| |
| யும்ப ரார்தொழு தேத்த மாமலை யாளொ டும்முட னேயுறைவிடம் அம்பொன் வீழிகொண்டீ! ரடி யேற்கு மருளுதிரே. | |
| 1 | | விடங்கொண் மாமிடற்றீர்வெள்ளைச்சுரு ளான்றிட்டுவிட்டகாதினீரென்று திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை மடங்கல் பூண்ட விமானமும் மண்மிசை வந்தி ழிச்சிய வான நாட்டையும் அடங்கல் வீழிகொண்டீ ரடியேற்கு மருளிதிரே. | |
| 2 |
| வேத வேதியர் வேத நீதிய ரோதுவார்விரி நீர்மிழலையுள் ஆதி "வீழி கொண்டீ ரடியேற்கு மருளு"கென்று நாத கீதம்வண் டோது வார்பொழி னாவ லூரன்வன் றொண்ட னற்றமிழ் பாதமோ தவல்லார் பரனோடுங் கூடுவரே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - 3213-ல் ஆசிரியரும் பதிகத் திருக்கடைக்காப்பில் நம்பிகளும் காட்டுதல் காண்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) நம்பினார்க் கருள்செய்யும் - வேள்வி என்று கூட்டுக. அருள்செய்யு மந்தணர் என்று கூட்டினுமாம்; மடவார் - பொன் - அணி பெற்ற என்க; அம்பொன் - பொன் போன்ற; வீழி - வீழிமிழலையாகிய பதியினை இடமாக; அடியேற்கும் - ஈண்டு உமது இயல்பாக யாவருக்கும் அருளுதல் போல அடியேற்கும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; தகுதியில்லாத எனக்கும் என்று சிறப்பும்மையுமாம்;-(2) வெள்ளைச் சுருள் - வெண் சங்கக் குழை. சுருள் - சுருண்டதுபோன்ற வட்டவடிவமுள்ளதனைச் சுருள் என்றார்; இவ்வாறன்றி இடது காதில் வெள்ளை ஓலையின் சுருளாலாகிய தோடு என்றுரைப்பினு மமையும்; திடங்கொள் சிந்தையினார் - வைதிக நெறி ஒழுக்கத்தில் மாறாது நிற்கும் உறைப்புடையவர். அந்தணர்கள் - முனிவர்கள். கலிகாக்கும் - கலியின் துன்பம் வாராமே காக்கும். "கலியை வாராமே செற்றார்" (தேவா); மடங்கல் - சிங்கம்.பூண்ட - சிங்கம் தாங்கிய கோலத்துடன் அமைத்த நிலை;-(3) ஊனை உற்றுயிராயினீர் - உயிர், ஊனுடம்பில் நின்று இயக்குதல் போல நீர் உயிரினை உடம்பாகக் கொண்டு உண்ணின்றியக்குகின்றீர்; ஒளிமூன்று - தீயும் ஞாயிறும் திங்களும்; தெளிநீர் - சுத்தோதகம் என்பர் வடவர்; தேன் - திருமஞ்சனப் பண்டம்; விண்ணிலான - விண்ணின்றிழிந்த;-(4) பந்தம் வீடிவை பண்ணினீர் - "பந்தம் வீடு தரும் பரமன்" (300) "பந்தமு மாய்வீடு மாயினார்க்கு" (திருவா) பந்தம் - சிருட்டி முதல் மறைப் பீறாகிய நான்கும். வீடு - முத்தித் திருவருள்; ஐந்தொழிலும் இவற்றுள் அடங்கும்; பண்ணினீர் - உயிர்களுக்கு ஆக்கினீர்; மதிப்பிதிர்க் கண்ணியீர் - பிறையை முடித்தவரே; வான நாடியர் - தேவநாட்டுப் பெண்கள்;-(5) புரிசை மூன்று - மும்மதில்; திரிபுரம் - (6) எறிந்த - "தாதைதாள் மழுவினாலெறிந்த"; இடந்த - தமது கண்ணை இடந்த. இடத்தல் - தோண்டுதல்; ஏத்து பத்தர்கட்கு - இவர் முதலாக ஏத்தப்படும் அடியார்கட்கு; -(7) சந்தி - காலை மாலை நண்பகல்கள்; -(8) பாரிடம் - பூதகணம். பாரிடம் சுற்றமாயினீர் என்று கூட்டுக; இருந்து.... நல்கினீர் - தமிழோடிசை - ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும் அருளிய இசை பொருந்திய திருப்பதிகங்கள். காசுநல்கினீர் - நித்தம் படிக்காசு நல்கிய வரலாறு அவர்களது புராணங்களுட் காண்க; (9) தூயநீரமுதாய...சொல்லினீர் - இஃது இத்தல வரலாறுகளுள் ஒன்று போலும்; மேய நீர்....பொருளாய - பலி |