[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1541

பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழை யேற்கு"(திருவிசை) முதலிய திருவாக்குக்கள் காண்க. அழுந்தி - வரம்பு காணாமையின் அவ்வெள்ளத்துள்ளே ஆழ்ந்து கிடந்து. வரம்பாவது கரையேறும் சிலை; அழுந்துதலாவது அதனைப் பெரிதென மயங்குதல்.
உருவெனும் துயரக் கூட்டில் - உரு - உடம்பு; துயரக் கூடு - துன்பத்துக்கே ஏதுவாயுள்ள கூடு. கூட்டில் அடைபட்ட பறவை எவ்வாறு வெளியேறமாட்டாது தடைபட்டு அதனுள்ளே வியாபரித்து அடங்கிக் கிடக்குமோ அதுபோல் வியாபக நிலைக்குரிய உயிர் உடம்பாகிய கூட்டினுள்ளே தடையுண்டு அடங்கிக் கிடக்கும் என்பது.
உணர்வின்றி மயங்குவார்கள் - உணர்வு - நல்லுணர்வு; துன்பக் கூட்டினின்றும் விடுதி பெறவேண்டுமென்ற அறிவுணர்ச்சி. மயங்குவார்கள் - பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளுடையோர். மயக்கமாவது ஒன்றை அஃதல்லாத பிறிதொன்றாக எண்ணுதல். இம்மயக்கமானது ஈண்டுப் பஞ்சாக்கர உபதேசத்தாலும் மெஞ்ஞான தேசிகரது அருட்பார்வை முதலிய தீக்கையாலும் நீங்கப் பெற்றது என்க. "ஈனமாம் பிறவி"யின் தன்மையினை விரித்தவாறு.
திருமணத்துடன்...சிறப்பினாலே - அம்மயக்கம் நீங்கிய காரணம் கூறியபடி; சேவித்து முன்செலும் சிறப்பு - "ஏக னாகி இறைபணி நிற்க...மலமாயை தன்னொடு வல்வினை யின்றே"(போதம் - 10) என்ற ஞானநூற் கருத்து இங்கு நினைவுகூர்தற் பாலது; சேவித்து முன் செல்லும் சிறப்பு - இறை பணியேயாகும் என்க, பிள்ளையார் சிவஞான நிறைவுடைய ராகலான்.
மருவிய பிறவி நீங்க - இது பாசநீக்க முணர்த்திற்று. "பாச மொருவத், தண்ணிழ லாம்பதி விதி யெண்ணு மஞ்செழுத்தே"(போதம் - 9) என்றபடி விதிப்படி தீக்கைசெய்து உபதேசஞ் செய்யப்பெற்ற சாதனத்தாலும், முன்னைப் பக்குவ முதிர்ச்சியாலும் மூலமல வலி நீங்கப் பெற்றமையால் பிறவி நீங்கும் பயன்பெற்றனர். மருவிய பிறவி - இப்பிறவி. இவ்வுடம்பான் முகந்துகொண்ட வினைப்பயனை அனுபவிக்கநின்ற, இனி வருவதாய் எஞ்சிநின்ற, பிறவிகள் எல்லாம் தீக்கையால் ஒழிந்தன.
மன்னு சோதியினுட் புக்கார் - மன்னு சோதி - நிலைபெற்ற - அழியாத - சிவச் சோதி; இறைவரது "முழுச்சுடர்ச் சோதி" (3144).
திருமணத்துடன்...புக்கார் - முற்செய் தவத்தினாலே குருவின் அருளுபதேசம் பெறுதல் வரும்; அதனாலே அவ்வுபதேசப் பொருளாகிய மந்திரப் பொருளை எண்ணி வழிபடுதல் வரும்; அதனாலே மும்மை மலங்களும் வலி நீங்கும்; அதனாலே அயரா அன்பின் அரன் கழலின் நீங்காது நிற்கும் பேறு வரும். ஆனால், இந்நிலை யெல்லாம் இடையீடின்றி ஒருங்கே நிகழ்தற்கு முன்னைத் தவத்தினால் விளைந்த கக்குவ முதிர்ச்சியும் ஆசாரியரது அருண்ஞான ஆற்றலுமே காரணமாயின என்க.
நீங்கி - என்பதும் பாடம்.
1249
திருநல்லூர்ப்பெருமணம்
திருச்சிற்றம்பலம்

பண் - அந்தாளிக் குறிஞ்சி - 3-ம் திருமுறை

கல்லூர்ப் பெருமணம் வேண்டா; கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில?;
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்!;
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

(1)