| என்று தொடங்கி "நல்குமாறருள் நம்பனே!" என்று மகுடஞ் சூட்டிப் பதிகம் அருளிய பிள்ளையாரது திருவுளத்தின் குறிப்பினை எடுத்துக்காட்டி வற்புறுத்தியபடி. "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" (சிவஞானபோதம் - 10 - 2 - வெண்) என்றபடி எவ்விடத்தும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதாம். |
| கொட்டம் - "கொட்டமே கமழும்" என்று தொடங்கும் பதிகத்தின் முதற் குறிப்பு. |
| நவின்று பாட - நம்பரை நவின்று கொட்டம் எனப் பதிகம் பாட என்க; பொருளும் சொல்லும் குறித்தபடியாம். |
| 898 |
| 2797. (வி-ரை) உம்பருய்ய நஞ்சுண்டார் - தம்மை அபயமாக அடைந்த அமரர் சாவாதபடி காத்துச், சாதலைச் செய்யும் விடத்தின் தன்மையை மாற்றிப் பிழைப்பிக்கும் சத்தியாக்கியதுபோலக், கீழ்நோக்கி ஈர்த்துச் செல்லும் நீரின்சத்தியை மாற்றிய நிலைக் குறிப்பு. |
| செலக் செல்லவுந்துதலால் - செல்லுதற்குச் செல்லும்படி உந்துதலினாலே. ஓடம் நீரினை ஊடு கீறித் தானே செல்லாதாதலின் அவ்வாறு அது செல்லும்படி உந்த; வெளிப்பார்வைக்கு ஓடம் ஈண்டுத் தானே செல்வதுபோலத் தோன்றினும் அதனை வெளித் தோற்றாமல் உள்நின்று உந்திச் சென்றது திருவருட் சத்தியாம் என்பதாம். |
| ஊடு - நீரினைக் குறுக்கிட்டு ஊடுருவிக்கொண்டு. |
| சேர - சேரும்படியாக; சேரும்பொருட்டு. |
| அக்கரையில் - பிள்ளையார் அணைந்து நின்ற இந்தத் தென்கரையினின்றும், இறைவர் கோயில் நின்ற அந்த வடகரையின்கண். |
| வம்பலரும் - வம்பு - வாசனை; ஈண்டுப் பிள்ளையார் எழுந்தருளியது வேனிற் காலமாகக் கருதப்படுதல் முன் உரைக்கப்பட்டது (2792 - 2787). கொன்றை மிகுதியாகப் பூத்தல் இள வேனிற் காலத்திலாம். "சித்திரையிற் சதயமாம் திருநாளில்" திருவடியடைந்த அரசுகள் "கொன்றைமாலை கொண்டடியே னானிட்டு"(தாண்) என்றதும் காண்க. "கார்க் கொன்றை" கார் நறுங்கொன்றை என்பன முதலாக வருவனவற்றுள் கார் என்பது கார் காலத்தைக் குறியாது கார்க்குரிய முல்லை நிலத்தை ஆகுபெயராய் உணர்த்தியது; கொன்றை முல்லைக் கருப்பொருள். முல்லைக்குக் காலம் கார்காலமாம். வாசனை என்ற பொருளில் நறும் என்றது மிகுதி குறித்தது என்க. |
| கொன்றை நயந்தார் - "கொன்றைசேர் சடையான்" (11); "கொன்றை பொன் சொரியும்" (5) என்ற பதிகக் குறிப்பு. |
| தமை வணங்கி - என்பதும் பாடம். |
| 899 |
| திருக்கொள்ளம்பூதூர் - ஈரடிமேல்வைப்பு |
| திருச்சிற்றம்பலம் பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை |
| கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர் நட்ட மாடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே. | |
| (1) |