90 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| | | என்பது மேல்வரும்பாட்டினாலும், இப்பதியின் பெருமான் இத்திருநடக் காட்சியைத் தில்லையில் நம்பிகளுக்குக் காட்டியருளினார் என்பது "பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்றம்பலத்தே பெற்றாம்" என்ற நம்பிகளது திருவாக்காகிய அகச்சான்றாலும் பெறப்படுதலின் இப்பதி தில்லையம்பதியே யாகும் என்ற உண்மை விளங்கும்; இவ்வுண்மையினை ஆசிரியர் ஈண்டு இப்பதியில் நம்பிகள் வழிபட்ட வரலாற்றினைத் தில்லையின் வழிபாடு கூறிய (250 - 253) அந்த யாப்பிலும் சந்தத்திலும் யாத்த வகையாலும், ஈரிடத்திலும் நன்னான்கு திருப்பாட்டளவே கூறிமுடித்த கருத்தினாலும், ஈரிடத்தும் முறையே அவ்வப்பாட்டுக்களின் பொருளும் கருத்தும் ஒற்றுமை பெறக் கூறிய திறத்தாலும், ஈண்டு "உலகெலாம்" என்னும் இறைவர் தந்த முதன்மொழி கொண்டு தொடங்குதலானும், பிறவாற்றானும் அறியவைத்த ஆசிரியரது அருட்குறிப்புக்கொண்ட கவிநலத்தின் தெய்வ மணம் கண்டுகொள்க. "உலகெலா முய்ய" (3242) என்ற இத்திருப் பாட்டுப் "பெருமதில் சிறந்த" (250) என்ற பாட்டின் பொருளும், மேல்வரும் "அத்திருப்பதியை" (3243), "காண்டலுந் தொழுது" (3244), "அந்நிலை நிகழ்ந்த" (3245) என்ற பாட்டுக்கள், முறையே, "வையகம் பொலிய" (251) "ஐந்து பேரறிவும்" (252), "தெண்ணிலா மலர்ந்த" (253) என்ற பாட்டுக்களின் கருத்தும் பொருளும் விளங்கவைத்து நிற்பன காண்க. பேரூர் குறுகினார் முறுகு மாதரவால் = புகுந்தார் - திருவாணுக் கன்றிருவாயில்; தில்லை மன்றுணின்றாடல் - நேர்காட்ட...கண்டார் = வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தித் - தாழ்ந்தெழுந்தான்; பூண்டவைம் புலனிற் புலப்படா வின்பம் புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க=ஐந்து பேரறிவும்...ஆனந்த வெல்லையி றனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துட் டிளைத்து; பொன் மணிமன்றுள்...புரிநடங் கும்பிடப் பெற்றா லென்னிப்புறம்போ யெய்துவது = திரு நடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே - வரலிதா மின்பமாம்; என்றிவ்வாறு ஒற்றுமை கண்டு கொள்க. | | குலவுமக்கொங்கில், குலவுமிக்கொங்கில் - என்று முன் பதிப்புக்களிலெல்லாம் கொண்ட பாடங்கள் தவறு. | | 88 | 3243 | அத்திருப் பதியை யணைந்துமுன் றம்மை யாண்டவர் கோயிலிற் புகுந்து மெய்த்தவர் சூழ வலங்கொண்டு முன்பு மேவுவார் தம்மெதிர் விளங்க நித்தனார் தில்லை மன்றுணின் றாட் னீடிய கோலநேர் காட்டக் கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக் கலுழிநீர் பொழிதரக் கண்டார். | | | 89 | | (இ-ள்.) அத்திருப்பதியை...வலங்கொண்டு - அந்தத் திருப்பதியாகிய திருப்பேரூரினை அணைந்து, முன்னால் தம்மை ஆண்டருளிய இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்து, மெய்த்தவர்களாகிய அடியார்கள் புடைசூழ வலமாக வந்து; முன்பு மேவுவார் - திருமுன்பு சென்று சேர்வாராகிய நம்பிகள்; தம்மெதிர்....காட்ட - தம்மெதிரே இறைவனார் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற நீடிய திருக்கோலத்தினையே நேராக இங்குக் காட்டியருள; கைத்தலம்...கண்டார் - இரண்டு கைகளையும் சிரமேற் கூப்பிக் கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர் ஆறுபோலப் பெருகிவரக் கண்டருளினர். |
|
|
|
|