பக்கம் எண் :

நான்மாடக்கூடலான படலம் 1



பத்தொன்பதாவது நான்மாடக்கூடலான படலம்

பரசிவம்

[எழுசீரடியாசிரிய விருத்தம்]

பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல வுள்ள மதியின்
பேதங்க ளல்ல விவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல்
வேதங்கி டந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற்
பாதங்க ணோவ வளையிற்த னாதி பகர்வாரை யாயு மவரே.

     (இ - ள்.) ஆயுமவர் - உண்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையார்,
கூடல் மறுகில் - மதுரைத் திருவீதியில், பாதங்கள் நோவ - திருவடிகள்
வருந்த (நடந்து), வளை இந்தன ஆதி பகர்வாரை - வளையலும் விறகும்
முதலியவற்றை விற்கும் சோமசுந்தரக்கடவுளை, பூதங்கள் அல்ல - வான்
முதலிய ஐம்பூதங்களு மல்ல; பொறி அல்ல - செவி முதலிய
ஐம்பொறிகளுமல்ல; வேறு புலன் அல்ல - ஏனை ஒலி முதலிய
ஐம்புலன்களுமல்ல; உள்ளம் மதியின் பேதங்கள் அல்ல - மனமும் புத்தியும்
முதலிய அந்தக்கரணங்களின் விகற்பங்களுமல்ல; இவை அன்றி நின்ற பிறிது
அல்ல என்று - இவைகளல்லாமல் எஞ்சி நின்ற ஆன்மாவுமல்ல என்றுகூறி,
பெருநூல் வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப - பெரு நூலாகிய
வேதங்கள் (இதுவெனத் துணிய மாட்டாது) கிடந்து தடுமாறுதற் கேதுவாகிய
வஞ்ச வெளி என்று கூறுவர்.