|
| (இ-ள்) அங்குள்ள...வணங்கி - அவ்விடையின் உள்ள பிற பதிகளிலே திருமாலுக்கு மறிவரிய இறைவரது திருவடிகளை வணங்கி மேற்சென்று; பொங்கு புனல்...பணிவார் - பொங்கும் நீர்ப்பெருக்கினையுடைய பாலியாற்றின் அருகாக வடபுறத்திலே இறைவர் எங்கும் எழுந்தருளிய பதிகளை வணங்குவாராகி; இலம்பையங் கோட்டூர்....பாடினார் - திருவிலம்பையங் கோட்டூரினை வணங்கிச் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர்தியாச் செலுத்திய இறைவரைத் திருப்பதிகம் பாடித் துதித்தருளினர். |
| (வி-ரை) அங்கு உள்ள பிற பதிகள் - அங்கு - அவ்வருகாமையில் - அணிமையில்; இவை திருக்கரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலை(சீக்காலி), வள்ளிமலை முதலாயின என்பது கருதப்படும். |
| பொங்குபுனல் பாலியாற்றின் புடையில் வடபால் - பொங்குபுனல் - பெரும்பாலும் மேலே நீர்ஓட்டமின்றி ஊற்றின்மூலங் கால்களில் பொங்கி வரும் நீருடைய; இதுபற்றி முன் (1099) உரைத்தவை பார்க்க. புடையில் வடபால் - காவிரியிற் போல ஆற்றின் கரையினையே சார்ந்து செல்லாது ஆற்றின் வடபக்கம் நாட்டினுள்ளாகப் பலவிடத்தும். |
| உகைத்தல் - செலுத்துதல். "பெருந்துறைப் பெருந்தோணி பற்றி யுகைத்தலும்" (திருவா); "ஏறுகந் தேறிய நிமலன்"(1 - 2- 7) என்ற பதிகக் குறிப்பு. |
| பிற பதிகள் - உயர்ந்தவரை - என்பனவும் பாடங்கள். |
| 1004 |
| திருஇலம்பையங் கோட்டூர் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| மலையினால் பருப்பதந் துருத்திமாற் பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் நிலையினா னெனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன் கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் இலையினார் பைம்பொழி லிலம்பையங் கோட்டூ ரிருக்கையாப் பேணியென் | |
| (1) |
| கந்தனை மலிகனை கடலோலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும் தந்தியா ருறைபதி நான்மறை நாவ னற்றமிழ்க் கின்றுணை ஞானசம் பந்தன் எந்தையார் வளநக ரிலம்பையங் கோட்டூ ரிசையொடு கூடிய பத்தும்வல் வெந்துயர் கெடுகிட விண்ணவரோடு வீடுபே றின்மையின் வீடெளி தாமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- சீபருப்பதம் முதலிய பதிகளில் நிலையினான், பாலன் - விருத்தன் - பசுபதி, நீருளான் - தீயுளான், அந்தரத்துள்ளான், நினைப்பவர் மனத்துளான் என்றின்னோரன்ன தன்மைகளாற் போற்றப்படும் இறைவன் எனதுரை தனதுரையாகக் கொண்டு இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில்கொள்வதியல்பே. |
| குறிப்பு :- இத்திருப்பதிகம் சைவத்திறத்தின் சிறந்த பல உண்மைகளை எடுத்துக்காட்டி நிற்கும் சிறப்பு வாய்ந்தது; இறைவரது எங்குநிறைந்த தன்மை; பிள்ளையாரது உரையினையே தமது உரையாக இறைவர் கொண்டு வெளிப்படுத்தும் தன்மை (பிள்ளையார் வாக்கு இறைவர் வாக்கே); பிள்ளையார் நற்றமிழ்க் கின்றுணையாதல் - அன்புடை யடியாரை இறைவர் பசுபோத மிழக்கச் செய்து தாமாந்தன்மை செய்தல்; முதலியவை கருதுக. |