பெருவாய் முதலை கரையின்கட் கொடுவந் துமிழ்ந்த பிள்ளைதனை யுருகா நின்ற தாயோடி யெடுத்துக் கொடுவந் துயிரளித்த திருவா ளன்றன் சேவடிக்கீழ்ச் சீல மறையோ னொடுவீழ்ந்தாள் மருவார் தருவின் மலர்மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள். | 12 | (இ-ள்) பெருவாய்....பிள்ளைதனை - பெரிய வாயினின்றும் முதலை கரையினிடத்துக் கொண்டுவந்து உமிழ்ந்த அந்தப் பிள்ளையினை; உருகா நின்ற.....வீழ்ந்தாள் - அன்பு மேலீட்டினால் மனமுருகிய தாய் ஓடிச்சென்று எடுத்துக் கொண்டு வந்து உயிரினை மீளக் கொடுத்த திருவாளராகிய நம்பிகளது சேவடியின் கீழே சைவ ஒழுக்க மிக்க மறையவனோடும் விழுந்து வணங்கினாள்; மருவார்.....வானோர்கள் - ஆகாயத்திலே தேவர்கள் மணமுடைய தெய்வ மரங்களின் பூ மழை பொழிந்தார்கள். (வி-ரை) கரையின்கண் வந்து முதலை பெருவாய் கொடு உமிழ்ந்த - என்க. பெருவாய் கொடு உழிழ்ந்த - முதலையின் பிளந்த பெரிய வாயின் தன்மையினையும், அது அதனைத் திறந்து உமிழ்ந்த தன்மையினையும் குறித்தது; வாய்திறந்து முதலைக் கக்க மகனை நீ அழைத்ததோ? என்றார் பிற்காலத்தான்றோர்; உமிழ்ந்த - முதலை தனது இரையினை மென்று தின்னாது பிண்டமாக விழுங்கும் நிலையினையும், அவ்வாறு விழுங்கிய உணவு தனது பகுதிக் கொவ்வாத போது மீள உமிழும் நிலையினையும் குறித்தது. “விழுங்கÓ (4234); முதலை வாயில் உள்ள கூரிய வரிசையின் பற்கள் அதன் இரையினைவிடாது பற்றிக் கொள்வதற்கே பயன்படுவன வன்றிமென்று தின்பதற்கல்ல என்பது அதன் உடல் நூல் அறிஞர் கூற்று.1_______________ 1 குறிப்பு :- இங்கு அனுபவத்திற் றெரிந்த செய்தி ஒன்று குறிப்பிடத்தக்கது; சில ஆண்டுகளில் முன் ஒரு சிறுவன் ஆற்று மடுவில் முதலையினால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றுக்குட் போயினன்; ஆனால் உயிர் நீங்கவில்லை. அங்கு அவ்வயிறு பெரிய தொரு வளைவாகிய குகைபோலப் புலப்பட, அவன், அதன் உட்புறத்தைத் தன் கை நகங்களாலும் தன்னிடமிருந்ததொரு சிறிய கத்தியாலும் பிறாண்ட, அதற்கு வயிற்றில் வேதனை யுண்டாயினமையின், முதலை அவனை மீளக் கொணர்ந்து (கக்கி) உமிழ்ந்து விட்டது. உணர்வற்ற நிலையில் கிடந்த அவனைச் சிலர் கண்டு எடுத்து உபசரிக்க உமிழ்ந்த பிள்ளைதனை - மறலிமைந்தன் உயிர் உடலின் வளர்ச்சியுடன் முதலை வாயிற் றருவித்தான் என்ற மட்டில் முன்பாட்டில் கூறிய ஆசிரியர், அது அவனை உமிழ்ந்த செயலை வேறு கூறாது உமிழ்ந்தபிள்ளை என்றதனாற் பெறவைத்தார். உமிழ்ந்தது - அவ்வாறு உமிழ்ந்த என்று பிரித்துரைத்துக்கொள்க. பெற்றோரது சோகத்தை விரைவில் போக்கவந்த வரலாற்றின் விரைவுக்கேற்பச் சொற்சுருக்கம் படக் கூறியது கவிநயம். மறலிமைந்தனைத் தருவித்த செயல் கூறும் சுருக்கமும் இக்கருத்துப்பற்றியது. இனி, மேல்வரும் உவகை நிகழ்ச்சி கூறும் விரிவை இவற்றுடன் ஒப்பு நோக்குக. உருகாநின்ற தாய் ஒடி எடுத்துக்கொடுவந்து - வீழ்ந்தாள் - தந்தையினும் தாயின் அன்பு மிகுந்த நிலை குறித்தது. வீழ்ந்தாள் - தன் செயலற்ற நிலையில் வீழ்ந்த குறிப்பு; எடுத்துக்கொடுவந்து - மைந்தன் இவ்வரலாறு அறியானாதலால் அவனையும் உடன் பணியச் செய்யும் நிலைபற்றி அவனைத் தாய் தானே எடுத்துக்கொண்டுவந்து சேவடியில் விழுத்தி வீழ்ந்தாள். சீலமறையோனொடு - வீழ்ந்தாள் - மறையோன் விழுந்ததும் மனைவி விழுந்ததும் உடன் ஒருங்கே நிகழ்ந்தன என்பது; சீலம் - சைவசீலம்; இது முன் (4235 - 4237) உரைக்கப்பட்டது; இதுவே நம்பிகளது திருவருள் பெறக் காரணமாய் நின்றமையால் அதனை எடுத்துக் கூறினார்; அருள் பெறக் காரணமாகிய சீலம் என்க. வீழ்ந்தாள் - என்றமையால் மறையோன் - மகன் - மனைவி மூவரும் வீழ்ந்தாராயினும் இதனுள் அவ்வம்மை செயலே மிக்கிருந்தது என்பார் அவள் செயலாக வீழ்ந்தாள் என முடித்தருளினர்.“தானுந்தன் தையலுந்தாழ் சடையோ னாண்டிலனேல்Ó (திருவா). தரு - தேவமரங்கள்; மந்தாரம் முதலியன. உயிரளித்த திருவாளன் - நம்பிகள்; திருவாளன் - சைவத் திருப் பெற்றவர்; “திருவாளன் றிருநீறுÓ (1332) என்றபடி சிவபெருமான் ஒருவரே திருவாளரெனப்படுவார்; “திருவுடையார்Ó (நம்பி - பூவணம் - இந்தளம் 1); அவரேயனையவராதலின் நம்பிகளும் திருவாளன் எனப்பட்டார். அன்றியும், உயிரளித்தல் - இறைவர் செய்யும் ஐந்தொழிலினுட்பட்ட தொன்றாய், இங்கு அவரருளால் தாம் செய்யும் தன்மைகளையும் இவர்பாலாக்கி யிட்ட நிலையும் கருதுக. |
|
|