997. (இ-ள்.)
வெளிப்படை. இவ்வகையாகப் பலவற்றையும்
எண்ணி, "இனி இங்கு அரசனில்லை; அதற்குச் செய்யத்தக்கது
இதுவேயாகும்" என்று தேறித் தெளிபவர்களாய்ச் சிறந்த
கரியமலைபோன்ற யானையைக் கண்கட்டிவிட்டால், அந்தக்
கைமலையினாற் கையிற் கொள்ளப்பட்டவரே இந்த உலகங்
காவலை கைக்கொள்வார்" என்று துணிந்து. 30
997.
(வி-ரை.) தெளிபவர் - துணிவு கொள்வாராகி.
இதற்கு
இதுவே முடிவு என்று தேறித் தெளிவாராய். முற்றெச்சம். அமைச்சர்
என எழுவாய் வருவித்து - என்று எனக் கூட்டுக.
மைவரை
அனைய - கரியமலை போன்ற. மெய்யும் உருவும்
பற்றிவந்த பண்புவமை.
மற்று
அக் கைவரை - மற்று - அசை. கைவரை -
கையையுடைய மலைபோன்றிருப்பதனால் யானைக்குக் காரணப்
பெயராய் வழங்குவது.
கைக்கொண்டார்
- கையினாற் கொள்ளப்பட்டவர் யாவரோ
அவர். கொண்டார் - படுவிகுதி தொக்குநின்ற செயப்பாட்டு
வினையாலணையும் பெயர்.
கைக்கொண்டார்
- கைக்கொள்வார் - சொல்லணி.
காவல் கைக் கொள்வார் - காக்குந் தொழிலை
ஏற்றுக்கொள்வாராவர் - மேற்கொள்ளும் அரசராவர். 30