977.
|
அந்திப்பிறை
செஞ்சடை மேலணி யால வாயில்
எந்தைக்கணி சந்தனக் காப்பினிடை யென்று முட்டா
அந்தச்செய லின்னிலை நின்றடி யாரு வப்பச்
சிந்தைக்கினி தாயதி ருப்பணி செய்யு நாளில், 10 |
977.
(இ-ள்.) வெளிப்படை. மாலையில் விளங்கும் பிறையைச்
சிவந்தசடை மேல் அணிந்த திருவாலவாயுடையாராகிய எந்தைக்குச்
சாத்துகின்ற சந்தனக் காப்பினை இடையில் ஒருநாளும் தவிராத
அந்தச் செய்கையில் நிலைத்து நின்று அடியார்கள் மகிழும்படி
மனதுக்கினிதாகிய திருப்பணியைச் செய்து வருகின்ற நாளிலே, 10
977.
(வி-ரை.) அணி - எந்தை எனக் கூட்டுக.
எந்தைக்கு
அணி சந்தனக் காப்பு - "சந்தனமுங்
குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த தோளானை" என்பது திருத்
தாண்டகம். திருமஞ்சனத்துக்கு உதவும் பொருள்களுள்ளே
சந்தனக்குழம்பு சிறந்த ஒன்றாகும் என்பது ஆகமவிதி. மெய்ப்
பூச்சுக்கும் திலதப் பொட்டணிவதற்கும் உதவுவதுமாம். காப்பு
-
மெய்ப்பூச்சு.
இடை
என்றும் முட்டா அந்தச் செயல் - நியதியாகச்
செய்யும் திருப்பணியை ஒருநாளும் தவிர்தலுறாமற் செய்தல்
வேண்டுமென்பது விதி. நிலைநிற்றல் - உறைத்து
நிற்றல்.
அடியார்
உவப்ப - இறைவனுக்கு நியதியாகச் செய்யும்
அன்புடைய திருப்பணிகளைக் கண்டு மகிழ்கின்றவர்கள்
அடியார்களேயாவர் என்பதாம். மூர்த்தியார் திருவால
வாயுடையார்க்குச் செய்த மெய்ப்பூச்சினைத் தரிசித்த அடியவர்
களித்தனர் என்பது.
சிந்தைக்கினிதாய
திருப்பணி - அடியார் மனத்துக்கு
உவந்ததன்றி ஆண்டவனது திருவுள்ளத்துக்கும் ஏற்ற எனவும்,
அடியார் உவப்பதோடு தமது சிந்தைக்கும் இனிதாகிய எனவும்
உரைக்க நின்றது.
நாளில்
- வந்தான் என்று வரும்பாட்டுடன் கூட்டி
முடித்துக்கொள்க. 10
|