|
| தலவிசேடம் :- திருப்பருப்பதம் - இது வடநாட்டுப் பதிகளுள் 1-வது பதி; ஸ்ரீபர்வதம், ஸ்ரீசைலம், மல்லிகார்ச்சுனம் என வழங்கும். அர்ச்சுனம் - மருது; மருது - தலை - இடை - புடை என மூன்றாமென்றும் அவற்றுள் இது தலைமருது (மல்லிகார்ச்சுனம்) என்றும் கூறுவர். ஏனையிரண்டாவன திருவிடைமருதூரும் (சோழநாடு), திருப்புடைமருரும் (பாண்டிநாடு) ஆம் என்பர். திருப்புடைமருதூரே திருப்பிடவூர் - தேவார வைப்புத்தலமாம் என்பர். சிலாத முனிவரது திருமகனாராகிய திருநந்திதேவர் இறைவரைத் தாங்கி நிற்பதற்காக வரங்கிடந்து தவமியற்றி மலையுருவம் பெற்று நிற்கும் தலமென்பது கந்தபுராணம். |
| "பருப்ப தப்யெர்ச் சிலாதனற் பாலகன் பரமன் இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவ மியற்றிப் பொருப்ப தாகியே யீசனை முடியின்மேற் புனைந்த திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையுந் தெரிந்தான்" | |
| (கந்தபு - வழிநடைப்ப - 5); இதன் அளவிறந்த மேன்மைகளைச் சிவரகசியப் பேரிதிகாசத்தினுட் காண்க. இதனைச் சென்று சேரும் வழியின் அருமைபற்றிச் "செல்லல்லுற வரியசிவன் சீபற்பத மலையே" என்று நம்பிகள் பதிகத்துள் விதந்து பாராட்டியருளினர். "பைங்கண்வெள் ளேறதேறி" என்ற அரசுகள் திருவாக்குப் புராண வரலாறு குறித்தது. நந்திபெருமான் தவஞ்செய்து வரம்பெற்ற வரலாற்றினதுண்மையினை "நந்தியால்" என்ற இதனை அடுத்த பெரு நகரத்தின் பெயர்தானும் விளக்கிநிற்கும். சுவாமி - பருப்பத நாயகர்; அம்மை - பருப்பத நாயகி; பதிகம் 2. |
| இது கர்னூல் சில்லாவைச் சேர்ந்த நந்தியால் (Ry) நிலையத்தினின்றும் வடகிழக்கில் 60 நாழிகையாளவில் அடையத்தக்கது; அதனில் ஏறக்குறைய 40 நாழிகையளவும் மலையேற்றமாகிய வழி. இடையிடை இளைப்பாறும் இடங்களும் வசதிகளும் உண்டு. |
| திருஇந்திரநீலபருப்பதம் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - இந்தளம் - 2-ம் திருமுறை |
| குலவு பாரிடம் போற்ற வீற்றிருந், திலகு மான்மழு வேந்து மங்கையன், நிலவு மிந்திர நீல பர்ப்பதத், துலவி னானடி யுள்க நல்குமே. | |
| (1) |
| கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான், இந்தி ரன்றொழு நீல பர்ப்பதத் தந்த மில்லியை யேத்து ஞானசம், பந்தன் பாடல்கொண் டேத்தி வாழ்மினே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- இறைவர் இந்திரநீல பர்ப்பதத்துள் எழுந்தருளியுள்ளார். அவரது திருவடிகளை உள்க நன்மை நல்குவர். அவரை ஏத்தியுய்மின். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) குலவு - சூழ்ந்து பரவும். நல்கும் - நலங்களைத் தரும். உலவினான் தன் அடியை உள்கும் பேற்றினை அடியவர்க்கு நல்கும் என்றலுமாம்;- (2) ஏத்துவார் நம்பன் - ஏத்துவார்க்கு நம்பன் (நம்பன் - நம்பி அடையத்தக்கவன்; அடையப்படுபவன்);- (3) குணமதாக வாழ்த்துவோம்; அதனால் வினைநாசமம்; நன்மை வரும். பாச நீக்கமும் சிவப்பேறும் பெறுதற்குரிய சாதனங் கூறியபடி;- (6) எண்ணிலார் நினையாதார்;- (9) பாலியாது எழுவாரை - எண்ணாது செல்பவர்களை; கோலியா - கோபித்து; - (10) எட்டனை - எள்ளளவும்; |