994. |
அவ்வேலையி
லங்க ணமைச்சர்கள் கூடித் தங்கள்
கைவேறுகொ ளீம வருங்கடன் காலை முற்றி
வைவேலவன் றன்குல மைந்தரு மின்மை யாலே
செய்வேறுவி னைத்திறஞ் சிந்தனை செய்து
தேர்வார், 27 |
994. (இ-ள்.)
வெளிப்படை. அந்த வேலையில் அவ்விடத்து
உரிய அமைச்சர்கள் கூடித், தாங்கள் கடமையாய்ச்செய்து
கழிக்கவேண்டிய கைவேறு கொண்டபடியான அரிய ஈமக்கடனைக்
காலையில் முடித்துக், கூரிய வேல்கொண்ட அந்த மன்னனுக்குக்
குலமைந்தரும் இல்லாமையாலே, வேறுவினைசெய்யும் திறத்தினைச்
சிந்தித்துத் தேர்வார்களாகி, 27
994.
(வி-ரை.) அவ்வேலை - பொழுது புலர்ந்த
அந்நேரத்தில். அங்கண் அமைச்சர்கள்கூடி
- அரசன்
இறந்துபட்டவுடனே, முதற்காரியமாவது, அரச அங்கமாக அரச
காரியம்பார்க்கும் அமைச்சர்கள் கூடி, மேல் அரசாங்கம் செல்ல
வேண்டிய முறைகளை ஆலோசிக்க என்பது அரசநீதி. ஆதலின்
முற்றித் - தேர்வார் என்றார்.
தங்கள்
... காலை முற்றி - இறந்து கழிந்த அரசன் சமணச்
சார்பினனாதலின் அமைச்சர் தமது சார்பு ஒழுக்கப்படிக்கல்லாது
அந்தச் சமண்சமயச்சார்பு பற்றியபடி ஈமக்கடன் கழித்தனர் என்பது
குறிக்கக் கைவேறுகொள் என்றார். கை
- ஒழுக்கம். ஈமக்கடன் -
அந்தியக் கடனுக்குரிய சடங்கு. ஈமம் - மயானம்.
அறவைப் பிணஞ்
சுடுதல் முதலிய இது போன்ற கடமைகள் அறங்களுள்
ஒன்றெனப்படுதலாலும், இறந்தோர் யாவரேயாயினும் அவர்க்கு
ஈமக்கடன் ஆற்றுவித்தல் எவர்க்கும் அறமாதலாலும் அருங்கடன்
என்றார். "தென்புல வாழ்நர்க்கருங்கட னிறுக்கும்" என்பது காண்க.
காலை
முற்றி - என்றதனால் விரைவில் முடித்தார்கள்
என்பதாம். மேலே விரைவில் அரசகாரியம் நிகழவேண்டிய
அவசியம்பற்றி ஈமக்கடனை அதிவிரைவில் முடித்தனர்.
குலமைந்தரும்
இன்மையாலே - நல்வாழ்வு வாழும்
விதியின்றி அவன் இறந்து பட்டதன்றியும் அவனுக்குப்பின் வழிவழி
வந்து நிலந்தாங்குதற்குரிய மைந்தரும் இல்லாமையால் என உம்மை
இறந்ததுதழுவிய எச்ச உம்மை. இழிவு சிறப்புமாம்.
வேறு
வினை செய்திறம் என்க. நிலங்காவலுக்கு வழிவழி
அரசமரபில் வரும் அரசன் கிடையாதபோது வேறு வழியால்
மன்னனைப் பெறுவதற்குச் செய்யும் செயல்.
மைந்தரும்
இன்மையாலே - என்றதனால் அரசனது
குடும்பத்தில் தந்தைக்குப்பின் (முதன்) மகனாக வழி வழி வரும்
முறையில் அரசு தாங்கப்பட்டதும், அரசனும் அமைச்சரும் கூடி
நாடாளுதலும் முந்தைநாளில் தமிழ் நாட்டில் வழக்கு
என்பதறியப்படும். திருவாரூர்ச்றப்பிற்கூறிய சரிதநிகழ்ச்சியை இங்கு
நினைவு கூர்க. முடியரசுகள் கூடா என்றும், குடிகள் தம்மைத்தாமே
அரசுபுரிந்துகொள்ளுதல் வேண்டுமென்றும், அதற்காக முடியரசர்
பதவிதாங்கும் பல திறமான குடித்தலைவர்கள் கொண்ட அரசாங்க
முறை வேண்டப்படுவதென்றும் வரும் கொள்கைகள் இந்நாளின்
புது நாகரீக விளைவுகளாம். ஆனால் ஒரு மன்னவனால்
தாங்கப்படுவதே உலகியல் அரசநெறி என்பது அந்நாள் அறவோர்
கொள்கை என்பது மேல்வரும் பாட்டால் உணர்த்தப்படும். அதனை
அந்த மந்திரிகள் வாக்கில் வைத்து மந்திரத்தலைவராகிய ஆசிரியர்
உலகுய்ய உணர்த்தியருளிய திறமும் காண்க. இந்நெறி
தெய்வத்துணை கொண்ட தென்பதும் இச்சரிதத்தின் உய்த்துணரத்
தக்கது. 27
|