| |
| ஏனை மக்களும் காண வருவனவாம். "கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவி" (3695) என மேல்வருவது காண்க; ஆயின் இவ்வாறு அவர் திருமேனி புறக் கண்ணாற் காண வரும்போது, அவர் இறைவர் தாமாந் தன்மை அறியவாராது அத்திருக்கோலம் மறைந்த பின்னரே அறிய நிற்பது இதன் தன்மையாதலும் கண்டுகொள்க. |
| 35 |
3695 | தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து "தொண்டானார்க் கெந்நாளுஞ் சோறளிக்குந் திருத்தொண்டர் வண்டார்பூந் தாராரிம் மனைக்குள்ளா ரோ?"வென்ன, | |
| 36 |
3696 | "வந்தணைந்து வினவுவார் மாதவரே யா"மென்று சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி "அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார்; எந்தமையா ளுடையவரே! யகத்துளெழுந் தருளு" மென, | |
| 37 |
3697 | மடவரலை முகநோக்கி "மாதரார் தாமிருந்த இடவகையிற் றனிபுகுதோ" மென்றருள வதுகேட்டு "விடவகல்வார் போலிருந்தா" ரெனவெருவி விரைந்துமனைக் கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலையெய்தி, | |
| 38 |
3698 | "அம்பலவ ரடியாரை யமுதுசெய்விப் பாரிற்றைக் கெம்பெருமா னியாவரையுங் கண்டிலர்தே டிப்போனார்; வம்பெனநீ ரெழுந்தருளி வருந்திருவே டங்கண்டாற் றம்பெரிய பேறென்றேமிகமகிழ்வ; ரினித்தாழார், | |
| 39 |
3699 | "இப்பொழுதே வந்தணைவ ரெழுந்தருளி யிரு"மென்ன, "ஒப்பில்மனை யறம்புரப்பீ!; ருத்தரா பதியுள்ளோஞ்; செப்பருஞ்சீர்ச் சிறுத்தொடர் தமைக்காணச் சேர்ந்தனம்யாம்; எப்பரிசு மவரொழிய விங்கிரோ" மென்றருளி, | |
| 40 |
3700 | கண்ணுதலிற் காட்டாதார் "கணபதீச் சரத்தின்கண் வண்ணமல ராத்தியின்கீ ழிருக்கின்றோ; மற்றவர்தா நண்ணினா னாமிருந்த பரிசுரைப்பீ" ரென்றருளி அண்ணலார் திருவாத்தி யணைந்தருளி யமர்ந்திருந்தார். | |
| 41 |
| 3695. (இ-ள்) தண்டாதது........போல - தணியாததாகிய ஒரு பெரும் பசியினையுடையவர் போல; கண்டாரை.....அணைந்து - கண்டார்களை நோக்கிச் சிறுத் தொண்டரது மனையைக் கேட்டறிந்து விரைவில் அங்கு வந்தணைந்து; "தொண்டனார்க்கு....உள்ளாரோ?" என்ன -சிவபெருமானது தொண்டரானார்க்கு எந்நாளிலும், சோறு அளிக்கின்ற திருத்தொண்டராகிய, வண்டுகள் மொய்க்கும் பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டராகிய, பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டனார் இம்மனைக்கண் உள்ளாரோ? என்று கேட்க, |
| 36 |