968.
|
சீர்மன்னுசெல்
வக்குடி மல்கு சிறப்பி னோங்குங்
கார்மன்னுசென் னிக்கதிர் மாமணி மாட வைப்பு
நார்மன்னுசிந் தைப்பல நற்றுறை மாந்தர் போற்றும்
பார்மன்னுதொன் மைப்புகழ் பூண்டது பாண்டி நாடு.
1 |
968. (இ-ள்.)
பாண்டிநாடு - பாண்டிய நாடானது;
சீர்மன்னு.....வைப்பு - சீரினால் நிலைத்த செல்வமுடைய குடிகள்
நிறைந்த சிறப்பினால் ஓங்கும், மேகங்கள் நிலைத்துத் தங்கும்
உச்சியிடங்களையுடைய ஒளி பொருந்திய மணிகளைக் கொண்ட
மாடங்கள் நிறைந்தது; நார்மன்னு....பூண்டது - அன்பு பொருந்திய
மனத்தையுடைய பல நல்ல துறைகளில் வாழ்கின்ற மாந்தர்கள்
துதிக்கும்படிஉலகில் நிலைத்த பழமை பொருந்திய புகழையுடையது.
(வி-ரை.)
சீர்மன்னு செல்வம்- சீரினால்
நிலைத்தலாவது
நல்வழியின் ஈட்டப்பட்டதனால் நிலைபெற்றிருத்தல். அவ்வாறல்லாத
பொருள்களாயின் விரைவில் அழிந்துபோம் என்பது நூற்றுணிபு.
செல்வக்குடி மன்னு சிறப்பு - குடிகள் நிறைந்திருப்பதும் நல்ல
செல்வம் பெருகியிருப்பதும் மாடங்களுக்குச் சிறப்பாவனவாம். சீர் -
அறம்; செல்வம் - பொருள்; குடி - இன்பம்; சிறப்பு - வீடு என
நான்கு உறுதிகளும் தரும் என்ற குறிப்பும் காண்க.
ஓங்கும்
கார்மன்னு சென்னி - மேகங்கள் தங்கும்
உச்சிஎன்பது மாடங்களின் உயர்ச்சியைக் குறித்தது. "செல்வ
நெடுமாடஞ் சென்று சேணோங்கிச், செல்வமதி தோயச் செல்வ
முயர்கின்ற, செல்வர் வாழ்" (குறிஞ்சி - கோயில் - 5) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தின் கருத்தையும் காண்க.
ஓங்கும் மாடம் என்று கூட்டலுமாம்.
வைப்பு
- மாடங்களின் நிறைவாகிய சேமநிதி போல்வது
என்றபடி.
நார்மன்னு.....போற்றும்
- எந்த நற்றுறைக்கும் அன்புடைய
மனம் இன்றியமையாது வேண்டப்படுவ தென்பதாம். அன்பும்
நல்லொழுக்கமுமுடைய நல்லோரால் போற்றப்படுவதே
நன்மதிப்பாகும்; ஏனைய வெல்லாம் மதிப்பாகா என்பதும் குறிப்பு.
பலநற்றுறை - பலவகையின் நல்லொழுக்கங்கள்குறித்தது.
மாந்தர்
- பழஞ் சங்கப் புலவர்களும் மற்றும் பெரியோர்களும். பார்மன்னு
தொன்மைப் புகழ்
- உலகில் நிலைபெற்ற பழமை. "பாண்டிநாடே
பழம்பதியாகவும்" (திருவாசகம்) முதலிய திருவாக்குக்களை இங்கு
நினைவு கூர்க.
பாண்டி
நாடு - பாண்டிய மரபின் அரசர்களால் ஆளப்பட்ட
நாடு.
பாண்டி நாட்டினை
இத் திருத்தொண்டர் புராணத்தினுள்
முதன் முதலிற் கூறநேர்ந்த இடம் இப்புராணமேயாதலானும்,
பாண்டியநாடு தமிழ்நாடு என்று சிறப்புப் பெயர்
பெற்றதாதலானும்
இங்குச் 1செய்யுள் யாப்பினாலும், பொருளாலும் தமிழின்
சிறப்புப்பற்றி ஆசிரியர் தொடங்குகின்றார். உறுதிப்பொருள் தராத
சீவகசிந்தாமணியைக் கற்று அது தமிழ்வளனும் பொருள்வளனும்
பெரிதுமுடையது என்று பாராட்டி மக்கள் போது போக்கிய
காலத்தில் அவர்களது மனங்களை நற்றமிழிலும் நற்பொருளிலும்
ஈடுபடுத்த இத்திருத்தொண்டர் புராணம் எழுந்தது என்பது
திருத்தொண்ட புராண வரலாற்றினாலறியப்படும் உண்மை; ஆதலின்
பாண்டியநாட்டைப்பற்றிய இச்சரிதத்தைக் "காய்மாண்ட தெங்கின்
பழம் வீழக் கமுகி னெற்றி" என்ற சிந்தாமணியின் கலித்துறை
யாப்பினால் தொடங்கி அந்த ஒரே வகைச் செய்யுள் யாப்பினாலே
புராண முழுதும் பாடியருளினார்ஆசிரியர் என்க. சிந்தாமணியை
விடுத்து இதனைக் கற்போர் தமிழ்ச் சுவையும், இகபர நலனும்
ஒருங்கே அடையுமாறு இச்சரிதங்கூறிய யாப்பமைதி ஆசிரியரின்
கருணைத்திறத்தினையும் கவித்திறனையும் ஒருங்கே காட்டி
நிற்கின்றது. இத் தமிழ் நாட்டரசர் புராணமே தமிழ்வளத்திற்கேற்ற
தெனக் கொண்ட அமைதியும் காண்க. தமிழ்வளத்தினையே தமது
திருமனத்துட் கொண்டு ஆசிரியர். இப்புராணத்தினுட் புகுந்தனர்
என்பது 968-974 திருப்பாட்டுக்களின் அமைப்பினால் இனிது
விளங்கும். 974-ம் திருப்பாட்டில் வெளிப்படையாகக்
கூறியருளியதனோடு 970-ல் ஞாலமளந்த மேன்மைத்
தெய்வத்தமிழ், என்று விதந்தும் கூறியருளினர். 1
இதனால்
நாடும் நாட்டுச் சிறப்பும் கூறினார்.
1இப்புராணத்தினுள்
வேறு யாப்பினால் வரும் 996, 997
பாட்டுக்கள் ஐயப்பாடுள்ளன.
|