(இ
- ள்.) சம்பகமாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் - சண்பகமாறன் என்னும்
தமிழர் வேந்தன், கூடல் அம்பகம் நுதலினானை
அங்கயற் கண்ணினாளை - கூடலில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணனாகிய
சோமசுந்தரக் கடவுளையும் அங்கயற் கண்ணம்மையையும், வம்பு அகம்
நிறைந்த செந்தாமரை அடி வந்து தாழ்ந்து - மணம் உள்ளே நிறைந்த
செந்தாமரை மலர்போன்ற திருவடிகளில் வந்து வணங்கி, நம்புஅகம் நிறைந்த
அன்பால் - சிவமே பொருளெனத் துணிந்த உள்ளத்தின்கண் நிறைந்த
அன்பினால், பல்பணி நடாத்தி வைகும் - பல திருப்பணிகள் நடாத்தி
இனிதிருப்பானாயினன்.
தமிழ்நர்,
நர் பெயர் விகுதி. அம்பகம் - கண். எண்ணும்மைகள்
தொக்கன. ஆறனுருபாகத் திரித்தலுமாம். வம்பு - மணம். நம்பு - விருப்பம்.
"நம்பும் மேவும் நசையா கும்மே" |
என்பது தொல்காப்பியம்,
இச்சொல் இக்காலத்து நம்பகம், நம்பிக்கை என
உருத்திரிந்து, பொருள் வேறுபட்டு வழங்குகிறது. (27)
ஆகச்செய்யுள்
- 2566.
|