938.
|
முந்தைமறை
நூன்மரபின் மொழிந்தமுறை
யெழுந்தவேய்
அந்தமுத னாலிரண்டி னரிந்துநரம் புறுதானம்
வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை
யந்தமில்சீ ரிடையீட்டி னங்குலியெண்
களிலமைத்து, 13
|
938.
(இ-ள்.) முந்தை.......வேய் - பழைமையாகிய இசை
(க்கலை) வேத நூல்களில் மொழிந்த மரபின் முறைப்படி எழுந்து
வளர்ந்த மூங்கிலில்; அந்தம் - நுனியில்; நால் (இல்) - நான்கு
பங்கிலும்; முதல் (இல்) - அடியில்; இரண்டில் - இரண்டு பங்கிலும்;
அரிந்து - அரிந்து, இடைப்பட்ட பாகத்தை எடுத்து; நரம்பு....ஆக்கி
- சுரங்கள் எழும் தானங்களின் வந்த துளைகளின் வரிசையைச்
செய்து; முதல் வாயு வழங்குதுளை - முதலில் காற்று உண்டாக்கும்
துளையையும்; அந்தமில்........அமைத்து - கேடில்லாத
சிறப்பினையுடைய இடைவெளி ஒவ்வோர் அங்குல அளவில்
துளைகள் செய்து, 13
938. (வி-ரை.)
முந்தைமறை - உபவேதங்கள் நான்கில்
ஒன்றாகியது காந்தருவவேதம் என்னும் இசைக்கலையாதலின்
முந்தைமறை என்றார். உபவேதங்கள் நான்காவன
ஆயுள்வேதம்,
தநுர்வேதம், காந்தருவவேதம், அர்த்தவேதம் என்பன.
மறை
பொழிந்த மரபின் முறை எழுந்த வேய் - அதில்
விதித்த இலக்கணமமையும்படி எழுந்து வளர்ந்த மூங்கில். "உயர்ந்த
ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து, நாலு காற்றுமயங்கின்
நாதமில்லையாகலான், மயங்கா நிலத்தின்கண், இளமையும் நெடும்
பிராயமுமின்றி ஒரு புருடாயுப்புக்க பெரிய மரத்தை வெட்டி,
ஒருபுருடா காரமாகச் செய்து, அதனை நிழலிலே ஆற இட்டுவைத்து,
திருகுதல் பிளத்தல் போழ்ந்துபடுதல் செய்கை யறிந்து, ஒரு யாண்டு
சென்றபின் இலக்கணவகையான் வங்கியம் செய்யப்படும்" என்பது
அடியார்க்கு நல்லாருரை. (சிலப் - 3 - அரங்கே - 26). இவ்வுரைக்
குறிப்பிற் கண்டவற்றுள் மூங்கிலுக்குப் பொருந்துவன ஏற்ற பெற்றி
கைக்கொள்ளப்படும் என்க.
மூங்கிலினால்
மட்டும் அன்றிச் சந்தனம், செங்காலி,
கருங்காலி, வெண்கலம் என்றிவற்றானும் வங்கியம் என்னும்
குழற்கருவி செய்யப்படும் என்ப. இவற்றுள் மூங்கில் பொழுது
செய்யும் என்றும், உத்தமமென்றும் கூறுப. இங்கு ஆனாயர்
சிறப்புடைய உத்தமமாகிய மூங்கிற் குழற்கருவியினையே
கைக்கொண்டனர் என்பது வேய் என்றதனாலறிவிக்கப்பட்டது.
இதனையே மேல்வரும் பாட்டில் "எடுத்தகுழற் கருவியினில்"
என்றும், "இசைவேய்ங் குழலும்" (943) என்றும், ழுவேய்ங்
கருவிகளில்" (947) என்றும் கூறுகின்றார்.
அந்தம்
முதல் நால் இரண்டில் - அந்தத்தில் நாலில்,
முதலில் இரண்டில் என்று முறை நிரனிறையாகக் கூட்டிப் பொருள்
உரைக்க. அந்தம்- நுனி; முதல்
- அடி. அந்தம் - நுனி
என்பதும் "அதர்வசிகை", "ஓரும் வேதாந்தமென்றுச்சியிற்
பழுத்த"
முதலிய வழக்குக்களாற் காண்க.
நரம்பு
உறுதானம் - இசை பிறப்பதற்குக் காரணமாய,
வீணை, யாழ் முதலியவற்றில் தந்திரிகளையும், குழற்கருவியில் விரல்
உளர்துளைகளையும் குறிக்கும். ஆகுபெயராய் அதனால்
எழுப்பப்படும் சுருதிக்கு - இசைக்கு - ஆயிற்று. நரம்பு உறுதானம்
என்பது சுருதி கிளம்பும் இடம் என்ற பொருளில் வந்தது. இதனை
மெட்டு என்பது கிராமிய வழக்கு.
தானம்
வந்த துளை நிரை ஆக்கி - முதலில், சுருதி
எழும்பும் தானங்களையும் அவற்றிற்குத் துளை செய்யும்
இடங்களையும் வரிசைபெறக் குறித்துக்கொண்டு என்றதாம்.
இத்துளைகள் ஏழு. "ஏழுவிர லிடையிட்ட" (948)
என்றவிடத்துரைப்பவை காண்க.
வாயு
வழங்கு முதல்துளை என்க. காற்றுண்டாகும் துளை.
இடையீட்டின்
அங்குலி எண்களில் அமைத்து -
துளைகளுக்கு இடைவெளி ஒவ்வோர் அங்குலமாக இருக்கும்படி
துளை செய்து. 13
|