942.
|
நிறைந்தநீ
றணிமார்பி னிரைமுல்லை முகைசுருக்கிச்
செறிந்தபுனை வடந்தாழத், திரடோளின் புடையலங்க
லறைந்தசுரும் பிசையரும்ப, வரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலிதானைப் பூம்பட்டுப்
பொலிந்தசைய, 17 |
942.
(இ-ள்.) நிறைந்த........தாழ - நிறைவாகத் திருநீற்றினை
அணிந்த மார்பினிடத்து வரிசையாக முல்லையரும்பினைச் சுருக்கி
நெருங்கப் புனைந்த மாலை தாழ்ந்து தொங்க; திரள் தோளின்......
அரும்ப - பருத்த தோள்களின் மேல் அணிந்த மாலையின் பூக்கள்
- அவற்றின் மொய்த்து வண்டுகள் பாடிய இசையினால் மலர; அரை
உடுத்த........அசைய - திருவரையில் உடுத்த மரவுரியாடையின்
புறத்தில் தழைகளாலியன்ற அழகியபட்டுப்போன்ற மேலாடை
அழகாக அசைய, 47
942.
(வி-ரை.) முல்லைமுகை - முல்லை நிலத்துக்
கருப்பொருளாகிய பூ; இது மரபுக்கும் உரியதா மென்பர். மார்பின்
விளங்குவதாகலின் இதனை முல்லை என்று இங்கு
விரித்துக்
கூறினார். முன்னர்ச் "சிகழிகையிற் செறிகண்ணித் தொடை
"யினையும் (940), பின்வரும் தோளின்புடை யலங்கலினையும்
இன்னவெனக் கூறாமையும் இதன் சிறப்புக் காட்டுதற்காம். முல்லை
நிரைமுகை என்க. சுருக்கிச் செறிந்த புனைவடம்
என்பது
முல்லைப் பூக்களை நெருங்கக்கோத்துப் புனையும் மாலைவகை.
மார்பின் வடம் தாழ என்றுகூட்டுக. நீறணி
மார்பின்
முல்லைவடம் தாழ - மார்பில் விளங்கும் திருநீற்றுப்
பொலிவினுக்கு முல்லை மாலையின் பொலிவு குறைந்து காட்ட
என்ற குறிப்புமாம். முன்பாட்டில் "திருநீற்றின் ஒளி........ஆராக்கவின்
விளங்க" என்று கூறியதனைத் தொடர்ந்து கூறினார்.
தோளின்புடையலங்கல்
- மார்பில் தாழும் முல்லை
மாலையின் பக்கத்தே தோளில் விளங்கும்படி அணிந்த வேறு
மாலை.
சுரும்பு
அறைந்த இசை அலங்கல் அரும்ப என்க.
அறைந்த இசை - பாடிய இசையினால்; அரும்ப
- மலர;
காரணப்பொருளில் வந்த மூன்றனுருபுதொக்கது. அலரும்
பருவமுடைய மலர்களால் அலங்கல் தொடுக்கப்பட்டதனால்
அம்மலர்களினிடத்துத் தேனுண்ண மொய்க்கும் வண்டுகளின்
இசையினால் அவை அலர்ந்தன என்றபடி. அறைந்த சுரும்பு எனக்
கூட்டி, மோதி வீழ்ந்த வண்டுகள் என்றுரைத்து, அலங்கலில் வீழ்ந்த
வண்டுகள் இசைபாட என்று உரை கூறுவாருமுண்டு. புறம் - பட்டு
- பொலிந்து - அசைய என்க.
தானை
அசைய - தானை - ஆடை. மரவுரியினை
இடையில் உடுத்து அதன் மேல் தழையாற் புனைந்த மேலாடை
இருபுறமும் தொங்க அணிந்தனராதலின் அசைய
என்றார்.
பூம்பட்டு - பூ - அழகும் மேன்மையும் குறித்தது. 17
|