120திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

தாளாண்மை - இரட்டுறமொழிதலால் முயற்சி என்றும், தாளினாலேசெய்த ஆண்மை (உதைத்துருட்டியது) என்றும் கொள்ள வைத்தது கவி நலம்.
கருப்பறியலூர் வணங்கி - ஊரினைத் தூரத்தே கண்டு வணங்கி; சார்ந்தார் - ஊரினுள் சார்ந்தனர்.
குறிப்பு - முதன்முறை திருத்தில்லை வழிபாடும் (250 - 253) திருப்பேரூர் வழிபாடும் (3242 - 3245) தனித்தனியே நந்நான்கு பாட்டுக்களால் ஆசிரியர் கூறிய வொற்றுமை நயம் பற்றி முன் (3242 - 3245) உரைக்கப்பட்டது. அதன் பின் ஈண்டு இரண்டாம் முறைத் திருத்தில்லை வழிபாட்டினைப் பேரூரும் தில்லையும் கூடியவாற்றால் ஐந்து (3266 - 3270) திருப்பாட்டுக்களா லருளிய திறமும் கருதத்தக்கது. முன்போலவே இவற்றின் பொருளொற்றுமை நயமுஞ் சிந்தித் துணரத்தக்கது.

116

கோயில்
திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி

மடித்தாடு மடிமைக்க ணன்றியே மனனேநீ வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் காதலத்திற் றமருகமு மெரியகலுங் கரிய பாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

(1)

பாரூரு மரவல்கு லுமைநங்கை யவள்பங்கன் பைங்க ணேற்றன்
ஊரூரன் றருமனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் றம்பிரா னாரூரன் மீகொங்கி லணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.

(2)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- முன் ஆசிரியர் (3269) காட்டியருளியவாறு கண்டு கொள்க. திருப்பேரூர் வழிபாடும் (3242 - 3245), முன்னர்த் திருத்தில்லை வழிபாடுங் கருதுக.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மடித்தாடும் அடிமை - ஒருதாளை மடித்து ஊன்றியும் ஒருதாளை மடித்துத் தூக்கியும் ஆடுகின்ற திருவடிக் கீழ்ச் செய்யும் அடிமைத்திறம்; அடிமைக் கண் அன்றியே வாழும் நாளும் - அடிமைத்திறத்தினின்றும் வழுவி நிகழும் நாள்களிலே; தடுத்தாட்டி - மேற்செல்லாதபடி தடுத்துத் தமது புரத்துக்குட் கொண்டு புகுத்தி; காலனார் கைப்படாது தாமே வினைப்போகந்துய்ப்பித்து ஆட்கொள்ளுதல் கருத்து. தருமனார் -இயமன்; தமர் - "கால பாசம் பிடித்தெழு தூதுவர்" - இயமன் தூதர்கள்; செக்கிலிடுதல் - இது முதலியவை நரகத் தண்டனைகள்; போற்றிப் பஃறொடை பார்க்க. கடுத்து - கடுக; விரைவுபட; எரிஅகல் - தீயைக் கொண்ட அகல்; கரிய பாம்பு - மிகவும் விடத்தன்மையுடைய குறிப்பு. பிடித்தாடி - பெயர்; ஆடுபவர்; ஆடுபவராகிய பெருமானை என்க; பெற்றாமன்றே - பெற்றவாறு தான் என்ன பெரும் பேறு என்று மகிழ்ந்தது; "பெற்றவா றெனுங்களிப்பால்" (3269) என்று ஆசிரியர் இதனை உரைத்தருளினர்;- (2) பேராது - பெயர்தலின்றி - நீங்காது; பேராது...பிரியாது உள்கி - காமத்திற் சென்றார்களும் பிரியாது உள்குகின்றனர்; திருஅடித் தொண்டர்களும் பிரியாது உள்குகின்றனர். ஆனால்அடித்தொண்டர் பிரியாது உள்கும் திறம்வேறு; முன்னையது அழியும் தன்மையும், சிறிது அளவே நிற்கும் தன்மையும், வெறுப்பும் துன்பமும் உளதாக்கும் தன்மையுமுடையது; பின்னையது அவ்வாறன்று என்பார்