பாடல் எண் :4076

வளவர்பிரான் றிருமகளார் மங்கையருக் கரசியார்
களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார்
இளவரவெண் பிறையணிந்தார்க் கேற்றதிருத் தொண்டெல்லாம்
அளவில்புகழ் பெறவிளக்கி யருள்பெருக வரசளித்தார்.
8
(இ-ள்) வளவர்பிராண்...கவுரியனார் - சோழர் பெருமானாரது திருமகளாராகிய மங்கையர்க்கரசி யம்மையாரது கலவைச் சாந்தணிந்த தனங்கள் மூழ்கப்பெற்ற அகன்ற மார்பினையுடைய பாண்டியராகிய நின்ற சீர் நெடுமாறனார்; இளஅரவு....அரசளித்தார் - இளநாகத்தினையும் வெள்ளிய பிறையினையும் அணிந்த பெருமானாருக்கு ஏற்ற திருத்தொண்டுகளை யெல்லாம் அளவில்லாத புகழ் பெறும்படி விளங்கச் செய்து சிவனருள் பெருகும்படி அரசாட்சி செய்தனர்.
(வி-ரை) வளவர்பிரான் - சோழ அரசருக்கு; நான்கனுருபுவிரிக்க. “வளவர்கோன் பாவைÓ (தேவா).
மங்கையருக்கரசியார்.....கவுரியனார் - கவுரியனார் - நெடுமாற பாண்டியர்; மங்கையர்க்கரசியாரது கணவனார் என்றபடி; “முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப், பத்தியார் கின்ற பாண்டியமா தேவிÓ (தேவா).
இளஅரவு வெண்பிறை - இள அரவினையும் வெள்ளிய பிறையினையும் என்க. எண்ணும்மைகள் தொக்கன. “இள நாகமொ டேனம்Ó (தேவா). அரவு, அர அரா - என்பன ஒரு சொல்.
ஏற்ற திருத்தொண்டெல்லாம் - விளக்கி - சிவனுக் குகந்தனவாக விதிக்கப்பட்ட திருத்தொண்டின் வகைகளை எல்லாம் விளக்கி; விளக்குதல் - செய்தும் செய்வித்தும் உலகறியப் பண்ணுதல்.
அருள் பெருக - சிவபிரானருள் பெருக உளதாகும்படி;
இளவளவெண் - தொண்டரொல்லாம் - என்பனவும் பாடங்கள்.