963.
|
ஆனாயர்
குழலோசை கேட்டருளி யருட்கருணை
தானாய திருவுள்ள முடையதவ வல்லியுடன் கானாதி
காரணராங் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதிநாறுஞ் சடைதாழ. 38 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆனாயரது குழலிசை ஓசையினைக்
கேட்டருளி, அருட்கருணையேயாகும் திருவுள்ளத்தினையுடைய
தவவல்லியாகிய உமையம்மை யாருடனே கூட இசைக்கெல்லாம்
முதற்காரணராகின்ற கண்ணுதலையுடைய சிவபெருமான்,
விடையின்மேல் எழுந்தருளிப், பிறைமுளைத்தற்கிடமாகிய டை
தாழுமாறு வானவீதி வழியே வந்து அணைந்தனர்.
(வி-ரை.)
அருட்கருணை...தவவல்லி - உமையம்மையார்.
சிவமும் சத்தியும் தீயும் சூடும் போலக் குண குணியாய்ப் பொருந்திய
ஒரே பொருள் என்பதும், அருளே சத்தியாம் என்பதும் உண்மைநூற்
றுணிபு; ஆதலின் வல்லியுடன் என்றும், கருணைதான்
ஆய
என்றும் கூறினார். தானே ஆகிய என்க. பிரிநிலை யேகாரம்
தொக்கது. "அருளுண்டாம் ஈசற் கதுசத்தி" என்பது சிவஞானபோதம்.
அருட்கருணை
- சிவனது திருவருட் பெருமையைத்
தமிழ்மொழி வழக்குப் பற்றி விளக்குவார் அருள் என்றும்,
வடமொழி வழக்குப்பற்றி விளக்குவார் கருணை என்றும் கூறினார்.
"ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா" என்ற விதிப்படி மிக்க
பேரருள் குறித்த தென்றலுமாம். "அருள்வித் திட்டுக் கருணைநீர்
பாய்ச்சி" (குமரகுருபரா) என்றதும் காண்க. கருணை பாசநீக்கமும்,
அருள் சிவப்பேறும் தருவன என்று இங்கு விசேடவுரை
காண்பாருமுண்டு.
தானாய
திருவுள்ளம் - முற்றும் அருளேயாகிய திருவுள்ளம்.
அத்திருவுள்ளத்தில் நிகழ்வன அருளேயன்றிப் பிறிதில்லை என்பது.
"உருவருள்" (1, 47) என்ற சிவஞானசித்தியார்த் திருவாக்கும்,
"அருளே யன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப்
புகலொணாதே" (18) என்ற சிவப்பிரகாசமும் இங்கு நினைவு கூர்க.
தவவல்லி - தவமாவது சிவபூசை என்பதனை உயிர்கள்
அறிந்து
சிவபூசை செய்து உய்யும் பொருட்டுத் தவஞ்செய்து காட்டினர்
என்றது குறிப்பு. வல்லி - கொடிபோல்வார்.
மெய்பற்றி வந்த
உவமஆகுபெயர். கொடி கொம்பினைப்பற்றி நிற்பதுபோலச்
சிவத்தைப்பற்றி நிற்பது அவரது அருளாகிய சத்தி என்க. இங்கு
ஆனாயருக்கு அருள்செய்து தம் அருகு இருக்கும் நிலையைத்தர
வருகின்றாராதலின் கருணை வல்லியுடன் விடையுகைத்து
வருகின்றார். முன் உரைத்தவை பார்க்க.
கான
ஆதிகாரணர் என்பது கானாதி
என வந்தது தீர்க்க
சந்தியென்ப. கானம் நாதத்தைப்பற்றிப் பிறக்கின்றது. சூக்குமமாகிய
நாதத்தைத் தமக்குத் திருமேனியாக உடையவராதலிற் சிவபெருமான்
கானத்துக்கு ஆதிகாரணராவர் என்பது கருத்து. எவ்வகைக்
கீதத்துக்கும் வேதத்துக்கும் பிரணவம் காரணம். சிவபெருமான்
பிரணவ சொரூபன்; ஆதலானும் ஆதிகாரணர் என்றார். "ஈசான :
சர்வ வித்யானாம்" என்ற பதிவாக்கியத்தா லறியப்படுகின்றபடி
கானம் முதலிய எல்லா வித்தைகளுக்கும் சிவனே இருப்பிடமும்
பிறப்பிடமுமாயுள்ளவன் என்பதும் கருதுக. "நாததநு மநிசம் சங்கரம்
நமாமி" எனவும், "சத்தியோஜாதாதி டஞ்ச வக்த்ரஜ ச
ரி ம த நி ச
சப்தஜ்வர வித்யாலோலம்" எனவும் வழங்கும் தியாகராச ஐயர்
கீர்த்தனமும் காண்க.
மதிநாறும்
சடைதாழ - நாறுதல் - முளைத்தல்.
ஒரு
கலையினோடடைந்த பிறைச் சந்திரன் பின்னர் வளரத்
தொடங்கியதனால் நாறும் என்றார்.
நாறும் - இளமையாகிய
என்றுரைப்பாரும் உண்டு. கொன்றையினைச் சடையார்போல்
நேர்நோக்கி நின்றுருகி இசைபெருக்கினாராதலின், "ஆரொருவ
ருள்குவா ருள்ளத் துள்ளே யவ்வுருவாய் நிற்கின்ற வருளுந்
தோன்றும்" (திருத்தாண்டகம் - திருப்பூவணம் - 11), "யாதானு
மெனநினைந்தார்க் கெளிதே யாகி" (நின்ற திருத்தாண்டகம் - 7),
என்றபடி சடைதாழ்ந்த திருமேனியுடன் தோன்றி யருளினார்
என்பது. 38
|