு காட்டிய
நெறியாலே இப்படித் துணிந்தனர் என்று ஆசிரியர் அமைதி
காட்டியது காண்க.
உள்ளத் தண்டு
அற - கழுத்தினுள்ளேயுள்ள
அழகிய
தண்டு அறும்படி. அன்பு நெறியினின்றும் மனது விலகாதபடி
என்றுரைப்பாரு முண்டு.
ஊட்டியும்
கழுத்தினோடே என மாற்றுக. மிடறும் - பின்
கழுத்தும். கழுத்து முழுமையும்.
அரியா
நின்றார் - தம் கழுத்தைத் தாமே அரிதல்
வலிந்தசெய லாதலானும், அதற்கு இங்குக் கொண்ட கருவி, போர்
வாள் முதலிய வலிய கருவியல்லாது அரிவாளே யாதலானும்,
அச்செயல் ஒரு வீச்சில் நிகழாது பின்னும் முன்னுமாக பன்முறை
அரிவாளை வலிந்து ஊன்றி ஈர்த்தலால் நிகழும் கால நீட்டிப்புக்
குறிக்க இவ்வாறு ஆநின்று என்ற நிகழ்கால இடைநிலை தந்து
கூறினார். அரியா நின்றார் - அரிந்து கொண்டு
நின்றார்
என்றலுமாம்; நிற்றல் - அச்செயலிற் பிழையாது
தொடர்தல்.
உறு
பிறப்பு அரிவார் ஒத்தார் - "பாசப் பழிமுதல்
பறிப்பார்போல" (460) என்றவிடத் துரைத்தவை பார்க்க. பிறப்பு
உறுகின்ற நிலையை அறக்களைந்து வீடு பெறுவார் போன்றார்
என்க. இச்செயலின் பின்விளைவும் குறித்தது.
அரியா
நின்றார் - அரிகின்றாராகிய அவர்.
வினையாலணையும் பெயர். அரியா நின்றார்
- ஒத்தார் என
முடிந்தது. 17
|