951.
|
ஆயவிசைப்
புகனான்கி னமைந்தபுகல் வகையெடுத்து
மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரனிரையிற்
சேயவொளி யிடையலையத் திருவாள னெழுத்தஞ்சுந்
தூயவிசைக் கிளைகொள்ளுந் துறையஞ்சின்
முறைவிளைத்தார், 26 |
951.
(இ-ள்.) ஆய.......நான்கின் - உளவாகிய இசையின்
புகல் நான்கினிலும்; அமைந்த.....எடுத்து - கொடிப்பாலைக் கமைந்த
கூறுபாடாகிய திறத்தினை எடுத்து; மேய......நிரையில் - சுரம்
எழும்பும் ஏழு துளைகளில் விரல்களைப் பொத்துவதும்
விடுப்பதுமாகிய வரிசையின் செயல்களினால்; சேய ஒளி இடை
அலைய - இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்க;
திருவாளன் எழுத்து அஞ்சும் - சிவபெருமானது திருவைந்
தெழுத்தும்; தூய இசைக்கிளை கொள்ளும் - தூய்மையான இசையின்
ஏற்ற பகுப்பினைக் கொள்கின்ற; துறை அஞ்சின்முறை விளைத்தார்
- ஐந்து துறைகளின் ஏற்ற முறையினை விளைவித்தாராகி, 26
951. (வி-ரை.)
இசைப்புகல் நான்கு - பண், பண்ணியல்,
திறம், திறத்திறம் என்பன. இவற்றைத் திதிப்புகல், பிரக்கிரமப்புகல்,
சஞ்சாரப்புகல், மூர்ச்சனைப்புகல் என்பர் இராமநாதச் செட்டியார்
வர்த்தனை நான்கு என்றலுமாம்.
அமைந்த
புகல்வகை - தாம் பாடும் கொடிப்பாலைக்கு
அமைந்த கூறுபாடாகிய திறம். "நீடும் புகல் வகையால்" (221) என
இவ்விசைக் கூறுபாட்டை முன்னர் மிடற்றுப்பாடலுக் கேற்பக்
கூறியதும் காண்க.
விரல்
நிரையில் - பொத்துவனவும் விடுப்பனவுமாகிய விரல்
வரிசைத் தொழில். நிரை - இங்கு வரிசையின்
றொழில் குறித்தது.
சேய
ஒளி - விரல்களின் சிவந்த ஒளி குழலினிடத்துச்
சஞ்சரிக்கும்படி என்பாரும் உண்டு.
திருவாளன்
- சிவபெருமான். முத்தித் திருவை ஆள்பவர் -
வழங்குபவர். அவரது திருவினைப் பெற்று உலகுக் குபகரிக்கும்
அடியார்களும் இவ்வாறே திருவாளர்கள் என வழங்கப்படுவர்,
"தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்"
(சண்டீசர் புரா - 60) என்றது காண்க.
எழுத்தைந்து
- சீபஞ்சாக்கரம். முன்னர் "எம்பிரா
னெழுத்தஞ்சும்" (939) என்றது இதற்குமுன் பலநாளும் நியதியாய்
வாசித்ததனைக் குறித்ததாம்.
இசைக்கிளை
ஐந்து - ஆயத்தம, எடுப்பு, உக்கிரம்
(உற்கிரகம்), சஞ்சாரம், இடாயம் என்பன.
முறை
விளைத்தல் - இவ்வைந்து கிளைகளிலும் முறையே
பண்ணமையப்பாடுதல். ஆயத்தம் - மநத்ரத்தினின்றும்
அனுமாந்தரமகிய கீழ்ஸ்தாயி வரை சென்று முன் தானத்தில் வந்து
முடிவது; எடுப்பு - மந்தரத்திலிருந்து பஞ்சமம்
வரை போய்
மீண்டும் மந்தரத்தில் வந்து முடிவது; உற்கிரகம்
- மந்தரம் முதல்
தாரத்தானம்வரை போய் மீண்டும் மந்தரத்தில் வந்து முடிவது;
சஞ்சாரம் - மந்தரத்திலிருந்து மத்திமம்
தாரம் ஆகிய இரண்டினும்
போய் இறங்கிக் கீழ்ஸ்தாயியான அனுமந்தரத்திற் சென்று மீண்டும்
மந்தரத்தில் வந்து நிற்பது; இடாயம் -
மந்தரத்தானத்தையே
முதன்மையாகச் செய்துகொண்டு, மத்திமம் தாரம் இரண்டினும்
சென்று, பின்பு மந்தரத்தையே வலியுறுத்தி அனுமந்திரத்தற் சென்று
மீண்டும் மந்தரத்தில் வந்து முடிவது என்ப. 26
|