பெருகு மதிநூ லமைச்சர்களை யழைத்துப் பெரியோ ரெழுந்தருளப் பொருவி னகர மலங்கரித்துப் பண்ணிப் பயணம் புறுப்படுவித் தருவி மதமால் யானையினை யணைந்து மிசைகொண் டரசர்பெருந் தெருவு கழிய வெதிர்வந்தார் சேரர் குலமுய்ந் திடவந்தார். | 18 | (இ-ள்) பெருகு....அழைத்து - பெருகும் மதிநூல் வல்ல அமைச்சர்களை வரவழைத்து; பெரியோர்...புறப்படுவித்து - பெரியோராகிய நம்பிகள் எழுந்தருளுதற்காக ஒப்பற்ற அந்நகரத்தினை அலங்கரித்துப் பண்ணிப் பயனம் புறப்படச் செய்து; அருவி..மிசை கொண்டு - அருவி போலப் பாயும் மதத்தினை யுடைய யானையை அணைந்து அதனை மேல் கொண்டு; அரசர்....உய்ந்திட வந்தார் - அரசர்களது பெருந் தெருவு கழிந்திட எதிர் கொள்ளும் பொருட்டு வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தவராகிய சேரமானார். (வி-ரை) உய்ந்திட வந்தார் - எதிர் வந்தார் - என்க; உய்ந்திட வந்தார் - வத்தவராகிய சேரலனார் என வினையாலணையும் பெயர். அமைச்சர்களை அழைத்து - புறப்படுவித்து - அரசர் அமைச்சர்களுடனே சென்று எதிர் கொள்ளுதல் அரசாங்கத்தின் சிறப்பாகிய பெரிய மரபு; எழுந்தருள - எழுந்தருளுதற்காக; அதற்குத் தகுதியாக. அலங்கரித்துப் பண்ணி - அலங்காரங்களை யெல்லாம் விதிப்படி செய்வித்து; “மிசைகொள் பண்ணும் பிடி வெள்ளம்Ó (3890); “தோன்றப் பண்ணும் பிடிÓ (3894); பண்ணுதல் - வினை முற்றுதல். யானையினை - மிசை கொண்டு வந்தது நம்பிகளை எதிர்கொண்டு வணங்கி அவரை அந்த யானையின் மேல் ஏற்றித் தாம் பின்னிருந்து உபசரித்து வருவதற்கு; மேல் “வரு கைவரையின் மிசையேற்றித் தாம்பின் மதிவெண் குடைகவித்தார்Ó (4249) என்பது காண்க; முன்னர் வரலாறும் (3894) காண்க. அரசர் பெருந்தெருவு கழிய - அரசர் வாழும் பெருந்தெருவு பிற்பட மேற்சென்று அத்தெரு வளவிலமையாது; நாட்டின் எல்லை பெற நெடுந்தூரம் சென்றமை மேற் பாட்டிற் கூறுதல் காண்க. அதன் தொடக்கம் இவ்வாறு கூறப்பட்டது. |
|
|