1200திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பெருங் காதல் - தோணியில் எழுந்தருளிய தமது அம்மையப்பரிடம் பிள்ளையார் பலநாட் பிரிவின்பின் செல்ல எண்ணியபடியால் அதனைப் பெருங்காதல் என்றார்.
மன்னு திருவாலவாய் - நம்பர் - ழுஎன்றலையி னுச்சியென்றந் தாபித் திருந்தானைழு; ழுவேதியா. . . . . . என்றென், றோதியே மலர்கடூவிழு; ழுநறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துழு என்பனவாகி திருவாக்குக்களால் அறியப்படுகின்றபடி அரசுகள் நிலைபெற ஆன்மார்த்த நாயகராய் பூசித்து மனங்கொண்ட திருவாலவா யிறைவர் என்பது குறிப்பு.
ஆலவாய் -நாக மரைக்கசைத்த நம்பர் - நாக மரைக்கசைத்தும் மேனி முழுதும் நாகம் பூண்டும் சித்தராய் வந்து தாம் அணிந்த பாம்பினை நகரத்தின் எல்லை காட்டும்படி ஏவியருளிய குறிப்பும்பெறக் கூறியபடி.
ஏற்று ஏழுவார் - மேற்கொண்ட டெழுவாராய். ஏகினார் என வரும் பாட்டுடன் முடிக்க. எழுவார் - முற்றெச்சம். எழுதல் - திருவள்ளங்கொண்டு புறப்படுதல்.

947

2846. (வி-ரை) புக்கு - திருகோயிலுள்ளே புகுந்து; திருக்கோயிலினுள் என வருவிக்க.
நாவினுக்கு வேந்தர் திருவுள்ளமேவ விடைகொண்டு என்றது பிள்ளையார் முன்னர்ப் பாண்டிநாட்டுக்குச் சென்றருளிய போது அவர் உடன் வருதலை மறுத்து, அவர் தம்மைப் புனானட்டிலெழுந்தருளி யிருப்பீர் என்று ஆணையிட்டருள, அரசுகள் பிள்யைாரை மறுக்கமாட்டாது அரிதாங் கருத்தினேர்ந்தார் என்றும், அந்நிலையில் அவருக்கு விடைகொடுத்துப் பிள்ளையார் நீங்கியருளினர் என்றும் முன்னர்க்கண்டோம். ஆதலின் ஈண்டு அவ்வாறன்றி அவரது திருவுள்ளம் பொருந்த மனமார்ந்த விடை அவர்பாற் கொண்டருளினர் என்பதாம். விடை கொண்டு பிரிந்து செல்லினும் அவரது திருவுள்ளம் தம்பாலகலாது பொருந்த என்ற குறிப்பும் காண்க. இவ்விரு பெருமக்களும் இந்நிலவுலகில் சந்தித்தல் இஃது இறுதி முறையாதலும் குறிப்பு.ஏந்தலார் - பெருமையுடையோர்; பிள்ளையார், முன் கூறியபடி அரசுகளை நிற்கப் பணித்து ஆணையிட்டுச் சென்ற பிள்ளையார், மீண்டு அவர்பால் தாமே எழுந்தருளித் தாம் அவ்வாறு பிரிந்து சென்றதுமுதல் அதுவரை நிகழ்ச்சிகளை அருளிச்செய்து அவரை மகிழ்வித்து அவரது திருவுள்ள மேவ விடை கொண்டனராதலின் அளப்பரிய அப்பெருமை குறிக்க ஏந்தலார் என்றார். அரசுகளால் சிவிகை தாங்கி ஏந்திவரப்பெற்றவர் என்ற குறிப்புமாம்; ழுஅப்பரேழு என அவரைப் போற்ற அவரும் ழுபிள்ளாய்!ழு என்று விளிக்க உள்ள பிள்ளையார் என்ற நிலையினால் ஏந்தப்பெற்றவர் என்ற குறிப்பும் காண்க.

948

2847
மாடுபுனற் பொன்னி யிழிந்து வடகரையில்
நீடுதிரு நெய்த்தான மையாறு நேர்ந்திறைஞ்சிப்
பாடுதமிழ் மாலைகளுக்கு சாத்திப் பரவிப்போய்
ஆடல் புரிந்தார் திருப்பழனஞ் சென்றணைந்தார்.

949

(இ-ள்.) மாடு... இழிந்து - அருகில் உள்ள காவிரியில் இறங்கிச் சென்று; வட கரையில் ... பரவிப்போய் - ஆற்றின் வடகரையிலே நிலைபெற்றுள்ள திருநெய்த்தானப் பதியினையும், திருவையாற்றினையும் சென்று சேர்ந்து பணிந்து பெருமையுள்ள தமிழ் மாலைகளையும் கட்டளையிட்டுத் துதித்துச்சென்று; ஆடல் .... அணைந்தார் - ஐந்தொழிற் கூத்தினைச் செய்யும் இறைவரது திருப்பழனத்தினைச் சென்று அணைந்தனர்.
(வி-ரை) மாடுபுனற் பொன்னி - காவிரியின் தென்கரையில் ஆற்றுக்கு மிக அருகில் திருப்பூந்துருத்தி உள்ளமையால் மாடு என்றார். மாடு - மிக அணிமை - பக்கம்.
இழிந்து - ஆற்றில் இறங்கி நடந்து வழிக்கொள்ளும் முறை குறித்தது.
நீடு - ழுநிலமல்கிய புகழின்மிகுழு என்பது தேவாரம்.
வடகரையில்... இறைஞ்சி - திருநெய்த்தானம், திருவையாறு என்ற இரண்டு பதிகளும் காவிரியின் வடகரையில் அணிமையில் உள்ளன. பிள்ளையார் ஆற்றைக் கடந்தவுடன் எதிர்க்கரையில் உள்ள திருநெய்த்தானத்தை வணங்கிப் பின் அந்தக் கரைவழியே சென்று கிழக்கில் அணிமையில் உள்ள திருவையாற்றின் வணங்கினார் என்ற வழிவகை காட்டிய வைப்புமுறையும் காண்க. காவிரிக் கரையில் பதிகள் இருமருங்கும் உள்ளனவாதலால் வழிபடுவோர் இருகரையும் கலந்தே சென்று வழிபட்டுச் செல்வது நியமம் என்பதை முன்னர் அரசுகள் புராணத்தும் காண்க. ழுபொன்னி யிருகரையும் சார்ந்துழு (1455). நேர்ந்தது - நேர்படச் சென்று சேர்ந்து, ழுநேர்படநின் றறைகூவும் திருப்பதிகம்ழு (1680). இவை ஒருமுறையில் வழிபட உள்ளன என்ற குறிப்பும் காண்க. இவை முன் இறைஞ்சிய பதிகளாயினும் பின்னரும் வழியில் நேர்பட்டமையால் இறைஞ்சி என்ற குறிப்புமாம்.
பாடு தமிழ்மாலை - படு - பெருமை; பாடுகின்ற - அன்பர்கள் பயின்று பாடி உய்தி பெறுகின்ற என்றலுமாம். ழுபேசற்கினிய பாடல்ழு (11) என்ற தேவாரக் குறிப்பு. பாடு மாலை - என்றது கையின் பணியாலாகும் மாலையன்றி வாக்கின் பணியாகிய மாலை என்பது.
ஆடல் - ஐந்தொழிற் பெருங்கூத்து; ழுஆடினா ரொருவர் போலும்ழு (நேரிசை); ழுஆடி நின்றாய்ழு (திருவிருத்தம்). ஆடல் - அடுதல் - அழித்தல் - வெல்லுதல் என்று கொண்டு, அடைந்தாரது வினைகளை அறுக்கின்றவர்; சங்கார காரணர் என்றுரைக்கவும் நின்றது. ழுபாதந் தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன