939. (இ-ள்.)
வெளிப்படை. இவ்வாறு எடுக்கப்பட்ட
வேய்ங்குழலாகிய துளையிசைக் கருவியில் எமது பெருமானுடைய
திருவைந்தெழுத்தினையும் தொடுத்தமுறையில் வரும்
ஏழிசைகளினுடைய சுருதி பெறும்படி வாசித்து, அதனால் வேறு
வழியிற் செல்லாமல் இசையினாற்றடுக்கப்பட்ட சராசரங்கள்
எல்லாமும் பொருந்த வரும் தமது கருணையுடன் கூடிய
இசையமுதத்தினை அளித்து செல்கின்றாராகியவர் (கோவலனார் -
943) அங்கோர் நாளில், 14
939. (வி-ரை.)
எடுத்த குழற்கருவி- (மேற்சொல்லியவாறு)
எடுக்கப்பட்ட குழலாகியகருவி, பருமையும்நீளமும்
இலக்கணத்துடனமைந்து, விரலிடையிட்ட விரலுளர் துளையும் ஊது
துளையுமுடைத்தாய்ச், சுரபேதங்கள் நிலைகுலையாமல்
அளவறுக்கப்பட்டு நின்ற வங்கியம் (சிலப். 3 - அரங் -
அரும்பதவுரை). தோற்கருவிகள் துளைக்கருவிகளாதியாக
எண்ணப்பட்ட இசை இன்னியங்களில் முதன்மை பெற்றதாய்
எடுத்துச் சொல்லப்பட்டது குழல் என்ற குறிப்பும் காண்க. குழலும்
யாழும் என்ற இரண்டினையுமே மிகச் சிறந்த இன்னிசைக்கருவிகளாக
எடுத்தும், இவ்விரண்டனுள்ளும் குழலை முதன்மை பெற்றதெனச்
சிறப்பித்தும் எடுத்தனர் நம்பெரியோர். "குழலினிதி யாழினி தென்ப"
என்ற திருக்குறள் காண்க. இவ்விரண்டும் சுரபேதங்களால் இனிய
மழலைபோலச் சொற்களின் ஓசையே விளைக்கும் தன்மையுடையன
என்ப.
தடுக்க
சராசரங்களெலாந் தங்க - இசையின் வசப்பட்ட
உணர்ச்சி நிறைவினாலே வேறு வழியிற் செல்லாமற் றடுக்கப்பட்ட
சரம் அசரம் ஆகிய எல்லாவுயிர்களும் அந்நிலையிலே தங்கும்படி.
இதனை 954 முதல் 962 வரை விரித்துக் கூறுவார்.
தம்
கருணை அடுத்த இசை அமுது - தமது கருணை
பொருந்திய இசையாகிய அமுது. திருவைந்தெழுத்துடன் கூடிய
இன்னிசையே இவர்க்குச் சாவா மூவா நிலையை யளித்தலால்
அமுது என்றார். துன்ப உணர்ச்சி நீக்கி இன்ப உணர்ச்சியை
எவ்வுயிர்க்கும் ஆக்குதலால் அமுது என்றார் என்றலுமாம்.
இசையினால் பல நோய்களும் நீங்குகின்றன என்பது மருத்துவநூற்
றுணிபுகளுள் ஒன்று. கருணை அடுத்த - இது எல்லாவுயிர்க்கும்
பயன்றருவதாக என்னும் தண்ணளி. தம் கருணை தங்க - தமது
கருணையில் மூழ்கும்படியாக என்றலுமாம்.
அளித்துச்
செல்கின்றார் - செல்லுதல் - பலநாளும்
கொடுத்து வந்த வழக்கமுடையராகுதல் குறித்தது. செல்கின்றாராகிய
கோவலனார் என்க. வினையாலணையும் பெயர். செல்கின்றார் -
புறம் போந்தார் (943) எனக் கூட்டி முடிக்க.
அமைத்து - வாசித்து
- அளித்து - செல்கின்றாராகிய -
கோவலனார் - நுழுதி - செருகி - புனைந்து - புறங்கட்டி -
ஒளிதயங்க - கவின் விளங்க - அணிந்து - தாழ - அசைய -
விளங்க - சூழ - புறம் போந்தார் என இந்த ஆறு பாட்டுக்களையும்
கூட்டி முடித்துக்கொள்க.
ஒருநாள்
- அஃது ஒப்பற்றநாள். சிவபெருமான் நேரே
எழுந்தருளி இவர்க்குப் பேறு கொடுக்கும் பெருந்திருநாள் என்பது
குறிப்பு. 14