|
தாங்கள் சிவபெருமான்போல் கவிப்பிரியன் - ஆனால் நல்ல கவி சொல்லும் ஆற்றல் அடிமையிடம் இல்லை - அன்புமாத்திரம் நிறைய உண்டு - அன்பால் எழுதும் பாடல்கள் உள. அடிமையின் கையுறையாக ஏற்றுக்கொள்ளவேண்டி நிற்கும் அடிமை. |
| |
| 1. சோணாடு முன்செய்த நற்றவத் தால்வந்து சோழர்புகழ் |
| சேணாடு முட்டத் திருத்தொண்டர் காதையைத் தீந்தமிழின் |
| மேனா ளருண்மொழித் தேவ னருண்மொழி வீறுபெற |
| மாணார் விரிவுரை தந்தனன் சுப்பிர மண்ணியனே. |
| |
| 2 வரமலி தொண்டர் புராணம் நுனிந்துமுன் னோர்வரைந்த |
| உரைமலி செம்பொருள் கற்றோர் குறிப்பு முடன்றழுவித் |
| தரைமலி நல்லுரை கண்டளித் தான்சங் கரன்மலர்த்தாள் |
| சிரமலி செல்வன் சிவசுப்ர மண்ய சிவக்கவியே. |
| |
| 3 வேதா கமஞ்சொன்ன வேதப் பெருமான் வியனருளால் |
| வேதா கமத்தனு பூதிப் புராணம் விரித்துரைத்தார் |
| பாதார விந்தம் வழுத்தியந் நூற்குப் பதவுரைசெய் |
| தாதா சிவசுப்ர மண்ணியன்கோவைத் தவமுனியே. |
| |
| 4 ஓரா யிரத்துத் தொளாயிரத் தோர்நாற் பஃதிருநாள் |
| கேரார் மிதுன மதியுத் தரத்தி லிலங்குமெழிற் |
| சீரார் கனகத் திருமன்றி லன்பர் திகழவையிற் |
| பாரார் புகழ்நூ லுரையரங் கேறிப் பயன்றருமே. |
| |
| 5 மலைப்பால் முளைத்திந்த வண்டங்கள் பூத்திட்ட வம்மையிரு |
| முலைப்பா லொழுகு திருவாயன் காழி முளைத்தசிவக் |
| கலைப்பாலில் வந்த கவுணியப் பிள்ளை கருணையிலிந் |
| நிலத்தா யிரம்பிறை நீகண்டு வாழி நிறைதவனே. |
| |
|
| 31 |
| |
அன்புருவாய அண்ணல்! |
சேக்கிழார் மரபிற்றோன்றி, அவர் பெரும் புராணத்துக்குச் சிறப்புவாய்ந்த பேருரைகண்ட பெரியோய் வாழ்க, வாழ்க, ஸ்ரீ நடராஜப்பெருமான் திருவருள் உங்கள்பால் பெருகப் பெருகவே. |
| | | க. சண்முகம் | வழக்கறிஞர், திருவாரூர் | | |
| |
| 32 |
| உரை நிறைவு விழா |
தெய்வச் சேக்கிழாராலன்றிப் பிறரால் பெரியபுராணத்தை இத்தகைய அழகிய பாடல்களாக இயற்றல் அரிது. அஃதேபோன்று பெரிய புராணத்திற்கு ஆராய்ச்சியும், நுட்பமும், விரிவும், தெளிவும், மேற்கோள்களும் அமைந்தஉரை காணல் சிவக்கவிமணி அவர்கட்கன்றிப் பிறர்க்கரிது என்பது சைவ உலகின் |