பக்கம் எண் :

10திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



உமாதேவியாரின் தலைவனுமாகிய சொக்கநாதனின், சேவடி - சிவந்த
திருவடிகளை, ஏத்துவாம் - துதிப்பாம் எ - று.

     இல் - இல்லமாகவுடைய. காவினையுடைய விண்ணுலகிற்கு
நாயகனென்பார், ‘காவினாயகன்’ என்றார். எல்லாத் தேவர்களிடத்துமிருந்து
அவர்களை யியக்குவிப்பான் இறைவனாகலின் ‘ஆவி நாயகன்’ என்றார்.
கண்ணியாகிய தேவியென்க. (7)

         அங்கயற்கண்ணம்மை

      [அறுசீரடியாசிரிய விருத்தம்]

பங்கயற்கண் ணரியபரம் பரனுருவே
     தனக்குரிய படிவ மாகி*
இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த+
     சராசரங்க ளீன்றுந் தாழாக்
கொங்கயற்கண் மலர்க்ககூந்தற் குமரிபாண்
     டியன்மகள்போற் கோலங் கொண்ட
அங்கயற்க ணம்மையிரு பாதப்போ
     தெப்போது மகத்துள் வைப்போம்.

     (இ - ள்.) பங்கயற்கு அண் அரிய - பிரமனுக்கும் அணுகுதற்கரிய,
பரம்பரன் உருவே - சிவபெருமான் திருவுருவே, தனக்கு உரிய படிவம்
ஆகி - தனக்கு உரிய திருவுருவமாகப் பெற்று, இங்கு - இவ்விடத்தும்,
அயற்கண் - அயலிடத்தும் உள்ள, அகன் உலகம் - இட மகன்ற
உலகங்களையும், எண் இறந்த - அளவற்ற, சர அசரங்கள் - இயங்குவன
நிற்பனவாகிய பொருள்களையும், ஈன்றும் - பெற்றும், தாழாக் கொங்கை -
தளராத கொங்கைகளையும், அல் கண் மலர் கூந்தல் - இருள்போலும்
தேனிறைந்த மலர்களை யணிந்த கூந்தலையு முடைய, குமரி - கன்னியாகிய,
பாண்டியன் மகள்போல் - மலையத் துவச பாண்டியனின் திருமகளாரைப் 
போல், கோலம்கொண்ட - திருவுருத் தாங்கிய, அங்கயள்கணம்மை -
அங்கயற்கணம்மையாரின், இருபாதப் போது - திருவடி மலர்
இரண்டனையும், எப்போதும் - எஞ்ஞான்றும், அகத்துள் வைப்பாம -
மனத்தின்கண் வைத்துச் சிந்திப்பாம் எ - று.

     பரம்பரன் - எவற்றினக்கும் மேலோன். இறைவன் திருவுருக்
கொள்ளுமாறே சத்தயும் உருவு கொள்ளுதலையும், இறைவி உலகுயி
ரெல்லாம் பெற்றும் கன்னியாயிருத்தலையும்,

"சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
யொத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி
வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றா னீச னத்திற மவளு நிற்பள்"


     (பாடம்.) * படிவமாக்கி. + உலகத் தெண்ணிறந்த.