943.
|
சேவடியிற்
றொடுதோலுஞ் செங்கையினில்
வெண்கோலு
மேவுமிசை வேய்ங்குழலு மிகவிளங்க, வினைசெய்யுங்
காவல்புரி வல்லாயர் கன்றுடையா னிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப்
புறம்போந்தார். 18 |
943.
(இ-ள்.) வெளிப்படை. சிவந்த திருவடியிலே
தொடுதோலும், செங்கையிலே வெள்ளியகோலும் பொருந்திய
இசையினைத் தரும் வேய்ங்குழலும் மிக்க விளக்கத்தைச் செய்யத்,
தமது ஏவலின்படி தொழில் செய்யும் காவல்புரிகின்ற வலிய
ஆயர்களும், கன்றுகளோடு கூடிய ஆனிரைகளும் தம்மைச்
சூழ்ந்துவரப், பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த கோவலராகிய
ஆனாயர் ஆனிரை காப்பதற்குப் புறம்போந்தனர். 18
943.
(வி-ரை.) சேவடியில் தொடுதோல் - தொடுதோல்
- செருப்பு. முல்லைப் புறவில் ஆனிரை மேய்ப்போருக்குச் செருப்பு
இன்றியமையாத சாதனமாம். காட்டில் வேட்டையாடுவோர்க்கும்
இவ்வாறே காண்க. கண்ணப்ப நாயனார் சரிதமும் குறிக்க. இந்த
இரண்டு நாயன்மார்களும் செருப்புத் தொட்ட கோலத்துடனே
ஐயர்மருங்கு அமர்கின்றார்களாவர். அச்சிறப்புக் குறிக்கச் சேவடி
என்றார்.
வெண்கோல்
- ஆனிரைகளைச் செலுத்தும் சிறுகோல்.
"கோலுங் கயிறுங் கொண்டுகுழைக் குடுமி யலைய" என்றது
(சண்டீசர் புரா - 25) பார்க்க.
இசைமேவும்
என்க. இச்சரிதம் இசையினாற் பொருந்துவதாம்
என்ற குறிப்பும் காண்க. மிக விளங்குதல் -
இம்மூன்றும் தேற்றம்
பெற விளங்கித்தோன்றுதல்.
வினை
செய்யும் - நாயனாரின் ஏவல் வழி தொழில்
புரிகின்ற. "கோவலரேவல் புரித்திட" (937) என்றது காண்க.
காவல்புரி - ஆனிரைப் பகுதிகளைக் காக்கும்.
ஆயரும்
ஆனிரையும் சூழ என்க. எண்ணும்மைகள்
தொக்கன.
பூ
அலர் தார் - முல்லை முகைவடம் தாழ, அலங்கல்
அரும்ப, என முன்பாட்டிற் கூறிய பூக்கள் அலரும் மாலைகள்.
நிரைகாக்க
- அங்குநின்ற பசுக் கூட்டங்களின்
தொகுதியேயன்றிப் பசுவர்க்கம் எனப்படும் எல்லா
ஆன்மாக்களையும் இச் சரிதத்தாற் பாசநீக்கிக் காவல் பெறச்
செய்ய. திருமூல நாயனார், மூலன் மேய்த்த பசுக்களின் துயர்நீங்கச்
செய்த செயல், எல்லாப் பசு வர்க்கங்களும் உய்வதற்குரிய
திருமந்திரமாய் விளைந்தசெய்தியும் இங்குக்கருதுக. 18
|