995. |
"தாழுஞ்செய
லின்றொரு மன்னவன் றாங்க
வேண்டுங்;
கூழுங்குடி யும்முத லாயின கொள்கைத் தேனுஞ்
சூழும்படை மன்னவன் றோளிணை காவ லின்றி
வாழுந்தகைத் தன்றிந்த வையக" மென்று
சொன்னார். 28 |
995. (இ-ள்.)
"இந்த வையகம் - இந்த நாடு; தாழும் ...
வேண்டும் - தாழ்வாகிய செயலில்லாமல் ஒரு அரசனால்
தாங்கப்படவேண்டும்; (ஏன்? என்னில், வையகம்), கூழும்
குடியும்...வாழும் தகைத்தன்று - கூழ், குடி முதலிய ஏனை எல்லா
உறுப்புக்களையும் கொண்டதேயாயினும், நாடு காவலின்
சூழ்ச்சியுடைய படைவலிபெற்ற மன்னவனது தோளிணைகளின்
காவல் பெற்றாலன்றி வாழ்வு பெறும் தகுதி யுடைத்தன்று"; என்று
சொன்னார் - என்று சொன்னார்கள். 28
995. (வி-ரை.)
தாழும்செய் லின்றொரு மன்னவன் -
தாழும் செயல் - நீதியில் தாழ்வுவரும் செய்கை. அறநெறி தவறிய
செயல். இன்றி என்ற வினையெச்சத்து இகரம்
உகரமாய் வந்தது.
இதற்குத், தாமதமின்றி என்றுரை கூறுவாருமுண்டு.
ஒரு
மன்னவன் தாங்கவேண்டும் - இது அந்நாளில்
அறவோரும் அறிவோரும் கொண்டொழுகிய கொள்கை. வையகம்
ஒரு மன்னவனால் தாங்கப்படவேண்டும் என்க. தாங்க -
தாங்கப்பட. செயப்பாட்டுவினை செய்வினையாக வந்தது.
சூழும்காவலின்றி - சூழ்தல் - நினைத்தல் -
ஆராய்ந்தெண்ணுதல். படை மன்னவன் - படைகளையுடைய
அரசன். தோளிணை - அரசனது ஆணையை அவன்
தோள்களின்
வலிமையாகவும், நாடு அவன் தோள்களின்மேற் றாங்கப
்படுவதாகவும், உருவகம் செய்வது மரபு. சூழும் -
தன்னைச்
சூழ்ந்துள்ள தன் ஆணைவழி நிற்கும் என்றுரைப்பாருமுண்டு.
கூழும்
... கொள்கைத்தேனும் - "படை, குடி, கூழ்,
அமைச்சு, நட்பு, அரண்" என்ற ஆறும் அரசினது
அங்கங்களெனப்படும். முதலாயின - படையும்,
குடியும் கூழும்
நீக்கி ஏனைய அமைச்சு, நட்பு, அரண் என்ற மூன்றுமாம்.
இவ்வாறனுள் படையை இவ்வாறு வேறு பிரித்துக் கூறியது
அரசனுடைய ஆணை செலுத்துவதற்கும் நாடு காவலுக்கும் அது
இன்றியமையாதென்பதனை எடுத்துக்காட்டுதற்பொருட்டு, இதுபற்றி
படை மன்னவன் என உடம்பொடு புணர்த்தி ஓதினார்.
"படையுடை மன்னவன்" என்ற திருமந்திரமும் காண்க.
கொள்கைத்து - (அங்கங்களைக்) கொள்ளுதலை உடையது -
கொண்டுடையது. கூழ் - நிலம். குடி
- குடிகள். கூழ் மிக
விளையினும் அதனைக்குடிகள் பயமின்றி விளைத்து எடுத்துண்ணுதல்
அரசன் காவலின்றி இயலாதென்பார், குடி - கொள்கைத்
தேனும்
என்று சிறப்பும்மை தந்தோதினார். "வானோக்கி வாழுமுலகெலா
மன்னவன், கோனோக்கிவாழு முலகு" - குறள்.
வாழும்
தகைத்து அன்று - வாழும் தன்மை பெறாது.
நல்வாழ்வு வாழ்தல் இயலாது. மக்கள் "இனிதுண்டு தீங்கின்றி"
வாழமுடியாது என்க. "சிலைக்கீழ்த்தங்கி" (695) என்ற
விடத்துரைத்தவை பார்க்க. "அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்,
நின்றது மன்னவன் கோல்" என்பது குறள்.
வையகம் கொள்கைத்தேனும்
- காவலின்றி - வாழும்
தகைத்தன்று; மன்னவன் தாங்கவேண்டும் என்று கூட்டி முடிக்க. 28
|