இருபத்தாறாவது
மாபாதகந் தீர்த்த படலம்
|
[கலிவிருத்தம்]
|
வேத
நாயகன் வெம்பழி யஞ்சிய
நாத னான நலனிது நல்கிய
தாதை யைக்கொலை செய்த தனயன்மா
பாத கந்தனைத் தீர்த்தமை பாடுவாம். |
(இ
- ள்.) வேத நாயகன் - வேதங்கட்கு இறைவனாகிய சோம சுந்தரக்
கடவுள், வெம்பழி அஞ்சிய நாதன் ஆன நலன் இது - கொடிய பழியினை
அஞ்சிய நாதனாகிய திருவிளையாடல் இதுவாகும்; நல்கிய தாதையைக்
கொலை செய்த தனயன் மாபாதகம் தனைத் தீர்த்தமை பாடுவாம் - (இனி
அக்கடவுள்) பெற்ற தந்தையைக் கொலை புரிந்த புதல்வனது மாபாதகத்தை
நீக்கிய திருவிளையாடலைக் கூறுவாம்.
நலன்
- நன்மையாகிய திருவிளையாடல். தந்தையாக எண்ணப்படுவார்
பிறருமுளராகலின் 'நல்கியதாதை' என்றார். (1)
விரைசெய் மாலைக் குலோத்துங்க மீனவன்
திரைசெய் நீர்நிலஞ் செங்கோல் செலத்தனி
அரசு செய்யுமந் நாளி லவந்தியென்
றுரைசெய் மாநக ரானொரு பூசுரன். |
(இ
- ள்.) விரைசெய்ய மாலைக் குலோத்துங்க மீனவன் - மணம்
வீசும் மாலையையணிந்த குலோத்துங்க பாண்டியன், திரைசெய் நீர் நிலம்
செங்கோல் செல - அலைகள் வீசும் கடல் சூழ்ந்த புவி முழுதும் தனது
செங்கோல் செல்ல, தனி அரசு செய்யும் அந்நாளில் - பொதுக் கடிந்து
ஆட்சி புரியும் அக்காலத்தில், ஒரு பூசுரன் அவந்தி என்று உரைசெய்மா
நகரான் - ஒரு வேதியன் அவந்தி என்று கூறப்படும் பெரிய நகரத்தில்
இருந்தனன்.
மீனவன்
- மீனக்கொடியை யுடையவன்; பாண்டியன். உலக முழுதும்
இனிதாகச் செங்கோல் நடக்க என்பார் 'திரைசெய் நீர் நிலஞ் செங்கோல்
செல' என்றார். நகரான் என்பதனை நகரத்திருப்பானாயினன் என விரிக்க. (2)
வெருவுங் காய்சின மாறிய வேதியன்
மருவுங் காதன் மனையெனும் பேரினாள்
திருவுங் காமனற்* றேவியு மண்புனை
உருவுங் காமுறு மொப்பில் வனப்பினாள். |
(பா
- ம்.) * காமன்றன் றேவியும்.
|