998.
|
செம்மாண்வினை
யர்ச்சனை நூன்முறை செய்து
"தோளால்
இம்மாநில மேந்தவொ ரேந்தலை யேந்து" கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு கோடை
நெற்றிச்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண் கட்டி
விட்டார்.
31 |
998. (இ-ள்.)
வெளிப்படை. நூல்களில் விதித்தபடி செவ்விய
மாட்சியுடைய சடங்குகளோடு (கடவுளை) அருச்சனை செய்து,
மழைபெய்யும் பெருமுகில் போன்று மதம்பாயும் பெருகிய
பட்டமணிந்த நெற்றியையுடைய யானையை, நறுந்துகிலினால்
கண்ணைக்கட்டி, "இந்தப் பெருநிலத்தின் அரசாட்சியைத் தனது
தோள் வலியால் தாங்குதற்கு ஓர் ஏந்தலை நீ எடுத்து ஏந்தி வருக!"
என்று சொல்லி விடுத்தனர். 31
998.
(வி-ரை.) நூன் முறை செம்மாண் வினை அர்ச்சனை
செய்து என்க. பாவனை - மந்திரம் - கிரியை என்ற மூன்று
அங்கங்களும் நன்முறையாகப் பொருந்திய அர்ச்சனை என்று
குறிக்கச் செம்மை, மாண்பு, வினை என்ற
மூன்று அடைமொழிகள்
புணர்த்தி ஓதினார். இந்த அர்ச்சனையின் பயனாகப் பவங்கள்
மாறவும், சைவ நூற்பதம் எங்கும் நிறைந்து விளங்கவும்
சிவசாதனங்களால் அரசு புரிந்து நாடுகாக்கும் மன்னவனை இவர்கள்
பெறுகின்றார்களாதலின் இவ்வாறு சிறப்பித்தார். அருச்சனை செய்து
- கடவுளை என்ற செயப்படு பொருள் அவாய் நிலையான் வந்தது.
யானையை நூல் முறை அருச்சித்து என்றுரைப்பாருமுண்டு.
நூன்
முறை - ஆகம நூல்களில் விதித்தபடி. இவ்வாறு
கடவுளைப்போற்றி அருச்சித்து யானையைக் கண்கட்டிவிட்டு,
அவ்வியானையினால் எடுத்துக் கொண்டு வரப்பெற்றவரை
அரசராகக்கொள்ளுதல் முந்தைநாளில் நம்நாட்டில் ஆன்றோர்
ஆட்சி. இது நூல்களால் விதிக்கப்பட்ட செய்தியுமாம் என்பது
நூன்முறை என்றதனா லுணர்த்தப்பட்டது.
இம்மாநிலம்
தோளால் ஏந்த - இவ்வுலகத்தைத் தன்
தோள்வலிமை என்று உபசரித்துக் கூறப்படுகின்ற ஆணையினால்
காக்க. நிலம் ஏந்த - நிலத்தை ஒரு உருண்டை
வடிவினதாகிய
பந்துபோலக் கொண்டு, அதனைக் கீழே விழாமல் மன்னவன்
கையினாற் றாங்குகின்றான் என உருவகப்படுத்திக் கூறுதல் மரபு.
ஏந்த - ஏந்தும் பொருட்டு.
ஏந்தல்
- உயர்ந்தவன். அரசன் - ஏந்துதலைச் செய்கின்றவன்
என்ற சொற் சிலேடைப் பொருள்பட ஏந்த ஓர் ஏந்தலை
- என்ற
அழகும் காண்க. ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக -
சொற்பின்
வருநிலை என்ற சொல்லணி. ஏந்துக! என்று - என்பது அகரம்
கெட்டு ஏந்துகென்று என நின்றது.
பெய்
மா முகில்போல் மதம்பாய் நெற்றி - என்க. இது
யானைக்குரிய மூன்று மதங்களுள் கபோல மதங்குறித்தது.
முகில்போல் மதம்பாய் - முகில் மழை நீரைப்
பெய்வதுபோல
மதநீர் பெய்யும் என்ற வினைபற்றி வந்த உவமம். அன்றி,
முகில்போல் கைம்மா என்று கூட்டி, உருவும்
பயனும்பற்றிய
உவமையாகக் கொண்டு கரிய பெரிய முகில்போன்ற யானை
என்றுரைத்தலுமாம். பெய் என்றதனால் சூல்
கொண்டு பெய்யும்
கருமைநிறப் பண்பு குறிக்கப்பட்டது."வெண்முகி லாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளம்" என்றபடி வெண்முகிலை
உவமித்ததாகக் கொள்ளின் கைம்மா என்றதற்கு
வெண்ணிறமுடைய
யானை என்க. வெள்ளை யானை தேவரரசனாகிய இந்திரனைப்
பிடரியிற் றாங்கிவருதல் போல் நீ ஒரு மன்னனை ஏந்திக்கொணர்க
என்ற குறிப்புமாம். இந்திரன் மேகவூர்தி யுடையவன் என்பதும்
குறிக்க.
ஏந்துக
- துதிக்கையினால் எடுத்துப் பிடர்மேல்
வைத்துக்கொணர்க என்பதாம். கைம்மா -
கையையுடைய விலங்கு.
யானைக்குக் காரணப்பெயராய் வழங்குவது.
நறுந்துகில்
- நல்ல துகில். புதிய வெள்ளிய துணி. நறுமை
-
இங்குப் புதுமையும் தூய்மையும் குறித்தது..
கண்கட்டி
விடுதல் - முன்கண்ட பழக்கத்தால், யானை,
பகையும் உறவும் கண்டுகொள்ளாது, உண்ணின்று தெய்வம்
உணர்த்தியபடி தக்கோனொருவனை எடுத்து வருதற்பொருட்டுக்
கண்கட்டிவிடுதல் வழக்கு. சோழன் கரிகாற்பெருவளத்தான் கழுமல
வூரிலிருந்த யானையாற் கொண்டுவரப்பட்டு அரசாட்சிக்கு
உரியவனாகத் தேர்ந்து கொள்ளப்பட்டான் என்ற வரலாறு பழந்தமிழ்
நூல்களுட்காணப்படும்.
இதுபற்றிப் பண்டிதர்
- ந. மு. வேங்கடசாமி நாட்டார்
எழுதியுதவிய குறிப்புக்கள் இதன்கீழ்த் தரப்படுகின்றன:
"யானையைக் கொண்டு அரசனைத் தேர்ந்தெடுத்தமைக்குக்
கரிகாலன் செய்தி தவிர வேறு பழைய வரலாறொன்றும்
புலப்படவில்லை. "கழுமலத்தி யாத்த களிறுங் கருவூர், விழுமியோன்
மேற்சென்றதனால் - விழுமிய, வேண்டினும் வேண்டா விடினு
முறற்பால, தீண்டா விடுதலரிது" என்னும் பழமொழி வெண்பாவும்,
‘கழுமலமென்னும் ஊரின்கண்ணே பிணித்துநின்ற களிறும்,
கருவூரின்கண்ணே யிருந்த கரிகால்வளவன் கடிது இளையனாயினும்
அவன் சிறப்புடையனாதலால் அவன்மேற் சென்று
தன்மிசையெடுத்துக்கொண்டு அரசிற் குரிமை செய்தது' என்னும்
அதன் உரைப்பகுதியுமே கரிகாலன் செய்திக்கு ஆதாரமாவன.
உறையூர் மண்மாரி பெய்து அழிந்த காலை, பராந்தகன் மகனாகிய
கரிகாலனை அமைச்சர்கள் யானையை விடுத்துக்
கொணர்ந்தனரென்று செவ்வந்திப் புராணங் கூறுகின்றது."
"தமிழ்நாட்டிலே
பல்லவர் குலத்தினர் முதலானோர்
பேரரசராகத் திகழ்ந்த பொழுதும் அவர்கட்கு முடிசூடும் உரிமை
இருந்தமை புலப்படவில்லை. மூவேந்தர் வழியினரே முடிசூடும்
உரிமையுடையரென்னும் மரபினைப் பெரியபுராணம் பாதுகாத்துச்
செல்கின்றது. கூற்றுவ நாயனார் ஏனை அரசர்களை வென்று தாமே
அரசராய காலத்தும், தில்லைவா ழந்தணர்கள் அவர்க்கு முடிசூட
மறுத்தமையும், அவர் சிவபெருமான் றிருவடியையே முடியாக
வேண்டிப் பெற்றமையும், அறியற்பாலன. எனவே, மூர்த்தி
நாயனாரும் கூற்றுவ நாயனாரும், அரசுரிமையேற்று நாடு
ஆண்டனராயினும், அவர்கள் ஏனைய மன்னர்கள் போலன்றிச்
சடை முடியினையும் இறைவன் றிருவடியினையுமே முடியாகக்
கொண்டனர் என்னும் வரலாறுகள் பொன்முடி சூடும் உரிமை
மூவேந்தர்க்கே உண்டென்னும் மரபு பிழையாவாறு
அமைந்துள்ளமை தெளிவாம்." 31
|