[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1063 |
| இச்செய்தி குறிப்பிடப்படவில்லை; (4) சமணர்களது நூல்களிலும் இதுபற்றிய சான்றில்லை; (5) பின்னேவந்த திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் முதலியவை இச்செய்தியைப் பலவாறு பெரிய புராணத்துட் கூறுவனவற்றுக்கு முரண்படக் கூறுகின்றன:-சமணர்கள் தாங்களே கழுவேறினார்களோ? அல்லது ஏற்றப்பட்டார்களோ? என்பதில் மாறுபாடு; அவர்களைக் கழுவேறாதவாறு பிள்ளையார் தடுத்தனர் என்று திருவிளையாடற் புராணம் கூறும்; பிள்ளையார் "மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்தனர்"(2752) என்பது இப்புராணம். இங்கு வைகைக் கரையில் இச்செய்தி நிகழ்ந்ததென்பதற்கு மாறாகத் திருவாலவாயுடையார் புராணத்தினுள் அது திருப்பூவணத்தில் நிகழ்ந்ததென்றும் பின்பு அது கழுவர் படைவீடு என வழங்கப்பட்டதென்றும் கூறப்பட்டது; (6) பிள்ளையாரது ஏனை அருட்செயல்கள் தமிழ்நாடெங்கும் கொண்டாடப்படுவன; இச்செய்தி பற்றிய விழாக்கள் பாண்டிநாட்டில் மட்டும் நடைபெறுகின்றன; (7) இச்செய்தி பிள்ளையார் கூறும் "எல்லார்களும் ஏத்தும் ஈசன்" "என்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்" என்பனவாதி திருவாக்குக்களாற் காட்டியருளப்படும் சிவன் பொதுக்கடவுள் என்ற கொள்கைக்கு இது மாறுபாடு;- முதலியன. | | ்இவற்றைச் சிறிது ஆராய்வாம்: 1-2. பிள்ளையார் தேவாரங்களில் இச்செய்தி குறிக்கப்படாமை: "புத்தரோ டமணை வாதில் அழிவிக்கும் அண்ண றிருநீறு செம்மை திடமே" எனவரும் குறிப்பும், "ஆதமில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே", "அமண்கையரை, ஓட்டி வாது செயத்திரு வுள்ளமே" என்று திருவுள்ள நோக்கிய குறிப்பும் ஒட்டிய வாதம் நிகழஉள்ள நிலைக்குச் சான்று பகர்கின்றன. "ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல்சேர் ஈனர்கட் கெளியேன லேன்றிரு வாலவாயர னிற்கவே" என்ற தேவாரம் சமண்சார்புபற்றி நின்று சுரநோயுற்ற அரசன் முன்பு அமணர் பிள்ளையாரைச் சுற்றி நின்று துள்ளியெழுந்து அனேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற அதுகண்டு அஞ்சிய அம்மையாரைப் பிள்ளையார் தெருட்டிய செய்கையினையும், ஆனைமலை முதலிய எண்குன்றத்திருந்த அமணர் ஈனர் அங்குக் கூடிக் குரைத்ததனையும், அவர் இனி அல்லல் சேரவுள்ளதனையும் எடுத்துரைத்தது; அப்போது பாண்டியன்தலை நிலைநிற்கலாற்றாது நடுக்குற்ற நிலையில் நோய் மிக்கிருந்தானென்பது "துளங்கும் முடித் தென்னன்முன் இவை" என்ற அப்பதிகத் திருக்கடைக் காப்புச் சான்று பகர்ந்து காட்டி நிற்கும்; "பொய்ய ராமமணர்கொளு வுஞ்சுடர், பைய வேசென்று பாண்டியற் காகவே" என்ற தேவாரம் அமணர், பிள்ளையாரும், அடியவரும் இருந்த திருமடத்துத் தீநாடியிட்ட கொடும் பாவச்செய்கையினையும், பிள்ளையார் அருளாணையினால் அத்தீப் பாண்டியனிடம் சுரமாகச் சென்று பற்றுவதனையும் கூறுகின்றது; இனிச் சுரவாதம் நிகழ்ந்து அதனில் அமணர் தோல்வியுற்ற செய்திக்குத் திருநீற்றுப் பதிகம் "குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும்கூடக் கண் திகைப் பிப்பது நீறு" என்று சான்று பகர்கின்றது. இனி, அனலில் ஏடு இட்டு வேவாமை பெற்ற ஏடு மெய்ம்மை என்ற வாதம் நிகழ்ந்தமைக்கும் அதில் பிள்ளையார் இட்ட திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏடு(வேவாது) பழுதின்றிப் பச்சையாய் விளங்கிச் சமணர் தோல்வியுற்றனர் என்பதற்கும் "நள்ளாறர்தந், நாமமே மிளிரிள வளநெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே" "கொற்றவ னெதிரிடை யெரியினி லிடவிவை கூறிய, சொற்றெரி ஒருபதும்" எனவரும் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டினை வைத்து அரசன் எதிரில் திருநள்ளாறர் நாமம் எழுதிய ஏட்டினைப் பாடிய சாதாரித் |
|
|
|
|